இமான் இசையில் அசோக்செல்வன் நடித்த ‘வேழம்’ பட பாடல்கள் வெளியானது

இமான் இசையில் அசோக்செல்வன் நடித்த ‘வேழம்’ பட பாடல்கள் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேழம்” திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இமான் “ மாறும் உறவே” பாடலின் வீடியோவை இன்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

வித்தியாசமான கதைக்களங்களில் அசத்தும் நடிகர் அசோக் செல்வன், தனது சிறப்பான நடிப்பினால், பாக்ஸ் ஆபிஸில் ஒரு முக்கியமான நட்சத்திரமாக மாறியுள்ளார்.

தொடர்ந்து நம்பிக்கைக்குரிய நல்ல படைப்புகளை வழங்கி வருவதால், அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘வேழம்’ மீதான எதிர்பார்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளது,

குறிப்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்குகிறார், K4 Kreations சார்பில் கேசவன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் ஜூன் 24, 2022 அன்று உலகம் முழுவதும் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு எஃப்எம் நிலையத்தில் நடைபெற்றது.

மேலும் இசையமைப்பாளர் D இமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாறும் உறவே’ என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.

படத்தின் தொழில்நுட்ப குழு:
சக்தி அரவிந்த்- ஒளிப்பதிவு, A.K. பிரசாத் – எடிட்டர், சுகுமார் R – கலை இயக்குனர், தினேஷ் சுப்புராயன்- சண்டை பயிற்சி, M.சரவணக்குமார் – சவுண்ட் மிக்ஸிங், சுரேஷ் சந்திரா ரேகா D’ One – மக்கள் தொடர்பு.

ராஜ கிருஷ்ணமூர்த்தி(கிட்டி), சங்கிலி முருகன், மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே, உடன் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

SP Cinemas இப்படத்தினை உலகமெங்கிலும் தியேட்டரில் வெளியிடுகின்றனர். படம் ஜூன் 24, 2022 அன்று தியேட்டரில் வெளியாகிறது.

Ashok Selvan starrer ‘Velam’ audio released

கிரேஸ் குறையாத ‘சிவாஜி தி பாஸ்’..; 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் ரஜினி டீம்

கிரேஸ் குறையாத ‘சிவாஜி தி பாஸ்’..; 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் ரஜினி டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2007 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி த பாஸ்.

ஷங்கர் இயக்கிய இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க முக்கிய வேடத்தில் விவேக் சுமன் மணிவண்ணன் வடிவுக்கரசி சாலமன் பாப்பையா பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கேவி. ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

சிவாஜி பட ஸ்டைலில் சிவகார்த்திகேயன் போடும் ‘சிங்க பாதை’..?

இந்தப் படத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் மொட்டை அடித்து நடித்து இருந்தார். அந்த MOTTAI BOSS கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது.

ஏவிஎம் ரஜினிகாந்த் ஷங்கர் ஏ ஆர் ரகுமான் ஆகிய பிரம்மாண்ட கூட்டணியில் உருவான இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தின் பாடல்களும் ஆக்சன் காட்சிகளும் பெரிய அளவில் பேசப்பட்டது. ‘அதிரடிக்காரன் மச்சான் மச்சான்…’ பல்லேலக்கா பல்லேலக்கா… சஹானா சாரல் தூவுதோ… ஆகிய பாடல்கள் எவர் கிரீன் ஹிட் சாங் வரிசையில் இன்றும் உள்ளன.

இந்த சிவாஜி படத்திற்கு முன்பு வெளியான படங்கள் மிகவும் குறைந்த அளவில் தியேட்டர்களில் மட்டூமே வெளியானது.

ஆனால் சிவாஜி படத்திற்கு தான் முதன்முதலாக அதிகப்படியான எண்ணிக்கையில் தியேட்டர்களில் படம் வெளியானது.

தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற முக்கியமான படங்களில் ஒன்று என்று சிவாஜி-யை கூறினால் அது மிகையல்ல.

இந்த படத்தின் வியாபார வெற்றியை பார்த்து தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரிப்பு துறையில் இறங்கியது. அப்போதுதான் ரஜினி ஷங்கரை வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினார்.

இப்படி பல வியாபார நோக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ரஜினி நடித்த சிவாஜி படம் தான்.

இந்த நிலையில் இன்று ஜூன் 15ஆம் தேதி 15வது வருடத்தை கொண்டாடுகிறது சிவாஜி.

ரஜினியுடன் நடித்த அங்கவை.. சங்கவை.;. அடடா.. ரெண்டு பேரும் இம்புட்டு சிகப்பழகா..?!

இதனை முன்னிட்டு ரஜினியை தன் மகள் அதிதி (விருமன் பட நாயகி) உடன் சந்தித்தார் இயக்குனர் ஷங்கர்.

மேலும் ஏவிஎம் நிறுவனமும் தன் சமூக வலைத்தள பக்கங்களில் சிவாஜி படம் குறித்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். ரகுமானும் சிவாஜி படத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.

ஆக 15 வருடத்திற்கு பிறகும் சிவாஜி படத்திற்கு உள்ள கிரேஸ் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி தி பாஸ்

சிவாஜி தி பாஸ்

Rajini team celebrates 15 years of Sivaji

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் இதற்கு பின் வெளியான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மாறன்’ உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை தழுவியது.

எனவே ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் தனுஷ்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது..

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் மற்றும் 3 ஹீரோயின்ஸ் கேரக்டர் அப்டேட்ஸ்

முதல் கட்டமாக அனுஷா என்ற கேரக்டரில் ராஷிகண்ணா நடித்து வருவதாக வீடியோ வெளியிட்டனர். இவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஒவ்வொரு வீடியோவாக அறிவித்தனர்.

இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் ஆகஸ்ட் 18ல் தியேட்டர்களில் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Official release date of Dhanush starrer ‘Tiruchitrambalam’ is here

பாலக்காடு பார்டரில் பட்டைய கிளப்பும் ‘ஹரா’ படக்குழுவினர்

பாலக்காடு பார்டரில் பட்டைய கிளப்பும் ‘ஹரா’ படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ண்ண்……டட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நாயகனாக நடித்து மோகன் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கும் படம் ’ஹரா’.

விஜய்ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பூ நடித்து வருகிறார்.

முக்கிய வேடங்களில் யோகிபாபு, மனோபாலா, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், ஜெயக்குமார், ரயில் ரவி, ஸ்வாதி, பிருந்தா, ராமராஜன், அர்ஜூன், மனோ, கபிலன் சுகுமார், ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனோ & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்து வருகிறார். லியாண்டர் லீ மார்ட்டி இசையமைத்து வருகிறார்.

பாமரன் முதல் அனைவரும் சட்டத் திட்டங்களை அறிந்திருக்க வேண்டும் என்பதை மையக்கருவாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

மேலும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு சாமானிய அப்பாவின் கோபமும் இப்படத்தின் மையப் புள்ளி.

கடந்த மே 10ல் மோகன் பிறந்தநாளில் இப்பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. இதில் காவி கலர் கொடி.. சாருஹாசனின் ‘பால்தாக்ரே’ தோற்றம் ஆகியவை பெரிதாக பேசப்படுகிறது.

மேலும் ’ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

“பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது ஸ்பெயின் நாட்டில் அமலில் உள்ளதை போல தமிழகத்திலும் மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

’ஹரா’ பட சூட்டிங்கில் மோகன் தனது மகளுக்காக மாதவிடாய் நாட்களில் கல்லூரியில் விடுமுறை கேட்கும் காட்சியை படமாக்கினார் விஜய்ஸ்ரீ.

இந்த நிலையில் ‘ஹரா’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூர் & பாலக்காடு பார்டர்களில் படக்குழு நடத்தி வருகிறது.

கடந்த 3 வாரங்களாக இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

இதுவரை நடிகர் மோகனை பல படங்களில் காதல் காட்சிகள் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளில் மட்டுமே பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலாக நடித்து வருகிறார் மோகன்.

பாலக்காடு கோவை பகுதிகளில் ஓடும் லாரியில் ஏறி துப்பாக்கியைக் காட்டி லாரி டிரைவரை மிரட்டுவது போல காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதுவரை நாம் பார்க்காத மோகனை காட்ட இயக்குனர் விஜய்ஸ்ரீ முடிவெடுத்துள்ளார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

ரசிகர்களுக்கும் அதுபோல காட்சிகள் தானே தேவை.

ஆக்ஷனில் அதிரடி காட்டும் #ஹரா #மோகன் பாலக்காடு ரோட்டில் அதிரடியாக எதிரிகளை அடித்து துரத்தும் காட்சி..

*கூடுதல் தகவல்..*

ஒவ்வொரு படமும் திரையிடப்படும் போது DISCLAIMER ல்… “புகை பிடித்தல் உடலுக்கு தீங்கு… மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு..” என்ற வாசகங்கள் இடம்பெறும்.

அத்துடன் “பெண்களின் அனுமதியின்றி அவர்களை தொடுவது குற்றம்..” என தான் முதன்முதலாக இயக்கிய ‘தாதா 87’ படத்தில் வாசகம் இடம் பெற செய்தவர் விஜய்ஸ்ரீ என்பதும் கவனிக்கத்தக்கது.

Haraa movie shoot happening at palakkad

FINGER TIP-ல் பிரசன்னாவுடன் இணைந்த ரெஜினா அபர்ணா திவ்யா

FINGER TIP-ல் பிரசன்னாவுடன் இணைந்த ரெஜினா அபர்ணா திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின் செய்தியாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.

ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ வை தற்போது அறிவித்துள்ளது.

இந்த தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர், சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

சிஜு பிரபாகரன், ஜீ5 கிளஸ்டர் ஹெட் கூறியதாவது..

சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தை பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். தற்போதைய டிஜிட்டல் உலகில் நடக்கும் சம்பவங்களை சுற்றியே இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நடித்துள்ள நடிகர் கண்ணா ரவி சிறப்பான நடிப்பை அளித்துள்ளார். இந்த தொடரின் இறுதி பதிப்பை பார்த்த பிறகு நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். தொடர் மிக நன்றாக வந்துள்ளது. நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்.

ஜீ5 தளம் சார்பில் கௌசிக் நரசிம்மன் கூறியதாவது..

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவு நல்லதோ, அதே அளவு ஆபத்தும் அதில் இருக்கிறது என்று கூறுவதே இந்த தொடர். அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். இயக்குநர் சிறப்பான தொடரை கொடுத்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

தயாரிப்பாளர் அருண் கூறியதாவது…

இயக்குனர் சிவாகர் தான், நான் தயாரிப்பாளராக மாற காரணம். இந்த தொடரில் பணிபுரிந்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்ப குழுவின் முழு முயற்சியில் தான் இந்த தொடர் உருவானது. அனைவரும் உங்களது ஆதரவை தர வேண்டும்.

இயக்குனர் சிவாகர் ஶ்ரீனிவாசன் கூறியாதவது..

கொரோனா தடங்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் முடித்துள்ளோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் காரணம். படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அவர்களது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜீ5 சார்பில் வந்த பல பரிந்துரைகள் இந்த தொடரை செதுக்கியது. இந்த தொடரில் கதாபாத்திரங்களின் வசனமும், காட்சிகளும் சிறப்பாக அமைய காரணம் எழுத்தாளர் ரோஹித். இந்த தொடர் ஒரு தொழில்நுட்ப திரில்லர், நாம் தினமும் காண்பதை திரையில் காட்ட முயற்சித்து இருக்கிறோம். உங்களுக்கு இந்த தொடர் பிடிக்கும் என நம்புகிறேன், உங்கள் ஆதரவு தேவை. நன்றி.

நடிகர் பிரசன்னா கூறியதாவது..

ஃபிங்கர் டிப் முதல் சீசன், மிகவும் ஆழமாகவும், ஈர்க்கும் வகையில் இருந்தது. அந்த தொடரின் இயக்குனர் என்னை அணுகி, இந்த கதையை சொன்ன போது எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிந்தது. அனைவராலும் மொபைல் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.

இன்றைக்கு தொழில்நுட்பம் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த தொடர். இந்த தொடரின் வெளியீட்டில் நான் ஆர்வமாய் இருக்கிறேன். இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறியதாவது…

இந்த கதை நாம் தினமும் கடந்து செல்லும் விஷயத்தை திரையில் பார்ப்பது போல் இருக்கும். ஒரு விஷயத்தை எல்லோருடைய பார்வையில் பார்ப்பது போல் இருக்கும். இந்த சீரியலில் நான் நடிகையாகவே நடித்துள்ளேன்.

நடிகைக்கு இருக்கும் சிக்கல்களை காட்டும் கதாபாத்திரமாக அது இருக்கும். பல சிக்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் எடுத்துள்ளோம். நான் 15 வருடங்கள் கழித்து பிரசன்னா உடன் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இது போன்ற கதைகளை எடுத்து, அதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சிக்கும் ஜீ5-க்கு நன்றி.

நடிகை அபர்ணா பாலமுரளி கூறியதாவது…

ஃபிங்கர் டிப் தொடருக்கு என்னை அழைத்த போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். பல நிஜ சம்பவங்களை திரையில் பார்ப்பது போல் இந்த தொடர் இருக்கும். இது எனது முதல் வலைத்தொடர். இயக்குநர் இந்த கதையை சிறப்பாக சொல்லியுள்ளார்.

இந்த கதை எல்லோரும் சம்பந்தப்படுத்தி கொள்ளும் படியான ஒரு கதையாக இருக்கும். இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.

திரைக்கதை எழுத்தாளர் ரோஹித் கூறியதாவது…

இந்த தொடரின் முதல் சீசன் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் இரண்டாவது பாகத்தை நான் எழுதுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த தொடரில் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நீங்கள் இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

இசையமைப்பாளர் தீனதயாளன் கூறியதாவது..

இந்த தொடரில் இசையமைப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குனருக்கு நன்றி. தயாரிப்பாளர் அருண் மற்றும் ஜார்ஜ் என்னை நம்பியதற்கு நன்றி.

இதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். தொடரைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகர் வினோத் கிஷன் கூறியதாவது…

இயக்குனர் சிவாகர் உடன் பணிபுரிவது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம், எல்லோரும் நிஜ வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். அது கண்டிப்பாக அதிர்வலையை ஏற்படுத்தும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை. நன்றி.

நடிகர் கண்ணா ரவி கூறியதாவது…

என்னை நம்பிய இயக்குனருக்கு நன்றி. இந்த கதாபாத்திரம் எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் உடனும் நான் பணியாற்ற விரும்பினேன், இந்த தொடரில் எல்லோருடன் சேர்ந்து பயணித்தது மகிழ்ச்சி. படக்குழுவின் முழு ஈடுபாடு இல்லாமல் இந்த தொடரை முடித்திருக்க முடியாது. எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி.

நடிகை திவ்யா துரைசாமி கூறியதாவது…

இந்த தொடரில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடரின் இயக்குனர் சிவாகர் உடன் பயணித்தது பெரிய அனுபவமாக இருந்தது. ஜீ5-யில் சுவாரஸ்யமிக்க பல தொடர்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த தொடரும் இருக்கும். நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தர வேண்டும்.

‘ஃபிங்கர்டிப் சீசன் 2′ தொடர் ஜீ5 தளத்தில் ஜூன் 17, 2022 அன்று வெளியாகிறது.

Regina Aparna Divya joins Prasanna in FINGER TIP

நான் ஒரு சாதாரண ஆள்.. எனக்காக இவ்ளோ செய்றீங்க..; டிஆர் உருக்கமான பேச்சு

நான் ஒரு சாதாரண ஆள்.. எனக்காக இவ்ளோ செய்றீங்க..; டிஆர் உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…:

“நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், என்னைப் பற்றிய, என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி.

என் இன்றைய நிலைக்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன். என் கடவுள் நம்பிக்கைதான்.

நான் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். நான் எதையுமே வாழ்க்கையில் மறைத்தவனே கிடையாது.

இப்போதுதான் விமான நிலையம் வந்தேன், அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டதாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. நான் ஒரு சாதாரண நடிகன், கலைஞன், லட்சிய திமுக என்ற சிறிய கட்சியை நடத்தக்கூடிய சாதாரண ஒரு ஆள்.

டி ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு

என்மீது பாசம் வைத்து, ஆதரவு காட்டி, பரிவோடு நான் நல்லாயிருக்க வேண்டும் என்று பலர் செய்த பிரார்த்தனைகள், ஆராதனைகளால்தான் இன்று நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய கட்சிக்காரர்கள், அபிமானிகள், என்னுடைய ரசிகர்கள், மகன் சிம்புவின் ரசிகர்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்கள், போனில் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தவர்கள், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் என்னை சந்தித்துவிட்டுச் சென்றார், இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு டி ராஜேந்தர் பேசினார்.

I am a normal person ; TR melting speech before going to treatment

More Articles
Follows