மனைவியை பிரிந்த இமான் – தனுஷ் வரிசையில் இயக்குனர் பாலா

மனைவியை பிரிந்த இமான் – தனுஷ் வரிசையில் இயக்குனர் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர் இயக்குனர் பாலா.

சேது, நான் கடவுள், நந்தா, பிதாமகன், அவன் இவன் உள்ளிட்ட பல படைப்புகள் இவரது பெயரை இன்றளவும் சொல்லும்.

இவரது பட நாயர்கள் எப்படி காட்சிகளில் இருப்பார்களோ..? அப்படியே பாடல்களில் இருப்பார்கள். (ஆனால் மற்ற இயக்குனர்களின் பட பாடல்களில் நாயகன் நாயகி வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார்கள்.)

அப்படி ஒரு யதார்த்த வாழ்வியல் படைப்புகளை கொடுப்பத்தில் சிறந்தவர் இயக்குனர் பாலா.

நடிகர் விக்ரமுக்கு இரண்டு தேசிய விருதுகளை பெற்று தந்து இருக்கிறார் பாலா. மேலும் சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் இவர்தான் என்றால் அது மிகையல்ல.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் தேனியை சேர்ந்த முத்துமலர் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் பாலாவின் திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது.

இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்ட நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தங்கள் மனைவியை பிரிவதாக நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Bala and his wife Muthumalar get divorced after 18 years of togetherness

ரிஸ்க் எடுத்த அஜித்தின் காயத்துக்கு மருந்து போடும் டாக்டர்

ரிஸ்க் எடுத்த அஜித்தின் காயத்துக்கு மருந்து போடும் டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது பல நடிகர்கள் டூப் கலைஞர்களையே பயன்படுத்துவார்கள்.

ஆனால் ஒரு சிலர் நடிகர்கள் தாங்கள் அந்த காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பார்கள். அதில் முக்கியமானவர் நடிகர் அஜித்.

இவர் பலமுறை ரிஸ்க் எடுத்து அடிப்பட்டு சிகிச்சைக்காக தன் உடலில் ஆப்பரேசன் செய்துள்ளார்.

இந்த நிலையில் வலிமை படத்திலும் ஒரு விபத்து ஏற்பட்டது.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பைக் ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கும்போது அஜித் கீழே விழுந்த வீடியோ வைரலானது. ஆனால் அந்த காயங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு காட்சிகளை உடனடியாக முடித்தும் கொடுத்தார் அஜித்.

தற்போது அஜித்துக்கு ஒரு டாக்டர் காயத்திற்கு மருந்து போட்டுவிடும் புகைப்படம் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.

Ajith kumar’s doctor reveals he Was close to suffering paralysis, says the actor worries about his fans

பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்த ஜெய்.; ஏன் தெரியுமா.?

பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்த ஜெய்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார்.

ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார்.

அதோடு, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார் ஜெய்.

அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் விதமாக பெண்கள் தினத்தில் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய்.

திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப்புடவைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஜெய்.

அதிலும், அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத், சகோதரி சந்தியா அவர்களை அனுப்பி ஒவ்வொரு பெண் செய்தியாளர்களிடமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெய் இப்போது சுந்தர்.சி இயக்கி வரும் படத்திற்காக ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்த பட்டுப்புடவை வழங்கியது பற்றி ஜெய்யிடம் கேட்ட போது, “நம் குடும்பத்து சகோதரிகளில் ஒருவராக பார்க்கிறேன்.நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன்.அதனால் அவர்களுக்கு என் அன்பை, நன்றியை சொல்லும் வகையில் பட்டுப் புடவைகளை வழங்கினேன்.” என்றார்.

Actor Jai gifted silk Sarees to female journalists

துபாயில் சந்தித்த இசை ஸ்வரங்கள் இளையராஜா – ரஹ்மான்

துபாயில் சந்தித்த இசை ஸ்வரங்கள் இளையராஜா – ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இளையராஜா.

இவர் தற்போது ‘துபாய் எக்ஸ்போ 2020’ என்ற இசை நிகழ்ச்சியை துபாய் நாட்டில் நடத்தியுள்ளார். இந்த கச்சேரி மார்ச் 5 பிரம்மாண்டமாக நடைபெற்றது.

துபாயே மிரளும் அளவுக்கு இந்த கச்சேரி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இளையராஜாவின் இசையை கேட்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதாம்.

இந்நிலையில், துபாய் நாட்டில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார் இளையராஜா.

அவரை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டூடியோவை அவருக்கு சுற்றி காண்பித்துள்ளார். அவருடன் எடுத்த போட்டோவை, இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
‘மேஸ்ட்ரோவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.

Ilayaraja made a surprise visit to Rahmans studio at Dubai

2K கிட்ஸின் காதலை சொல்லும் கவின் – அபர்ணாதாஸ் ஜோடி

2K கிட்ஸின் காதலை சொல்லும் கவின் – அபர்ணாதாஸ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒலிம்பிக்ஸ் மூவீஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்த படத்தை ராஜேஷ். எம் உதவியாளர் கணேஷ் பாபு இயக்குகிறார்.

இதில் கவின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் ஜோடியாகிறார். இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

‘முதல் நீ முடிவும் நீ’ படபுகழ் ஹரிஷ், ‘வாழ்’ படபுகழ் பிரதீப் ஆண்டனி ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.

எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

இந்த படம் 2கே கிட்ஸின் காதலை மையப்படுத்தி உருவாகி உள்ளதாம்.

சென்னை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

Kavin and Abarnadoss starring new movie updates

நட்ராஜ் – பூனம்பஜ்வா ஜோடி.; ‘ஜெய்பீம்’ பட சர்ச்சை பெயரே தலைப்பானது

நட்ராஜ் – பூனம்பஜ்வா ஜோடி.; ‘ஜெய்பீம்’ பட சர்ச்சை பெயரே தலைப்பானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குருமூர்த்தி’.

இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு ச்சோதனை ஏற்படுகிறது குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது.

இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் விதமாக-இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் காமெடி, சென்டிமென்ட் , ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக தயாரித்திருக்கிறார்கள்.

இதற்கான அனைத்துக் கட்ட படபிடிப்புகளும். நீலகிரி ‘மாவட்டம் பாண்டிச்சேரி, கேரளாவைச் சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளிலும்நடந்து முடிவடைந்திருக்கிறது.

ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் பட பிடிப்பு ஒரேஷெட் யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு முடிவடைந்திருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாட்டோடு இந்தப்படத்திறகான இறுதி க்கட்ட (போஸ்ட் புரொடக்ஷன் ) வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது.

இதில்: நடராஜ்(எ) நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை : ஒளிப்பதிவு டைரக்டர் தேவராஜ் கவனித்திருக்கிறார். இசையை சத்ய தேவ் உதய சங்கர், அமைத்திருக்கிறார் .பாடல்கள்:மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன்,

எடிட்டிங் : S.N. பாசில், கலை : தாகூர், நடனம்: ராதிகா, சண்டை.:. பயர் கார்த்திக், ஸ்டில்ஸ்: மதன், மக்கள் தொடர்பு:பெருதுளசி பழனிவேல், வசனம்: கீர்த்தி வாசன்,

தயாரிப்பு:.சிவசலபதி , சாய் சரவணன்,
கதை, திரைக்கதை, டைரக்ஷன் கே.பி.தனசேகர்.

Natraj and Poonam Bajwa starring Gurumoorthy movie updates

More Articles
Follows