தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் எப்பொழுதும் இரண்டு வகையான கதைகள் உண்டு. ஒன்று வித்தியாசமாக முற்றிலும் புதிய திரைக்கதையாக இருக்கும். அல்லது நாம் பார்த்து பழகிப் போன கதையை அருமையான திரைக்கதையாக கொடுத்திருப்பார்கள்.
இதில் இயக்குநர் ஹரிஹரன் ராம் நமக்கு பழகிய காதலை தன்னுடைய பாணியில் ஓவியமாக படைத்திருக்கிறார்.
கதைக்களம்…
ரியோ ராஜ் நாயகன். காதலியாக மாளவிகா மனோஜ்..
‘ஜோ’ படத்தின் ஆரம்பத்தில் பள்ளிக்கூட காட்சிகள் கலாட்டா மோதல் என 10 நிமிடத்தில் முடிந்து விடுகிறது. அந்த காட்சி படத்தின் முக்கியமானது என்பதால் அதை கண்டிப்பாக மிஸ் செய்து விடாதீர்கள்.
அதன் பிறகு கல்லூரியில் படிக்கிறார் நாயகன் ரியோ ராஜ். இவர்தான் ஜோ. அதே கல்லூரியில் அதே வகுப்பில் படிக்கும் மலையாள பெண்குட்டி மாளவிகா. நாயகியை பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார்.
ஒரு கட்டத்தில் மாளவிகாவும் காதலிக்க ஜாலியாக ரொமான்டிக்காக கல்லூரியை முடித்த பின்னர் மாளவிகா தன் சொந்த ஊர் ஆலப்புழாவுக்கு செல்கிறார். ரியோ தமிழ்நாட்டில் வசிக்கிறார்.
அதன் பின்னர் காதலர்களிடையே சின்ன சின்ன ஈகோ மோதல் வெடிக்கிறது. ஒரு நாள் தன் வீட்டிற்கு நாயகனை வர சொல்கிறார் மாளவிகா. உன்னுடைய ஈகோவை தூக்கி வைத்து விட்டு எனக்காக வா என்கிறார்.
அந்த நேரத்தில் ஒரு பிரச்சனை எழவே காதலர்களிடையே விரிசல் ஆரம்பம். அதன் பின்னர் என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? மனைவி எப்படி வந்தார்? அவருக்கு இவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
JOE – RIO RAJ
SUCHI – MALAVIKA MANOJ
SHRUTHI – BHAVYA TRIKHA
SECURITY – CHARLIE
SANTHA – ANBUTHASAN
PRAVEEN – AEGAN
VINOTH – VJ RAKESH
JOE APPA – ELANGO KUMANAN
SUCHI APPA – JAYAKUMAR
TAMILARASAN – M J SHRIRAM
‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ படத்தில் பார்த்த ரியோ ‘ஜோ’ படத்தில் பார்த்த ‘ரியோ’ என ஏகப்பட்ட வித்தியாசங்கள். நடிப்பில் அத்தனை மெச்சூரிட்டியை காட்டி இருக்கிறார். ‘ஜோ’ கேரக்டரை ஜொலிக்க வைத்துள்ளார் ரியோ.
காதலை சொல்ல தயங்கும் இடத்தில் அவரின் தொண்டைக்குழி கூட நடித்திருக்கிறது. ரியோ தன் கண்களை குளமாக்கி நம்முடைய இதய துடிப்பை லப்டப்பை எகிற செய்திருக்கிறார்.
மலையாள பெண் குட்டியாக நிஜ மலையாளி மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். கண்களிலும் உதடுகளிலும் தன்னுடைய பாதி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். திடீரென லவ் யூ சொல்வது திடீரென வெறுத்து ஒதுங்குவது என பெண்களின் தவிப்பை ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதே சமயம் தந்தைக்காக காதலனை எதிர்க்கும் சமயத்தில் அச்சு அசல் சுயநல பெண்ணாகவே மாறி இருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு வரும் பவ்யா கொழு கொழு பொம்மை ஆக நம்மை ஈர்க்கிறார். ஆரம்பத்தில் இவரது கேரக்டரை நாம் வெறுத்தாலும் மெல்ல மெல்ல பவ்யா மீதும் நமக்கு பாச மழை வழிந்து விடும். அதற்காகவே கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெரிய திருப்புமுறையை வைத்திருக்கிறார் இயக்குனர்.
இவர்களுடன் அருமையான செக்யூரிட்டி வேடத்தில் நடித்துள்ளார் சார்லி. தன்னுடைய அனுபவ அடிப்பான் சபாஷ் போட வைக்கிறார்.
ரியோவின் நண்பராக வரும் அன்பு தாசன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கலக்கி இருந்தார். இதில் நண்பனின் காதலுக்காக அவர் ஒவ்வொன்றையும் செய்து விட்டு அடி வாங்குவது ரசிக்க வைக்கிறது.
ரியோவுக்கு தூது போகும் நண்பராக நடித்தவரும் சின்ன சின்ன வசனங்களில் மூலம் நம்மை கவர்கிறார்.
டெக்னீசியன்கள்…
ART DIRECTOR
ABR
EDITOR
VARUN K.G
CINEMATOGRAPHY
RAHUL KG VIGNESH
MUSIC
SIDDHU KUMAR
PRODUCED BY
DR.D.ARULANANDHU
MATHEWO ARULANANDHU
WRITTEN & DIRECTED BY
HARIHARAN RAM S
ஹரிஹரன் ராம் அறிமுக இயக்குனர் என்றாலும் அனுபவம் வாய்ந்த இயக்குனரை போல ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார்.
அருமையான திரைக்கதையை அமைத்து அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு காதல் விருந்து படைத்துள்ளார்… அண்மைக்காலமாக போதை கஞ்சா குடி ஆக்சன் வன்முறை என தமிழ் ரசிகர்கள் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் காதல் தென்றலை வீசி இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.
அவருக்கு உறுதுணையாக இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சித்து குமார்.. ரியோ – மாளவிகாவின் டூயட் பாடல் இனி காதலர்களின் ரிங்டோன் ஆக மாறும்.
ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணியை உணர்ந்து செய்துள்ளனர்.
ஆட்டோகிராப், பிரேமம், வாரணம் ஆயிரம், 96, ராஜாராணி என பல படங்களில் நாம் பார்த்த காதல் தான் என்றாலும் இதில் தன் திரைக்கதையால் சுவாரஸ்யப்படுத்தி காதலர்களையும் கவர்ந்து இருக்கிறார் இயக்குனர்.
எனவே இந்த ஜோ… ஜொலிக்கும் காதல்..
joe movie review and rating in tamil