கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நயன்தாரா, யோகிபாபு, சரண்யா, அறந்தாங்கி நிஷா, விஜே ஜாக்லின், நவீன் குமார் மற்றும் பலர்.
இயக்கம் – நெல்சன்
ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன்
எடிட்டிங் – நிர்மல்
இசை – அனிருத்
தயாரிப்பு : லைகா
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு நிகராக நயன்தாராவின் படத்திற்கும் அதிகாலை காட்சி வைத்துள்ளனர்.

அப்போதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது.

கதைக்களம்…

மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் நயன்தாரா. மிகவும் கஷ்டப்படுகிறார். இந்த நிலையில் அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது.

அவரை குணப்படுத்த பணம் தேவைப்படுவது இயற்கைத்தானே. எனவே சினிமாவில் என்ன செய்வார்கள்.?

எதாவது குறுக்கு வழியில் செல்வார்கள்தானே. அதே தான் இங்கும் நடக்கிறது.

எனவே ஒரு போதைப்பொருள் கும்பலிடம் இவருக்கு தொடர்பு கிடைக்கிறது.

பொதுவாக பெண்கள் கடத்தினால் அதிக சந்தேகம் வராது என்பதால் அந்த போதை பொருளை கடத்த நயன்தாராவை நாடுகின்றனர்.

இதனால் பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறார் கோகிலா.

அதன் பின்னர் என்ன செய்தார்? பிரச்சினைகளை எப்படி முறியடிக்கின்றார்? அம்மாவை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நானும் ரௌடிதான் காதம்பரி கேரக்டர், அறம் Collector கேரக்டர், டோரா கேரக்டர் உள்ளிட்ட வரிசையில் இப்படம் நயன்தாராவுக்கு சேரும். இவரை நம்பியே கதையை நகர்த்தியுள்ளார் நெல்சன்.

கோகிலாவும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்துவிடுகிறார். டாப் ஹீரோக்களுடன் கெமிஸ்டரி எப்படி ஒர்க் அவுட் ஆனதோ? அதுபோல் யோகிபாபு உடனும் பிஸிக்ஸ் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நயன்தாராவும் யோகிபாபுவும் தான் படமே. யோகிபாபு இனி ஹீரோ கேரக்டர் கொடுத்தாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை.

‘சார் நீங்க அவன சுட்டா தான் இங்க இருந்து போவேன், கொலை பார்க்க பயமா இருக்கு நான் திரும்பி காதை மூடிக்கொள்கின்றேன்’ என சொல்லும் இடமெல்லாம் நயன்தாராவுக்கு கைத்தட்டல் அள்ளுகிறது.

நயன்தாரா தங்கை ஜாக்குலீன், யோகிபாபு கடையில் வேலை பார்க்கும் கண்ணாடி போட்ட பையன், மொட்டை ராஜேந்திரன் அனைவரும் ரசிக்க வைக்கின்றனர்.

டோனி கேரக்டரும் படத்திற்கு கைகொடுத்துள்ளது. ஜாக்லினை காதலிக்கும் அந்த இளைஞர் ஏற்கனவே மீசைய முறுக்கு படத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்துடன் ஒன்ற வைக்க சிவகுமாரின் ஒளிப்பதிவு உதவியுள்ளது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு வர முக்கிய காரணம் அனிருத் தான்.

பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே என்றாலும் சில நேரம் டயலாக் புரியாமல் செய்து விடுகிறது.

எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும், மேல் உள்ள 10 மாடிக்கு போக 8 வருஷம் ஆகும், பச்சையப்பாவில் படித்தாலும் பச்சை பச்சையாக பேசுவேன் உள்ளிட்ட டயலாக்குகள் அப்ளாஸ்க்கு கேரண்ட்டி.

முதல் பாதி மற்றும் இடைவேளையில் ஸ்கோர் செய்யும் நெல்சன் க்ளைமாக்ஸில் சொதப்பி இருக்கிறார். க்ளைமாக்ஸ் அழுத்தமாக இருந்தால் கோலமாவு கோகிலா நன்றாகவே ஸ்கோர் செய்துவிடுவார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்து ஜெட் வேகத்தில் கொண்டு போகாமல் ஜவ்வென இழுத்து விட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா… Just Go and Enjoy Don’t Expect more

விஸ்வரூபம் 2 விமர்சனம்

விஸ்வரூபம் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், வகீதா ரகுமான், ரகுல் போஸ், தீபக் ஜேத்தி, ஆனந்த் மகாதேவன் மற்றும் பலர்.
இயக்கம் – கமல்ஹாசன்
ஒளிப்பதிவு – சானு வர்கீஸ்
எடிட்டிங் – மகேஷ் நாராயணன், விஜய் சங்கர்
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு : கமல்ஹாசன் மற்றும் ஆஸ்கர் பிலிம்ஸ்
பிஆர்ஓ : டைமண்ட் பாபு

கதைக்களம்…

இந்த கதைக்கு உள்ளே சென்று அவர்கள் சொன்னப்படி சொன்னால் நிச்சயம் குழம்பித்தான் போவீர்கள். எனவே புரிகிற மாதிரி சொல்கிறேன்.

உளவுத்துறையான ‘ரா’ என்ற அமைப்பின் அதிகாரிகளான கமல்ஹாசன், சேகர் கபூர், ஆண்ட்ரியா ஆகியோர் அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய உமர் என்ற தீவிரவாதியை தேடி செல்கின்றன.

இவர்களுடன் கமலின் மனைவி பூஜாகுமாரும் வருகிறார். ஒரே சமயத்தில் மனைவி, சைட் அடிக்கும் காதலி என வருகிறார் உலகநாயகன்.

இந்த அதிகாரிகளை கொலை செய்ய பலவித முயற்சி நடக்கிறது.

அப்போது லண்டனில் உள்ள கடலில் செயற்கையாக பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுத்தி லண்டன் முழுவதையும் அழிக்க உமர் திட்டமிடுகிறார் என்பதை கமல் கண்டு பிடிக்கிறார்.

அதனை இந்த உளவாளிகள் எப்படி தடுக்கின்றனர். அதன்பின்னர் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

இதன் நடுவில்…

விசாம் (கமல்) பயிற்சி பெறும்போது ஆண்ட்ரியா எப்படி பயிற்சி பெறுகிறார்? என்பதை ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார்.

மேலும் விசாம் எப்படி அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பில் சேர்ந்தார் போன்ற காட்சிகளையும் காட்டியுள்ளனர்.

கேரக்டர்கள்…

இதுநாள் வரை கமல் ஒரு நடிகராகவே இருந்தார். தற்போதுதான் அரசியல்வாதியாக மாறிவிட்டாரே.

எனவே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சில தீம் பாடல் காட்சிகளையும் வைத்துவிட்டார். படத்தையே அப்படிதான் தொடங்குகிறார்.

கிடைத்த கேப்பில் எல்லாம் அரசியல் & ஆன்மிகம் பேசிவிட்டார். முஸ்லீம் இந்து, ஐயர் என அனைத்தையும் நல்லெண்ண அடிப்படையில் நாசூக்காக வாரியிருக்கிறார்.

படம் முழுக்க முகத்தில் பிளாஸ்த்ரி ஒட்டிக் கொண்டு வருகிறார். அதே சமயம் எல்லா காட்சியிலும் பக்கா க்ளீன் ஷேவ் செய்திருக்கிறார். அது எப்படி?

விசாமின் மனைவியான நிரூபமா. இவர் ஒரு நியூக்ளியர் ஆன்கோலாஜிஸ்ட் என்பதாக சொல்லியிருக்கிறார்.

கடலுக்கு அடியில் இருக்கும் வெடிகுண்டை செயல் இழக்க இவர் பாதுகாப்பான உபகரணங்களுடன் செல்கிறார்.

ஆனால் திடீரென கமல் குதிக்கிறார். கடலுக்கு அடியில் சண்டை போடுகிறார். இறுதியில் சீஸியும் கலந்து இருக்கும் அந்த வெடிகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடுகிறார். அது எப்படி????

கமலின் தாய் உயிருடன் இருக்கிறார் என்பதை காண்பிக்கிறார்கள். கூடவே வெகு நாட்களுக்கு பிறகு கமல் படத்தில் அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது ஆறுதல்.

கமலின் அம்மா வஹீதா ரஹ்மானுக்கு அல்ஸீமர் நோய் இருப்பதால் அவர் விசாம் தன் மகன் என்று கூட தெரியாமல் இருக்கிறார்.

தன் கணவருடன் தன் மகன் பாகிஸ்தான் சென்று விட்டதாக கூறுகிறார் அவர். ஆனால் எதற்கு அவர்கள் அங்கு சென்றார்கள் ஆகியவற்றை காண்பித்திருந்தால் ரசிகர்களுக்கு புரிந்து இருக்கும்.

ஆக்சனும் சரி. அழகும் சரி. ஆண்ட்ரியா செம கெத்து. கமலையும் பூஜாவையும் ஓட்டிக் கொண்டே இருப்பது ரசிக்க வைக்கிறது.

ஆக்சன் ஹீரோயினுக்கு இனி ஆண்ட்ரியாவுக்கு அப்பாய்மெண்ட் கொடுத்துடலாம்.

கமலுக்கு ஆண்ட்ரியாவுக்கு என்ன உறவு என குழம்பி போகிறார் பூஜாகுமார். சில சமயம் நமக்கும் அந்த குழப்பம் வந்துவிடுவது உண்மைதான்.

ஆனால் ரொமான்ஸில் கமலையும் இளைஞர்களையும் சூடேற்றிவிடுகிறார் ஒரு பாடல் காட்சியில் கமலை தாஜா செய்துவிடுகிறார் இந்த பூஜா.

சேகர் கபூரின் நடிப்பும், உமர் என்ற கேரக்டரில் நடித்துள்ள ராகுல் போஸ் நடிப்பும் கச்சிதம். கமலை வெறுக்கும் அரசு அதிகாரியாக ஆனந்த் மகாதேவன் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்து விடுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்களும் இதமான ராகம். இவன் யாரென்று தெரிகிறதா? என் தீம் சாங் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

ஜிப்ரான் இசையில் ‘நானாகிய நதிமூலமே’ பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. பின்னணி இசையிலும் ஹாலிவுட் தரத்தில் கொடுத்து கலக்கியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் மூலம் பாமர மக்களையும் சென்றடைகிறார் கமல். ஆனால் இதுபோல் படங்களால் கிராம மக்களிடம் இருந்து விலகியே நிற்கிறார். சி சென்டர்களில் படம் புரியாமல் நிறைய பேர் தவிப்பது நிச்சயம்.

பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமல். இதிலும் சின்ன சின்ன விஷயங்களை கையாண்டுள்ள விதம் அருமை. ஆனால் முதல் பாக அளவு இதில் விஷயம் இல்லை என்பதுதான் பெரிய வருத்தம்.

க்ளைமாக்ஸில் முறையான பைட் வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

விஸ்வரூபம் 2…. கமல் தொண்டர்களுக்கு

Vishwaroopam II review and rating

பியார் பிரேமா காதல் விமர்சனம்

பியார் பிரேமா காதல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண் (ஸ்ரீகுமார்), ரைசா (சிந்துஜா), ஆனந்த்பாபு (விவேக்), ரேகா (சுதா), ராஜா ராணி பாண்டியன் (கோபி), பஞ்சுசுப்பு, முனீஸ்காந்த் (தங்கராஜ்), தீப்ஸ் (சதீஷ்) மற்றும் பலர்.
இயக்கம் – இளன்
ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சார்யா
எடிட்டிங் – மணிக்குமரன் சங்கரா
இசை – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு : கே புரொடக்‌ஷ்ன்ஸ் S.N.ராஜராஜன், யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ் (பி) லிட்
பிஆர்ஓ : மௌனம் ரவி

கதைக்களம்…

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார் ஹரிஷ் கல்யாண். இவர் வீட்டிற்கு பயந்து வளர்ந்த பையன். தண்ணி, தம்பி என எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.

இவரது கம்பெனிக்கு அடுத்த வேலையில் பார்க்கும் ரைசாவை இவர் ஒரு தலையாக காதலிக்கிறார். சில நாட்களில் அவரும் ஹரிஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்க்கிறார்.

பின்னர் இருவரும் நெருக்கமாகி விடுகிறார்கள். ஒரு முறை அந்த நெருக்கம் செக்ஸ் வரை செல்கிறது.

உடனே தன் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துக் கொள்ளலாம் என கேட்கிறார். அதற்கு மறுக்கிறார் ரைசா.

செக்ஸ் ஓகே. லிவிங் டுகெதர் கூட ஓகே. ஆனால் காதல், திருமணம் எல்லாம் எனக்கு செட்டாகாது என சொல்லி விடுகிறார் ரைசா.

அதன்பின்னர் ஹரிஷ் என்ன செய்தார்? தன் காதலியை கரம் பிடித்தாரா? இல்ல கழட்டி விடப்பட்டாரா? ரைசா திருமணத்திற்கு மறுக்க என்ன காரணம்? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

அப்பாவி, அழகன் என அசத்தலாக வருகிறார் ஹரிஷ் கல்யாண். ரொமான்ஸ், கெஞ்சல் அதே சமயம் பொறுப்பான பிள்ளை என இன்றைய நவீன காதலனை போல் அசால்லடாக செய்துள்ளார். படத்தில் இவருக்கு ஆக்சன் மட்டும்தான் மிஸ்ஸிங்.

ரைசா.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் எப்படியோ ? ஆனால் இந்த காதல் படத்தில் பின்னி எடுத்துவிட்டார்.

திருமணம் குழந்தை வேண்டாம் என இவர் மறுப்பதற்கு சொல்லும் காரணங்கள் கொஞ்சம் ஓவரா இருந்தாலும் இன்றைய பெண்கள் தங்கள் கனவுகளை தொலைத்து நிற்கும் அவலம் தெரிகிறது.

ரைசாவின் கேரக்டர் தங்கள் லட்சியங்களை கலைத்துவிட்டு குடும்பத்திற்காக வாழும் பெண்களை நினைக்க தோன்றுகிறது. அது நம் சகோதரிகளாக அம்மாவாக கூட இருக்கலாம்.

தன் இளமை துடிப்பான நடிப்பால் நம் மனதை நைசா திருடிவிடுகிறார் ரைசா.

இவர்களுடன் சதீஷ் கேரக்டரில் வரும் தீப்ஸ், சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், ரேகா, ராஜா ராணி படப்புகழ் பாண்டியன் ஆகியோரின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ராஜா பட்டச்சார்யாவின் ஒளிப்பதிவில் இந்த காதல் செம கலர்புல்லாய் மாறிவிட்டது. எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

யுவன் இசையில் 12 பாடல்கள். நல்லவேளை பாதி பாடல்கள் படத்தின் காட்சி ஓட்டத்தோடு நகர்த்தியுள்ளார். எனவே காட்சியுடன் நம்மையும் ஒன்ற வைக்கிறது. ஓரிரு பாடல்களை ரீப்பிட் மோடில் கேட்கலாம்.

பின்னணி இசையில் வழக்கம்போல கவர்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆனந்த்பாபுவை ரைசாவின் அப்பாவாக கொண்டு வந்துள்ளார். அவர் ரொம்ப ப்ராடிக்கலாக இருக்கிறாராம். தன் மகள் ஒருவனுடன் படுத்துவிட்டேன் என்கிறார்.

லிவிங் டுகெதர் வாழ வேண்டும் என ஒரு மகள் அப்பாவிடம் எப்படி சொல்வாள்? அதை எப்படி ஈஸியாக எடுத்து கொள்ள முடியும். அப்பாக்களே.. இது ஐயோ அப்ப்ப்பா…

படத்தில் ட்விஸ்ட் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். க்ளைமாக்ஸில் திருமணத்தை வெறுப்பவராகவும் ஹரிஸையும் மேரேஜ் லைப் வேனும் என ரைசாவை மாற்றியிருப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால் ஜஸ்ட் லைக் தட் என சொல்லிவிட்டதுதான் ஒரு குறை.

இளன் இயக்கத்தில் நவீன காதலர்களுக்கான செம ஸ்பெஷல் படம் இது எனலாம்.

பியார் பிரேமா காதல்.. லவ் இல்லாத லைஃப் வேஸ்ட் சாரே

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெய்வந்த், ஐரா, ஆடுகளம் நரேன், யோகி தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் – யுரேகா
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இசை – விஜய் சங்கர்
தயாரிப்பு : வி.ஜி. ஜெய்வந்த்
பிஆர்ஓ : நிகில் முருகன்

கதைக்களம்…

ஒரு சேட் வட்டி தொழில் செய்கிறார். அவர் நிறுவனத்தின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அவரது ஊழியர்களின் வாகனங்கள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இது தங்களது எதிரி கம்பெனிகளின் சதியாக இருக்கும் என நினைக்கின்றனர்.

ஆனால் இதை ஒரு சைக்கோ ஒருவர்தான் செய்கிறார் என தெரிய வருகிறது. அந்த சைக்கோ யார்? எதற்காக குறிவைத்து ஒரு நிறுவனத்தின் வாகனங்களை எரிக்கிறார்? என்பது புரியாமல் போலீசை நாடுகின்றனர்.

இதை விசாரிக்க ஒரு காட்டுப்பய தான் வேண்டும் என்பதால் காட்டுத்தனமான போலீஸ் காளியை நாடுகிறார் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன்.

காளி என்ன செய்தார்? எப்படி கண்டு பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ்க்கு உரித்தான முரட்டுத்தனமாக இருக்கிறார் நாயகன் ஜெய்வந்த்.

அதிலும் காட்டுத்தனம் என்பதால் ரொம்பவே காட்டியிருக்கிறார். ஆனால் க்ளைமாக்சில் இவர் காட்டும் அந்த 15 நிமிட டயலாக் ரொம்பவே ஓவர்.

ஐரா படத்தின் நாயகி. அனாதை பெண்ணாக வந்து இறுதியில் கம்பீரம் காட்டியிருக்கிறார். படத்தில் இவருக்கான காட்சிகள் குறைவே.

வில்லன்களாக சி.வி.குமார், அபிஷேக், மூணாறு ரமேஷ்,மாரிமுத்து அனைவரும் தங்களது கேரக்டர்களில் கச்சிதம்.

ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லரை சமூக பொறுப்புடன் கொடுக்க என நினைத்திருக்கிறார் யுரேகா.

இதனால் தேவையில்லாத பாடல்களை இடையில் சொல்லி வெறுப்பேத்தி விட்டார்.

லோன் என்ற பெயரில் அப்பாவிகளிடம் வங்கிகள் செய்யும் மோசடியை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

அதற்காக சேட் லோன் என நீண்ட திரைக்கதையுடன் சொல்லி கொஞ்சம் குழப்பிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மீது இருக்கும் அன்பு, வடநாட்டினர் மீது இருக்கும் ஆதங்கம் ஆகியவற்றை வலுக்கட்டயமாக திணித்திருக்கிறார் டைரக்டர் யுரேகா.

சொல்லவேண்டிய விஷயத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். ஆனால் வலுவில்லாத திரைக்கதையால் தடுமாற்றத்துடன் சொல்லியிருக்கிறார்.

காட்டுப்பய சார் இந்த காளி… ஆனால் கெட்டிக்காரத்தனம் இல்லையே

Kattu Paiyan Sir Intha Kaali movie review and posting

எங்க காட்டுல மழை விமர்சனம்

எங்க காட்டுல மழை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புக்குட்டி, மிலோ, கார்த்தி, சாம்ஸ், அருள்தாஸ், மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் – ஸ்ரீபாலாஜி
ஒளிப்பதிவு – ஏஆர். சூர்யா
இசை – ஸ்ரீவிஜய்
தயாரிப்பு : சி. ராஜா
பிஆர்ஓ : நிகில் முருகன்

கதைக்களம்…

குள்ளநரி கூட்டம் என்ற அழகான வெற்றிப் படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இது.

நாயகனாக மிதுன் மகேஸ்வரன் நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர்.

மிதுன் மகேஸ்வரன், தனது நண்பன் அப்புக்குட்டியை தேடி சென்னை வருகிறார். ஆனால் அவரின் முகவரி தெரியாமல் தன்னுடன் பயணிக்கும் ஒருவருடன் நட்பாகி அவர் அப்பார்ட்மெண்டிலேயே வசிக்கிறார்.

இதனிடையில் நாயகி ஸ்ருதிக்கு உதவி செய்ய, இருவருக்கும் காதல் உண்டாகிறது.

இதனிடையில் போலீஸ் அருள்தாஸிடம் சின்ன பிரச்சினை ஏற்படுகிறது.

அதன்பின்னர் அப்புக்குட்டியை சந்திக்க, அவருடன் ஒரு பழைய இடிந்துப் போன கட்டிடத்தில் தங்குகின்றனர்.

ஒருநாள் போலீஸ் அருள்தாஸை பழிவாங்க, அவரிடம் இருக்கும் ஒரு பையை திருடி வருகிறார் மிதுன்.

அதன்பின்னர்தான் அந்த பையில் கோடிக்கணக்கான பணம் இருகிறது என்பது தெரிய வருகிறது.

அந்த பணத்தை தங்களின் பழைய கட்டிடத்தில் புதைத்து வைக்கின்றனர். அதில் உள்ள கொஞ்ச பணத்தை எடுத்து வெளியூர்களுக்கு சென்று என்ஜாய் செல்கின்றனர்.

திரும்பி வந்து பார்த்தால், அந்த இடத்தில் ஒரு போலீஸ் ஸ்டேசனே உருவாகி நிற்கிறது.

இதனால் பணத்தை அங்கிருந்து எடுக்க திட்டமிடுகின்றனர்.

காவல் நிலையத்திலிருந்து பணத்தை எப்படி எடுத்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் மிதுன் மகேஸ்வரன் சில நேரங்களில் பார்ப்பதற்கு நடிகர் சேது போலவே இருக்கிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தில் அறிமுகமாகி, சில படங்களில் நடித்தவர்தான் இந்த மிதுன் மகேஸ்வரன்,
நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில் இன்னும் கவனம் தேவை.

ஸ்ருதிக்கு பார்த்த மாப்பிள்ளையாக உள்ள சாம்ஸிடம் இவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்க தக்கவை.

நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஜில்லென்று வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அழகான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

மிடுக்கான போலீசாக அருள்தாஸ் அருமை. சில காட்சிகளில் வந்தாலும் சாம்ஸ் சபாஷ் போட வைக்கிறார்.

அப்புக்குட்டிக்கு இந்த படத்தில் நிறைய காட்சிகள் உள்ளது. எனவே அவரும் கிடைத்த காட்சிகளில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அப்புக்குட்டி & மதுமிதா காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

குள்ளநரி கூட்டம் படத்திற்கு பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை காமெடியாக கொடுக்க நினைத்துள்ளார்.

அதில் ஓரளவே முயற்சித்துள்ளார்.

பணப்பை காணாமல் போனது முதல் பரபரப்பை கூட்ட முயற்சித்துள்ளார் டைரக்டர் ஸ்ரீ பாலாஜி. ஆனால் அடுத்தடுத்து காட்சிகளை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.

ஸ்ரீ விஜய்யின் இசையில் மெலோடி பாடல் ரசிக்கலாம். சூர்யா ஏ.ஆர். ஒளிப்பதிவில் காட்சிகள் படத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

ஆனால் திரைக்கதையில் ட்விஸ்ட்டும் இல்லை. ஆக்சனும் இல்லை என்பதால் தொய்வு ஏற்படுகிறது.

இதற்கு நடுவில் இரண்டு நாய்கள் காதல் கதை வேற. அதற்கு வாய்ஸ் ஓவர் வேற கொடுத்துள்ளனர்.

அந்த பணம் நாயகனுக்கு கிடைக்கும்போது, அதை நல்லவிதமாக முடிக்காமல் நாய் வாயில் பையை வைத்து ஏதோ குழப்பி விடுகிறார் டைரக்டர்.

எங்க காட்டுல மழை… ஆனால் ரசிகர்கள் காட்டுல…?

கடிகார மனிதர்கள் விமர்சனம்

கடிகார மனிதர்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கிஷோர், லதாராவ், கருணாகரன், செரிலின் பில்லக்கள், பாலாசிங், சிசர் மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் – வைகறை பாலன்
ஒளிப்பதிவு – சங்கர் நாராயணன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு : பிரவீஸ் பிரதீப்ஜோஸ்

கதைக்களம்…

பேக்கரியில் பெறும் கேக், பிஸ்கட்டுகளை ஒவ்வொரு கடையாக சென்று போடும் வேலை செய்துவருகிறார் கிஷோர்.

இவரது மனைவி லதாராவ். இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தை.

சென்னையில் வாடகை வீடு தேடுகிறார்கள். புரோக்கர் சிசர் மனோகர் குறைந்த வாடகையில் இவருக்கு வீடு பார்த்துச் சொல்லும்போது 2 குழந்தைகள் என சொல்லிவிடுகிறார்.

இதனால் வீட்டு ஓனர் பாலாசிங்கிடம் தன் 1 குழந்தையை மறைத்து மறைத்து வாழ்கிறார்.

இதே காம்பவுண்டில் பாலாசிங்கின் மகள் செரிலினை கரெக்ட் செய்ய குடியேறுகிறார் கருணாகரன். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.

இதனால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் செரிலின்.

இதனிடையில் கிஷோரின் மகனை மறைக்கும் விஷயமும் ஓனருக்கு தெரிய வருகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு நடுத்தர குடும்பம், வாடகை வீடு என பல பிரச்சினைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் கிஷோர் மற்றும் லதா ராவ் தம்பதிகள். உண்மையை சொல்லிவிடலாமா? என இவர்கள் தவிக்கும் காட்சிகள் அருமை.

கருணாகரன் செரிலின் காட்சிகளில் ரொமான்ஸ சுத்தமாக இல்லை. இதில் கருணாகரனுக்கு காமெடியும் இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.

மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக லதா ராவ். நடுத்தர பெண்ணாக கணவரின் நிலை உணர்ந்து நடித்திருக்கிறார். வீடு தேலையும் அலையும் காட்சிகளில் கூட அசதியாக காணப்படுவது யதார்த்தம்.

சினிமாவில் சான்ஸ்க்கு அலையும் அந்த மலையாளி நடிகரும் கவர்கிறார். சரக்கு கொடுத்துவிட்டு பின்பே அவரே அதை வாங்கிச் செல்வது செம.

வீட்டு உரிமையாளர் பாலாசிங் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரின் பார்வையே மிரட்டலாக உள்ளது.

புரோக்கராக வரும் சிசர் மனோகர் கச்சிதம். போனில் பேசிக்கொண்டே அவர் செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கிறது. இங்க நல்லவங்களா வாழ முடியாது என அவர் கூறுவதும் செய்வதும் ரசிக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் ரசிக்கும் ரகமே. ஆனால் ஒரு பாடல் பிட்டு பிட்டாக அடிக்கடி வந்து நம்மை சோதிக்கிறது.

வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை என்பார்கள். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்களுக்கே அதன் கஷ்டங்கள் தெரியும்.

வாடகை வீடு, அதிகபட்ச கரண்ட் யுனிட், இயந்திர வாழ்க்கை என பலவற்றை கூறிக் கொண்டே போகலாம்.

ஹவுஸ் ஓனர் போடும் நிபந்தனைகள் அதற்கு பயந்து வாழும் சென்னை வாசிகள் என அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லியுள்ளார் டைரக்டர்.

சென்னைக்கு வேலைத் தேடி வரும் நபர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். சில காட்சிகள் சோர்வை தந்தாலும் யதார்த்தம் மீறாமல் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

கடிகார மனிதர்கள்… வாடகை வீடு மனிதர்கள்

Kadikara Manithargal Movie Review and rating

More Articles
Follows