கல்வியின்றி வாழ்வேது..?. பிழை விமர்சனம் 3.25/5

கல்வியின்றி வாழ்வேது..?. பிழை விமர்சனம் 3.25/5

கதைக்களம்…

சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைக்க கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் இவர்களின் பிள்ளைகளோ சுட்டித்தனம் செய்வது ஊர் மக்களிடம் பிரச்சினை என இவர்களுக்கு தொந்தரவாக உள்ளனர்.

ஒரு நாள் விளையாட்டுத்தனமாக தங்களை விட நன்றாக படிக்கும் மாணவனை பாதாள கிணற்றில் தள்ளி விடுகின்றனர்.

அவன் உயிர் பிழைத்தாலும் அந்த பகுதியில் இது பிரச்சினையாக தந்தையர்கள் மூவரும் இவர்களை அடி உதை கொடுத்து பின்னி எடுக்கின்றனர்.

எனவே வீட்டை வீட்டு சென்னைக்கு ஓடி விடுகின்றனர். அங்கு செலவுக்கு பணமில்லாமல் அலையும் போது தெரியாமல் ஒரு தாதாவிடம் சிக்கி விடுகின்றனர்.

அவன் இவர்களை குழந்தை தொழிலாளர் என்பதால் யாருக்கும் தெரியாமல் மிரட்டி வேலை வாங்குகிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? அவனிடம் இருந்து எப்படி தப்பினார்கள்? குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பதே பட க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

காக்கா முட்டை படத்தில் பெரிய பையனாக நடித்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நஷாத் மற்றும் கோகுல் ஆகிய மூவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஊர் மக்களிடம் இவர்கள் செய்யும் பிரச்சினைகளை கூட ரசிக்க வைக்கிறது. ரமேஷ், நஷாத் இருவரும் பட்டைய கிளப்பியுள்னர்.

சென்னை ஓட்டலில் இவர்கள் கஷ்டங்களை பார்த்தால் நமக்கே இவர்கள் மீது அனுதாபம் வரும்.

சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் ஆகிய மூவரும் ஏழை தந்தைகளாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். தங்கள் கேரக்டரில் சூப்பர்.

இவர்களுடன் தர்ஷினி, நாகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், வினோத், அபிராமி ஆகியோரும் அசத்தல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவில் எந்த குறையும் வைக்காமல் செய்துவிட்டார் பாக்கி. இசை பணிகளை பைசல் என்பவர் செய்துள்ளார். பாராட்டுக்குரியவர் தான்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ராஜவேல் கிருஷ்ணா. பெற்றோர் பேச்சை கேட்காத வாழ்க்கையில் உருப்படாது.

அதுபோல் கற்க வேண்டிய வயதில் கல்வியை கற்காவிட்டால் வாழ்க்கை நரமாகிவிடும் என்பதையும் ஆணித்தரமாக சொன்ன இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணாவை வெகுவாக பாராட்டலாம்.

படத்தில் 2 விதமான காதலர்களை காட்டியுள்ளார். கிராமத்து காதலர்கள் காட்சிகள் முழுமையாக இல்லை. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம்.

சென்னை சிட்டி காதலில் சாதியை சாடியிருப்பது சிறப்பு. அதுபோல் உண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை என்ற கருத்து ஓகே தான். ஆனால் அந்த காதலை சொன்ன விதம் சரியாக படவில்லை. இந்த இரண்டு காதல்களையும் படத்தில் இருந்து கட் செய்திருந்தாலும் தப்பில்லை. இதனால் படத்திற்கு எந்த பலனும் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம் தான் இந்த பிழை.

Pizhai movie review rating

Comments are closed.

Related News

2020 புத்தாண்டை வரவேற்க உலகமே காத்திருக்கிறது.…
...Read More