வாசமில்லா மலரிது… வெள்ளைப் பூக்கள் விமர்சனம் (2.5/5)

வாசமில்லா மலரிது… வெள்ளைப் பூக்கள் விமர்சனம் (2.5/5)

நடிகர்கள் : விவேக் சார்லி, பூஜா தேவரியா, தேவ், பைஜி ஹென்டர்சன்
இயக்கம் : விவேக் இளங்கோவன்
இசை : ராம்கோபால் கிருஷ்ணராஜீ
தயாரிப்பு : திஹா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத்

கதைக்களம்…

சின்ன கலைவாணர் விவேக் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. அவரின் நிஜ வயதுக்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

இவர் தமிழக காவல்துறையில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இவரது ஒரே மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரின் அனுமதியில்லாமல் அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.

பின்னர் மனம் கேட்காமல் உயரதிகாரி சொன்னதற்காக அமெரிக்கா சென்று மகனை காண செல்கிறார்.

மகனின் குடும்ப தோழியான பூஜா தேவரியா ஒரு தமிழச்சிதான். அவரின் தந்தை சார்லி. அப்போது அவருடன் பழக்கம் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் இவரது குடியிருப்புக்கு அருகே சில கடத்தல் சம்பவங்கள் நடக்கிறது. பக்கத்து வீட்டுப் பெண் மோனா, பின்னர் கார்லோஸ் என்ற பள்ளிச் சிறுவன் கடத்தப்படுகிறார்கள்.

அமெரிக்கா போலீஸ் இருந்தாலும் இவர் ஹீரோவாச்சே துப்பறிய முற்ப்படுகிறார்.

எங்கெங்கோ சென்று கண்டுபிடிக்க முயல்கிறார். அப்போதுதான் இவரது மகனும் காணாமல் போகிறார்.

இதை எல்லாம் யார் செய்கிறார்கள்? எதற்கு செய்கிறார்கள்? என்பதை இவரே தனி ஆளாக நின்று கண்டுபிடிக்கிறார்.. அதுதான் மீதிக்கதை.

ஒரு குற்றம் நடந்தால் அது எப்படி? ஏன்? என்பதைக் கண்டுபிடித்தால் அது யாரால் நடந்தது என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்ற வசனங்களை அடிக்கடி சொல்லி சொல்லி சார்லியுடன் கண்டு பிடித்துவிடுகிறார்.

சில இடங்களில் இவரது பணி ஹைலைட்டாக இருந்தாலும் பல இடங்களில் காமெடியாக இருக்கிறது.

நவீன டெக்னாலஜியை கையில் வைத்திருக்கும் போலீசே கண்டுபுடிக்காத இடங்களை எல்லாம் இவர் ஒரு ஆள் கண்டு பிடிக்கிறார்.

அதுவும் இவராக ஒரு கற்பனை செய்து இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்பதாக யூகித்து சார்லியுடன் செல்கிறார்.

தேவ். பூஜா தேவரியா, விவேக் மருமகள் ஆகியோர் நல்ல தேர்வு.

அதுபோல் சார்லி நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

பின்னணி இசை நன்றாக உள்ளது. காட்சிகளும் காட்சி அமைப்புகளும் ஓகே.

ஆனால் முக்கியமான கடத்தல்கள் நடக்கும் இடத்தில் மட்டும் சிசிடிவி கேமரா இல்லை என்பது நம்பும்படியாக இல்லை.

அமெரிக்கா போலீஸ் இருந்தும் இவர் எல்லாம் இடத்திலும் செல்வது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

இயக்குனர் விவேக் இளங்கோவன் ஒரு குழந்தையை அடிக்கடி காட்டுகிறார்.

ஆனால் அது பின்னர்தான் ப்ளாஷ்பேக் காட்சி என்பதே தெரிகிறது. அப்படி என்றால் காட்சிகளை வேறுபடுத்தி காட்டியிருக்க வேண்டாமா? 15 வருடங்களுக்கு முன்பு போல் உள்ள காட்சியாக அது இல்லையே?

ஆக ‘வெள்ளைப்பூக்கள்’ வாசமில்லா மலரிது

Vellai Pookal review

Comments are closed.