பாம்பு சட்டை விமர்சனம்

பாம்பு சட்டை விமர்சனம்

நடிகர்கள் : பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, கே. ராஜன், குருசோமசுந்தரம், ஆர்வி உதயகுமார், மொட்டை ராஜேந்திரன், சார்லி மற்றும் பலர்.
இயக்கம் : ஆடம்தாசன்
இசை : அஜேஸ் அசோக்
ஒளிப்பதிவாளர் : கேஜி வெங்கடேஷ்
எடிட்டர்: ராஜா சேதுபதி
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : மனோபாலாவின் பிக்சர் அவுஸ்

 

கதைக்களம்…

ஒன்லைன்… நேர்மையாக நடந்து கொள்வதால் வரும் பிரச்சினைகளும் அதனை சுற்றியுள்ள நடக்கும் சுவாரஸ்யங்களும்தான் கதை.

தன் அண்ணி பானுவுடன் வசிக்கிறார் பாபி சிம்ஹா. வீடு மற்றும் ஆபிஸ்களுக்கு வாட்டர் கேன் போடுவதே இவரது வேலை.

வாட்டர் கேன் போடும்போது எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் கீர்த்தியை சந்திக்கிறார். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனிடையில் அண்ணிக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால் அவருக்கு பெரும் கடன் இருக்க, அதனை அடைக்க முயற்சிக்கிறார்.

அந்த பெரும் தொகையை ஒரு குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து, பின்னர் அதிலிருந்து மீளமுடியாமல் பாபி சிம்ஹா தவிக்கும் சம்பவங்கள் இந்த பாம்பு சட்டை.

bobby simha keerthy suresh

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான யதார்த்தமான கேரக்டரில் பாபி சிம்ஹா.

அழுக்கு பையனாக வந்தாலும் அசத்தியிருக்கிறார் பாபி.

அழகான கவிதை சொல்லி கீர்த்தியை அசத்தினாலும், இவர் முகத்தில் ரொமான்ஸ் மட்டும் வர மாட்டுங்குதே ஏன் பாஸ்..?

இதுவரை கலர்புல் கீர்த்தி சுரேஷை நாம் பார்த்து இருப்போம். ஆனால் இதில் நெக்ஸ்ட் டோர் கேர்ளாக நம் மனதில் நிறைகிறார்.

நீங்களே வேணாம் என மறுத்தாலும் வேணி கேரக்டராக வந்து ஒட்டிக் கொள்வார் கீர்த்தி.

இவரது ஆடைகள் கூட அடிக்கடி ரிப்பீட் ஆவதுபோல் காட்சிகளை அமைத்து, ஒரு ஏழைப் பெண்ணாக காட்டியிருக்கிறார் டைரக்டர்.

கணவன் தம்பியுடன் வசிக்கும் போது காட்டும் கண்ணியம் ஆகட்டும், பின்னர் மறுமணத்திற்காக தயார் ஆவது என அண்ணியாக அசத்தியிருக்கிறார் பானு.

மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல வந்து காமெடி செய்கிறார்.

தயாரிப்பாளர் கே.ராஜன், குருசோமசுந்தரம் மற்றும் சார்லி கேரக்டர்கள் படத்திற்கு கூடுதல் பலம்.

பணத்திற்காக இவர்கள் எதை செய்தாலும், அதில் எதற்காக செய்கிறோம்? என்பதை வேறுபடுத்தி காட்டியிருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம்.

keerthi suresh bobby in paambu sattai

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அஜேஷ் அசோக்கின் இசையில் மெலோடி பாடல்கள் ஓகே. ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள நீ உறவாக பாடல் ரசிக்க வைக்கிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகேதான் என்றாலும் படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கிறது.

இடைவேளை வரை மனது நிறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஏன்? இத்தனை நீளம் என கேட்கத் தோன்றுகிறது. எடிட்டர் எங்கப்பா..?

Paambu Sattai

இயக்கம் பற்றிய அலசல்…

அண்ணியை பாபியுடன் இணைத்து ஊர் பேசும்போது, உங்க அப்பா போய்ட்டாரன்னா? அம்மாவ தனியாக விட்டுவியா? என கேட்கும் காட்சி அருமை.

படத்தின் டைட்டில் பாம்பு சட்டை? ஏன் என்பதை வசனங்கள் மூலம் சொன்னதற்கு இயக்குனருக்கு நன்றி.

வில்லன் கே ராஜன் படத்தின் காட்சிபடி ஒரு படம் தயாரிக்கிறார். அதில் ரெமோ படத்தின் பேனர் வருவது ஓகே. ஆனால் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் படம் வரலாமா? சார்..?

கமர்ஷியல் வேண்டும் என்பதற்காக வரும் அந்த பாடல் தேவையில்லை. (நாகேந்திர பிரசாத் மற்றும் சாந்தினி ஆடும் குத்துப்பாட்டு)

சில கும்பல்கள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் எப்படி விடுகிறார்கள்..? என்பதை நம்பும் படியாகவும் அதே நேரம் விழிப்புணர்வு வரும்படியாக காட்டியிருப்பதும் சிறப்பு.

படத்தின் நீளத்தை மட்டும் குறைத்தால் இந்த பாம்பு சட்டையை எல்லாம் ரசிகனும் ரசிப்பான்.

நேர்மையான வாழ்பவனுக்கு முன்னேற்றம் ஒரு நாள் வரும். ஆனால் அதற்கு காத்திருக்க வேண்டும் என காட்சியை முடித்திருப்பது டைரக்டர் டச்.

மனோபாலா இல்லாத படங்களே இல்லை என்ற நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்தும் அவர் இதில் இல்லை என்பது மகா ஆச்சரியம்தான்.

பாம்பு சட்டை… ரசிகர்களுடன் ஒட்டிக் கொள்ளும் அட்டை

Comments are closed.

Related News

மனோபாலா தயாரிப்பில் பாபி சிம்ஹா, கீர்த்தி…
...Read More
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக…
...Read More
தனுஷ் நடித்த மாரி படத்தை ராதிகா…
...Read More
சூர்யா நடித்துள்ள சி3 படம் டிசம்பர்…
...Read More