தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரிமாபட்டி சக்திவேல் பட விமர்சனம்
திருச்சி அருகே உள்ள அரிமா பட்டியில் நடக்கும் காதல் சாதி கதை தான் இந்த படம்.. இந்த ஊரில் இன்னும் சாதிய காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கும் படமே இது..
ஸ்டோரி…
சாதி படம் என்றாலே நாயகன் கீழ் சாதி நாயகி மேல் சாதி.. வழக்கம்போல நாயகி வீட்டில் எதிர்ப்பு கிளம்பும்.. அவரது அண்ணனோ தந்தையோ எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.. இந்த ஃபார்முலாவில் இருந்து கொஞ்சமும் தடம் மாறாமல் வந்திருக்கும் படம் தான்..
நாயகன் பவன். நாயகி மேக்னா எலன்.. இருவரும் சிறுவயது முதலில் காதலிக்கிறார்கள்.
வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் நாயகி டீச்சர் ஆகிறார். நாயகன் சென்னையில் இயக்குனராக வேண்டும் என வேலை தேடி அலைகிறார்..
இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர நாயகிக்கு மணமுடிக்க ஆசைப்படுகிறார் அவரது அண்ணன் பிர்லா போஸ். நாயகனின் கீழ் சாதிக் காதலுக்கு முறுக்கிக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
ஆனால் நாயகனோ இயக்குனர் ஆன பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக நிற்கிறார்.. அதன் பின்னர் நாயகி என்ன செய்தார்.? காதலர்கள் இணைந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாயகன் பவன்.. இவர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட.. சக்திவேல் பணி புரியும் அலுவலகத்தில் ஒருவர் நிச்சயம் நீ பெரிய ஆளாகி அரிமாபட்டியின் அடையாளமாக வருவார் என்கிறார்.. ஓஹோ கதை வேறு தளத்திற்கு போகிறது என்று நாம் நினைத்தால் வழக்கம்போல எதையும் சாதிக்கவில்லை நாயகன் பவன்..
நாயகனுக்கு அழுகை & ரொமான்ஸ் வரவில்லை ஆக்ஷனில் மட்டும் கைத்தட்டல் வாங்கி விடுகிறார்..
நாயகி மேக்னா ஹெலன்.. இவரது கண்கள் நம்மை என்றென்றும் கவரும்.. இரண்டு புருவங்களை இணைக்கும் அவரது அந்த புருவ முடி கூட அழகுதான்.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
ஹீரோவின் அப்பாவாக சார்லி.. வெள்ளந்தி மனிதராக நின்று ஊர்முன் அசிங்கப்படுவதும் மகனுக்காக தவிப்பதும் என அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்..
நாயகியின் அண்ணனாக பிர்லா போஸ்.. வில்லத்தனம் கலந்த நடிப்பில் கவர்கிறார்..
அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி.. ஊரில் முக்கிய புள்ளியாக ஜெயச்சந்திரன்.. பஞ்சாயத்து தலைவராக சூப்பர் குட் சுப்ரமணி.. இதில் சேதுபதி ஜெயச்சந்திரன் கம்பீர தோற்றத்துடன் கெத்து காட்டி இருக்கிறார்..
டெக்னீசியன்ஸ் …
ஒளிப்பதிவாளர் ஜெ பி மேன்.. இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.. வழக்கமான சாதியை காதல் கதை என்றாலும் இவரின் ஒளிப்பதிவு படத்துடன் நம்மை ஒன்றை வைக்கிறது..
மணி அமுதவன் இசையில் காதல் பாடல்களும் கவர்கிறது.. அந்தோணி தாசன் பாடிய ‘வண்ண வண்ண இறகு நீ’ பாடல்… மீண்டும் கேட்கும் ரகம்..
சாதிய காதல்.. ஊர் பஞ்சாயத்து.. ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது.. ஊருக்கு கட்டுப்படும் அப்பாவி தந்தை என வழக்கமான காதல் கண்ணீர் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் கந்தசாமி..
1980 – 90களில் பார்த்த காதல் கதை தான் என்றாலும் இன்றளவும் இந்த கொடுமை அரிமாபட்டியில் நடக்கிறது என்பதை ஆணித்தரமாக ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.
படம் முடிந்ததும் எண்டு கார்டில் இன்றும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஊருக்கு திரும்ப முடியாதவர்கள் என பலரது புகைப்படங்களையும் காட்டி நிரூபிக்கிறார்.
Arimapatti Sakthivel movie review