ஆல்கஹால் டாக்டர்… ஆதித்ய வர்மா விமர்சனம் 3/5

ஆல்கஹால் டாக்டர்… ஆதித்ய வர்மா விமர்சனம் 3/5

நடிப்பு – த்ருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், ராஜா, அன்பு தாசன் மற்றும் பலர்
இசை – ரதன்
இயக்கம் – கிரிசாயா
தயாரிப்பு – ஈ 4 என்டர்டெயின்மென்ட்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படமே தமிழில் ஆதித்ய வர்மா என வந்துள்ளது.

ஏற்கெனவே ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு ‘கபீர் சிங்’ ஆக வசூல் சாதனை புரிந்துள்ளது.

காதல் என்றாலே முதல் எதிரி சாதியாக இருக்கும். இதிலும் வர்மா என்ற சாதி பெயரால் ஆதித்யாவின் காதல் பிரிகிறது.

சரி கதை என்ன பார்ப்போம்.

Adithya Varma Movie Stills (4)

கதைக்களம்…

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன் படிக்கிறார் த்ருவ் விக்ரம். படிப்பு விளையாட்டு என எல்லாத்திலும் இவர்தான் நம்பர் 1.

அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்க வரும் மாணவி பனிதா சாந்துவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார்.
அவளுக்கு ஏதாவது என்றால் துடித்துப் போகும் காதல். காதலுடன் வெறித்தனமாக காமமும் அடங்கும்.

படிப்பை முடித்த பின் பனிதாவின் அப்பாவிடம் பெண் கேட்க ஆனால் இவரின் சாதியை சொல்லி மறுக்கிறார் அவர்.

உடனே வேறு பையனை பார்த்து திருமணத்தையும் செய்து வைக்கிறார்.

அதன்பின்னர் நம்ம ஆதித்யா என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

Adithya Varma Movie Stills (10)

கேரக்டர்கள்..

முதல் படத்திலேயே சில நடிகர்களுக்கு மட்டும் இப்படி வெயிட்டான கேரக்டர் கிடைக்கும். பராசக்தியில் சிவாஜி, பருத்தி வீரனில் கார்த்தி அந்த வரிசையில் துருவ் விக்ரமுக்கு ஆதித்ய வர்மா என சொல்லலாம்.

காதலில் உள்ள வெறித்தனத்தை அப்படி அழகாக வெளிப்படுத்தியுள்ளார். எதற்கெடுத்தாலும் கோபம், நட்பு, பாசம், டீன் ஏஜ் கெத்து, துருதுரு என வெளுத்து கட்டியிருக்கிறார் துருவ்.

சிம்பிளாக சொன்னால் புலிக்கு பிறந்தது பூனையாகாது என தன் தந்தை விக்ரம் பெயரை காப்பாற்றியிருக்கிறார். பல காட்சிகளில் பேசுவது இவரா? விக்ரமா? என கன்ப்யூஸ் செய்கிறார். மேலும் சின்ன வயசு சீயான் விக்ரமின் ஜெராக்ஸ் இவர் என சொல்லலாம்.

நாயகியாக பனிட்டா சந்து. நடுத்தர குடும்ப பெண்ணாகவும் நல்ல காதலியாகவும் நடிப்பை கொடுத்திருக்கிறர். ஆனால் ஸ்மார்ட்டாக இருக்கும் துருவ்க்கு இவர் செட்டாகவில்லை. ஆனால் ஹீரோவை பார்க்கும் போது எல்லாம் கிஸ்ஸ்ஸ் அடித்துக் கொண்டே நம்மை சூடு ஏற்றி விடுகிறார்.

இவர்களுடன் அன்பு தாசன், பிரியா ஆனந்த், ராஜா உள்ளிட்டோரும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

adithya varma movie stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரதன் இசையில் எதற்கடி வலி தந்தாய்? என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை சில இடங்களில் கைத்தட்டலை அள்ளுகிறது.

இதுபோன்ற காதல் படத்திற்கு இன்னும் அருமையான மெலோடி பாடலை கொடுத்திருக்கலாம். அதுபோல் காதல் தோல்வி என்றால் சூப்பரான சோக பாடலை கொடுத்திருந்தால் எந்த காலமும் கேட்டு இருக்கலாம்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஹீரோ இன்ட்டோ முதல் க்ளைமாக்ஸ் பீச் வரை ரசிக்க வைக்கிறது. சரக்கு பாட்டிலாக இருந்தாலும் சிகரெட் புகையாக இருந்தாலும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

விவேக் ஹர்சன் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்திருயிருக்கலாம். இடைவேளைக்கு பிறகு படம் மெதுவாக செல்கிறது.

தெலுங்கு அர்ஜீன் ரெட்டியை அப்படியே கொடுத்திருக்கிறார் கிரிசாயா. ஆனால் நிறைய முரண்பாடுகள் உள்ளது.

ஒரு பெண்ணை இவ்வளவு ஆழமாக காதலிக்கும் ஒருவன் எந்த பெண்ணாக இருந்தாலும் செக்ஸ் வைத்து கொள்வது எப்படி? அவள் இன்னொருத்தனின் மனைவியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள நினைக்கும் ஆதித்யா எப்படி ஒரு நடிகையை செக்ஸ் வைத்துக் கொள்ளகு அழைக்கிறார்.

செக்ஸ் மூட் வந்துவிட்டால் அப்படியே அவிழுக்கும் காட்சிகள்…. அதில் ஜட்டிக்குள் ஐஸ் கட்டி வைப்பது என ஏகப்பட்ட காட்சிகள் உள்ளன.

போதை மருந்து, சிகரெட், செக்ஸ் இதுவே தன்னுடைய பொழுதுபோக்க இருக்கும் ஒருவர் தன்னுடைய மருத்துவ தொழிலை காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் அப்படி நடந்துக் கொள்வதாக தெரியவில்லை.

ஒரு காட்சியில் பணம் கொடுத்து வழக்கை ஜெயித்து டாக்டராக இருப்பதில் விருப்பம் இல்லை என்கிறார். அதில் மட்டுமே அவருடைய முழ ஈடுபாடு தெரிகிறது.

கேர்ள்ஸ் ஹாஸ்டலில் அசால்லட்டாக உள்ளே செல்வது.. ஒட்டு மொத்த மாணவர் மாணவிகள் இவருக்காக பயப்படுவது எல்லாம் ரொம்ப பில்டப்பாக தெரிகிறது.

க்ளைமாக்ஸ் முடிவு எல்லா தரப்பையும் திருப்திபடுத்தாது. அதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம்தான். படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்திருப்பதால் எல்லாராலும் பார்க்க முடியாது. ஆனால் நிச்சயம் உண்மையான இதயக் காதலர்களை கவரும்.

ஆக.. ஆதித்யா வர்மா… ஆல்கஹால் டாக்டர்

Adithya Varma review rating

Comments are closed.

Related News

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை…
...Read More
கிரிசாயா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ்…
...Read More