ஜெயிலர் விமர்சனம் 4/5.; ஜெயிச்சிட்டாரு

ஜெயிலர் விமர்சனம் 4/5.; ஜெயிச்சிட்டாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட தன் மகனை மீட்க போராடும் ஒரு தகப்பனின் கதை இந்த ஜெயிலர்..

கதைக்களம் :

முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மகன் வசந்த ரவி மருமகள் பேரன் என ஒரு நடுத்தரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான வசந்த் ரவி ஒரு சிலை கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். இதனால் அந்த கும்பலுக்கும் வசந்த ரவிக்கும் மோதல் உருவாக வசந்த ரவியை கடத்தி விடுகிறது.

அந்த கும்பலிடம் இருந்து தன் மகனை மீட்க அவதாரம் எடுக்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரியான முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர்.

அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் யதார்த்தமான சீனியர் சிட்டிசனாக அறிமுகமாகிறார் ரஜினி.

பேரனுடன் விளையாடுவது.. மனைவியுடன் செல்லமாக கோபிப்பது.. மகன் மீது பாசத்துடன் கை கோர்ப்பது என சிம்பிளாக வந்து செல்கிறார் சூப்பர் ஸ்டார்.

ஒரு கட்டத்தில் தன் மகனை மீட்க இவர் எடுக்கும் அசுரவேகம் அதகளம் செய்கிறது.

தலைவர் அலப்பறை தலைவர் நிரந்தரம் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இடைவேளைக்குப் பிறகு மாஸ் காட்டி இருக்கிறார் ரஜினி.

மகனாக வசந்த்ரவி. இவரது கேரக்டரில் இயக்குனர் வைத்த திருப்புமுனை எதிர்பாராத ஒன்று.

அழகான மனைவி அன்பான துணைவி என்பது போல விஜயா கேரக்டருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

நடிகை காம்னா கேரக்டரில் தமன்னா.. காவலா பாட்டுக்கு நம்மையும் ஆட வைக்கிறார்.

கால் டாக்சி டிரைவராக யோகிபாபு வருகிறார். இவரும் ரஜினியும் சேர்ந்து செய்யும் டார்க் காமெடி களை கட்டியுள்ளது எனலாம்.

ரஜினிக்கு நிகரான மிரட்டல் வில்லனாக விநாயகன் நடித்திருக்கிறார். இவரது காட்சிகள் படத்திற்கு பெரும் பலம். முக்கியமாக இவர் எதிரிகளை கொல்லும் காட்சிகள் வித்தியாசமான கற்பனை.

மோகன்லால் – சிவராஜ்குமார் – ஜாக்கி ஷரப் ஆகியோரது கேரக்டர்கள் படத்திற்கு பிளஸ். ஆனால் அவர்களுக்கான கொடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவு.

பெரிய சூப்பர் ஸ்டாரை பயன்படுத்தும் போது அதில் இன்னும் கொஞ்சம் வெயிட் ஏத்தி இருக்கலாம்.

பருத்தி வீரன் சரவணன் கொஞ்ச நேரம் வந்தாலும் சரவெடி. சுனில் காமெடி ஆங்காங்கே சிரிப்பை வர வைக்கிறது. இவரது கெட் அப் கூட சிரிக்க வைக்கும்.

டெக்னீஷியன்கள்…

தன் குடும்பத்தை காக்க ஒரு குடும்பத் தலைவன் எதை வேண்டுமானாலும் செய்வான் என்பதை அதிரடி ஆக்ஷன் உடன் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

அனிருத் இசையில் உருவான காவலா என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது.. தலைவர் அலப்பறை என்ற பாடல் ரஜினி ரசிகர்களை முறுக்கேற்றுகிறது. மற்ற பாடல் பெரிதாக கவனம் பெறவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.

ஆனால் படத்தின் கருவாக கருதப்படும் ஜெயிலர் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்கும் படியாக இல்லை. முக்கியமாக ரஜினியின் போலீஸ் கெட்டப் கவனம் பெறவில்லை.

இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு தான். ஆனால் அதை எல்லாம்
கிளைமாக்‌ஸில் வைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

நெல்சன் இதற்கு முன்பு இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் ஹைலைட்டாக கருதப்பட்ட டார்க் காமெயை இந்த படத்திலும் இடைவேளை வரை கொடுத்து படத்தை படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார். முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி ஆக்சன் என இரண்டையும் கலந்து ரசிகர்களுக்கு மக்களுக்கும் ட்ரீட் கொடுத்துள்ளார் நெல்சன்.

ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்டைலான மாஸ்தான்..

அதை ஒரு காட்சியில் வைத்து ரஜினி மோகன்லால் சிவராஜ்குமார் ஆகிய மூவருக்கும் சேர்த்து சூப்பர் ஸ்டார் பாடலை ஒலிக்க விட்டது கூடுதல் சிறப்பு.

ஆக ‘ஜெய்லர்’.. ஜெயிச்சுட்டாரு..

rajinikanth’s Jailer review and rating in tamil

சான்றிதழ் விமர்சனம்.; வித்தியாசமான வில்லேஜ்

சான்றிதழ் விமர்சனம்.; வித்தியாசமான வில்லேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Harikumar, Roshan Bhashir, Ratha ravi, Abu Khan, Ravimariya, Manobala, Aruldass, Kowsalya, Ashika Ashokan, Tanisha Kuppanda, Adithya Kathir, Kajal Pasupathi, Uma Shree

Directed By : Jayachandran

Music By : Baiju jacob

Produced By : Vettrivel Cinemas – SJS. Sundharam & JVR

தறுதலையாக இருக்கும் ஒரு கிராமத்தினர் கருவறையில் இருக்கும் புனிதர்களாக மாறும் கதை தான் இந்த சான்றிதழ்

கதைக்களம்…

கருவறை என்ற ஒரு கிராமம். இந்த கிராமத்திற்கு மத்திய அரசு நற்சான்றிதழ் கொடுக்க நினைக்கிறது. அந்த கிராமத்தினரோ சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் எங்கள் கிராமத்திற்கு கவர்னர் வரவேண்டும் என்கின்றனர்.

அப்படி என்ன சாதித்தது அந்த கிராமம்? அந்த கிராமத்தில் நடக்கும் நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் அனைவரின் ஆச்சரிய கேள்விகளாகும்.

எனவே அந்த கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது அறிய மீடியாக்களும் சில மர்மநபர்களும் உள்ளே நுழைகின்றனர்.

அத்துமீறி அவர்கள் நுழைந்து விட்டதால் அவர்களை ஒரு தனி அறையில் அடைத்து வைக்கின்றனர் கிராமத்தினர். கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அனைவரையும் கண்காணிக்கிறது.

இரவு 8 மணிக்கு மேல் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.. எவர் குடிக்க விரும்பினாலும் குவாட்டர் அளவு தான் குடிக்க வேண்டும் என்கின்றனர்.

இப்படியாக கட்டுப்பாட்டுக்குள் அந்த கிராமத்தை வைத்திருக்க என்ன காரணம்.? இதற்கு முன் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இதுவரை ஏற்காத வெள்ளந்தி கேரக்டரில் வெள்ளை சாமியாக வாழ்ந்திருக்கிறார் ஹரிக்குமார். ஆனால் இவரது ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் செயற்கை தனமாக உள்ளது.

ஆனால் இவரை போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் நிச்சயம் இந்த நாடு விரைவில் வல்லரசாகும்.

கருவறை கிராமத்து இளைஞராக ரோஷன் பஷீர் – நிருபராக வரும் ஆஷிகா அசோகன். இருவரும் காதலர்களாக வந்து கதைக்கு குளிர்ச்சி ஊட்டி செல்கின்றனர்.

குடிகாரன் மற்றும் நல்லவன் என மாறுபட்ட பாத்திரங்களை செய்து இருக்கிறார் ரவி மரியா. ஆதித்யா கதிர் வரும் காட்சிகள் கலகலப்பு. ஒன் லைன் டைமிங் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.

ராதாரவி கௌசல்யா அருள்தாஸ் மனோபாலா ஆகியோருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் நடிப்பில் குறைவில்லை.

ஹரிகுமாரின் மனைவி அழகாக வந்து இளைஞர்களை சூடேற்றுகிறார். காஜல் பசுபதி, உமா ஸ்ரீ ஆகியோரும் இதில் அடக்கம்.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

படத்தொகுப்பாளர் ஜெ.எப்.காஸ்ட்ரோ தன் பணியை கவனமாக செய்து இருக்கலாம். இடைவேளையில் வரும் காட்சியும் கிளைமாக்ஸ் வரும் காட்சியும் தொடர்புடையதாகவே இல்லை. தறுதலை கிராமம் கருவறையாக மாறுவதை கதைக்கு ஏற்ப எடிட்டிங் செய்திருக்கலாம்.

கலை இயக்குநர் நாஞ்சில் பி.எஸ்.ராபர்ட் தன் பணியில் நேர்த்தி.

இடைவேளைக்கு முன்பு ஒரு கதையாகவும் இடைவேளைக்குப் பின்பு வேறு கதையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டும் துண்டு படங்கள் போலவே பார்வையில் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் இடைவேளையில் வைத்த காட்சிகளை கிளைமாக்ஸில் வைத்து இருக்கலாம்.

கருவறை போல ஒரு கிராமம் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என எண்ண வைக்கிறது காட்சி அமைப்புகள். நடக்கிறதோ? இல்லையோ? ஆனால் அப்படி ஒரு ஊர் கட்டுப்பாடு இருந்தால் இந்தியா ஓர் உயர்ந்த இடத்தை அடையும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு புதிய கோணத்தில் ஓர் அழகிய கிராமத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜெயச்சந்திரன் அரபு நாடுகளில் விதிக்கப்படும் கடுமையான சட்டங்களைப் போல இந்த கிராமத்திலும் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார்.

இப்படியாக மக்கள் வாழ்ந்தால் நிச்சயம் நற்-சான்றிதழ் நமக்கெல்லாம் கிடைக்கும் என நம்பலாம்..

Harikumar starrer Saandrithazh movie review

வெப் விமர்சனம்.; சோசியல் டிரிங்க் அலர்ட்

வெப் விமர்சனம்.; சோசியல் டிரிங்க் அலர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போதை வலையில் சிக்கிய இளம் பெண்கள்..

கதைக்களம்…

ஷில்பா மஞ்சுநாத் – சுபபிரியா மலர் – சாஸ்வி பாலா உள்ளிட்டவர்கள் ஐ.டி-யில் பணிபுரியும் பெண்கள். வார விடுமுறை என்றாலே இவர்கள் கிளப்புக்கு சென்று போதையில் மிதக்கும் தோழிகள்.

இவர்களை பெற்றோர்கள் எவ்வளவோ கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் மை லைஃப் மை ரூல்ஸ் என வாழ்கின்றனர்.

ஒருநாள் இரவு தோழிகள் அதிக போதையில் கார் ஓட்டிக்கொண்டு செல்லும்போது திடீரென நட்டி @ நடராஜால் கடத்தப்படுகின்றனர்.

இவர்களை கடத்தி ஒரு அறையில் அடைத்து வைக்கும் நடராஜ் இவர்களுக்கு உணவு & ஊசி என அனைத்தையும் கொடுக்கின்றார்.

இந்த பெண்களை நடராஜ் கடத்த காரணம் என்ன.? அவர்களுக்கும் நடராஜுக்கும் என்ன சம்பந்தம்? இந்த பெண்கள் தப்பிக்க என்ன செய்தார்கள்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இடைவேளைக்கு முன்பு ஒரு கேரக்டர் இடைவேளைக்குப் பின்பு மாறுபட்ட கேரக்டர் என இரண்டையும் கச்சிதமாக செய்து இருக்கிறார் நட்டி. இவரின் நோக்கம் என்ன ஏன் கடத்தினார்? என்பது புரியாமலே இடைவேளை வரை வந்து விடுகிறது.

அதில் ஏதேனும் திருப்பங்கள் வைத்து கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்தான் எல்லா காரணமும் தெரியவருகிறது. அதுவும் சற்று நேரத்தில் முடிந்து விடுவதால் கதையின் மீதான சுவாரஸ்யம் குறைவு தான்.

போதையில் திளைக்கும் பெண்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் ஹாருன். ஐடி பெண்களுக்கே உரித்தான ஷ்டைலிஸ் லுக்கில் வருகிறார் ஷில்பா மஞ்சுநாத்.

வீட்டுக்கு அடங்காத ‘மை லைஃப் மை ரூல்ஸ்’ என்ற தத்துவத்தில் வாழும் டீன் ஏஜ் பெண்களை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.

பெண்கள் கடத்தப்பட்ட பிறகு அவர்கள் குடும்பத்தாரின் நிலை என்ன? அவர்களின் பரிதவிப்பு என்ன என்பதை ஒரு காட்சியில் கூட இயக்குனர் காட்டவில்லை என்பதாலேயே நமக்கு சந்தேகம் வருகிறது.

ஐடி தோழிகளாக வரும் அனன்யா மணி, சாஷ்வி பாலா, முரளி, சுபபிரியா மலர் உள்பட அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மொட்ட ராஜேந்திரன் காட்சிகள் தேவையே இல்லை. படத்திறன் கலகலப்புக்கு உதவ உள்ளே நுழைந்து இருக்கிறார். ஆனால் காமெடி கொஞ்சம் கூட இல்லை.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதிய பாடலும் கார்த்திக் ராஜா இசையும் படத்தின் கதை ஓட்டத்திற்கு கை கொடுத்துள்ளது.

ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப்.

ஐடி நிறுவனம்… நைட் பார்ட்டி உள்ளிட்ட காட்சிகள் அழகு.. அதுபோல பாழடைந்த பங்களா ஆர்ட் செட் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது சிறப்பு.

போதைப் பழக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்து எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹாரூன்.

இந்தக் கடத்தல் காட்சியில் குடும்பத்தினரின் பரிதவிப்பு இல்லை.. போலீஸ் இல்லை.. ஆகியவை நமக்கு சந்தேகத்தை வரவிருக்கிறது.

எனவே காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது.

ஆக சோசியல் டிரிங்க் என்ற கலாச்சாரம் ஆபத்தானது என சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அதேசமயம் மது குடிப்பது குற்றம் என்றால் மது விற்பதும் குற்றம் தானே.. எனவே அரசாங்கத்திற்கு எதிராகவும் தன்னுடைய கோரிக்கையை வைத்திருக்கலாம்.

Natty and Shilpa starrer WEB movie review

பீட்சா 3 தி மம்மி விமர்சனம்.; பயமா.?? பாசமா.??

பீட்சா 3 தி மம்மி விமர்சனம்.; பயமா.?? பாசமா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பிரட் அண்ட் சாக்லேட் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் அஸ்வின். இன்ஸ்பெக்டர் கௌரவ நாராயணனின் தங்கையை அஸ்வின் காதலித்து வருகிறார்

ஒரு கட்டத்தில் இவரது உணவகத்தில் அமானுஷ்ய சக்திகள் தொந்தரவு செய்கின்றன. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் இவருக்கு தெரிந்த சில நபர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.

இதனால் அஸ்வின் மீது சந்தேகம் கொள்ளும் கௌரவ் இவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறார்.

அஸ்வின் கொலை செய்யவில்லை என்றாலும் இவரை சுற்றி அமானுஷ்ய சக்தி நடப்பதற்கான காரணம் என்ன.?

இவருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சமையல் கலைஞர் என்பதால் நளன் என்ற பெயரை ஹீரோவுக்கு வைத்து விட்டாரா இயக்குனர்.?

அலட்டிக் கொள்ளாத நிதான நடிப்பில் கவர்கிறார் அஸ்வின். இவருக்கும் நாயகிக்கும் ரொமான்ஸ் சுத்தமாக இல்லை. எனவே இவர்கள் இணைந்தால் என்ன? பிரிந்தால் என்ன? என்று நமக்கு தோன்றுகிறது.

பேயின் பிளாஷ்பேக் தெரிந்த பின் அஸ்வின் உருகும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

போலீஸ் பிரேம் ஆக கௌரவ் நாராயணன், மித்ராவாக அபிநட்சத்திரா, ராணியாக அனுபமா குமார், வீராவாக வரும் நாராயணன், தாமுவாக வரும் காளி வெங்கட், விஸ்வநாதனாக வரும் கவிதா பாரதி, செக்யூரிட்டியாக விநாயகம் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

அழகு சிறுமியாக அபி நட்சத்திரா. பேயாக வந்தபின் தலை முடியை முகத்தில் போட்டு மூடிவிட்டார்.. ஒருவேளை பேய் மேக்கப் போட செலவு மிச்சம் செய்து விட்டார்களோ.?

டெக்னீசியன்கள்…

நாம் பார்த்த வரையில் பேய் படங்கள் என்றாலே அந்தப் பேய் ஒரு அடர்ந்த காட்டு பங்களாவில் தான் குடியேறி இருக்கும் ஆனால் இதில் ஒரு உணவகத்தில் வந்து சமைப்பது வித்தியாசமான சிந்தனை.

படத்தில் ஆரம்பத்தில் காட்டப்படும் ஒரு ஒரு வாலிபால் பிளேயரின் உருவம்.? ஏன் எதற்கு என்பதற்கான விளக்கம் இல்லை.

ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வாலிபால் அவசியம் என்ன.? அந்த பந்து சத்தத்தை அடிக்கடி காட்டுவது ஏன்.? இயக்குநர் மோகன் கோவிந்தா.

பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்து பயமுறுத்தி இருக்கிறது. அருண் ராஜின் அளவான பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில நேரங்களில் எந்த சப்தமும் இல்லாமல் இவர் அடக்கி வாசித்திருப்பது சபாஷ்.

பேய் என்றாலே தன்னை கொன்றவர்களை நினைவில் வைத்து தான் பழி வாங்கும். ஆனால் இதில் ஞாபக மறதி பேயை வைத்து ஒரு வித்தியாசமான பீட்சாவை கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆனால் பீட்சா 1 அளவுக்கு இந்த பீட்சா 3 சுவைக்கவில்லை என்பதுதான் கொஞ்சம் வருத்தம்.

Pizza-3 The Mummy movie review and rating in tamil

அறமுடைத்த கொம்பு விமர்சனம்.; ஆபாச வீடியோ ஆசாமிகளுக்கு மரண அடி

அறமுடைத்த கொம்பு விமர்சனம்.; ஆபாச வீடியோ ஆசாமிகளுக்கு மரண அடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜாக்சன் ராஜ் இயக்கத்தில் ஏகே ஆனந்த், ஜெசி ரத்னவதி, ரெஜி, சிந்து, டிகேஎஸ் சண்முக சுந்தரம், சிம்சன் தேவராஜ், வினோத் சிங், சதா, ஜாவா கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் ‘அறமுடைத்த கொம்பு’.

கதைக்களம்…

திருநெல்வேலி அருகே வேலியூர் என்றொரு அழகிய கிராமம். அந்த கிராமத்தின் எல்லையில் கிழிந்த சட்டையுடன் பசி மயக்கத்தில் விழுகிறார் நாயகன் ஆனந்த்

இவரை அந்த ஊரில் உள்ள 3 திருநங்கைகள் காப்பாற்றி ஊர் பெரியவர் சண்முகசுந்தரிடம் ஒப்படைக்கின்றனர்.

சில தினங்களுக்கு பின் சண்முகசுந்தரம் அவரை ஒரு நல்ல மனிதனாக்கி அங்கேயே வேலை கொடுத்து தங்க வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆனந்தின் மீது காதல் கொள்கிறார் நாயகி ஜெசி ரத்னவதி.

இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்கும் அந்த ஊரில் ஜாதி சங்கம் அமைக்க வேண்டும் சிலர் போராடுகின்றனர். வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார் ஊர் தலைவர்.

ஜாதி சங்கம் ஊருக்குள் நுழைந்த பின் ஊரின் ஒற்றுமை கலைகிறது. ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது.? நாயகன் – நாயகி என்ன செய்தனர்.? ஊர் பெரியவர் என்ன செய்தார்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், நாயகியாக நடித்திருக்கும் ஜெஸ்சி இருவரும் புதுமுகம். முகத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும் முகபாவனைகளில் நம்மை கவனிக்க வைக்கின்றனர்.

ஆனால் பாடல்களில் க்ளோசப் சாட் தேவையா.?

ஒரு கட்டத்தில் ஜெஸ்ஸியை ஜாதி வெறியன் ஆபாச வீடியோ எடுத்து அவளை மிரட்ட.. “உன் அம்மாவிடம் உள்ள உறுப்பு தான் என்னிடமும் இருக்கிறது.. இன்டர்நெட்டில் நீ போட்டுக் கொள். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். உன் ஜாதி புத்தி இப்போது தெரிந்து விட்டது என சொல்லும் வசனங்கள் சாட்டையடி.

நிஜ வாழ்க்கையிலும் பெண்கள் இதுபோல செய்ய முன் வந்தால் எவனும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்ட மாட்டான்.

ஜாதிப் பெருமை பேசும் சிம்சன் தேவராஜ், வினோத் சிங் மற்றும் ஜாதி வேண்டாம் என்னும் கர்ணன் ஆகியோரும் கச்சிதம்.

ஊர் பெரியவர் சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நாடகத் தனமாக உள்ளது.. டிடி பொதிகை சேனலில் ஒரு டாக்குமென்ட்ரி படம் பார்க்க உணர்வையே சில காட்சிகள் நமக்கு கொடுக்கின்றன. அதை தவிர்த்து இருக்கலாம்.

தான் கட்டிய வேட்டிக்கு தகுந்தார் போல நெத்தியில் பட்டை போடும் வசனகர்த்தா நடிகருமான ரத்தினம் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.

உன் தங்கச்சியை நான் கட்டிக்கிறேன்.. என் தங்கச்சிய நீ கட்டிக்கோ என ஒருவரிடம் சொல்வார்.. அதற்கு நண்பர்கள் அவர் தங்கச்சி சுமாரா தானே இருப்பார் என்பார்கள்.. என் தங்கச்சி அதைவிட சுமாராக தான் இருப்பார்.. அதனால எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்பார்.

டெக்னீசியன்கள்…

அல் ரூபியன் இசையில் பாடல்கள் சுமார்தான்.. ஒளிப்பதிவு ஓகே ரகமே.

கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்தையும் ஜாக்சன் ராஜ் கையாண்டிருக்கிறார்.

குழந்தைகளுக்கு குட் டச்.. பேட் டச்… கிராமத்தில் நூலகம், மருத்துவ முகாம் ஆகிய விழிப்புணர்வு காட்சிகள் பலம்.

ஒரே படத்தில் காதல்.. ஜாதி.. மாடு வளர்ப்பு, ஆபாச வீடியோ, திருநங்கை மீது ஜொள்ளு என அனைத்தையும் சொல்ல முற்பட்டு இருக்கிறார் இயக்குநர் ஜாக்சன். ஆனால் திரைக்கதை அமைத்த விதத்தில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார்.

முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் பட்ஜெட்டை குறைக்க சில சித்து வேலைகள் செய்திருக்கிறார். நாயகன் எடுத்த முடிவு எதிர்பாராத ஒன்று. ஆனாலும் கிளைமாக்ஸ் திருப்தியானதாக இல்லை என்பது பெரும் வருத்தமே.

ஆக அறமுடைத்த கொம்பு.. ஆபாச வீடியோ ஆசாமிகளுக்கு மரண அடியை கொடுத்துள்ளது.

ARAMUDAITHA KOMBU movie review and rating in tamil

DIE NO SIRS டைனோ்சர்ஸ் பட விமர்சனம் 3.5/5.; கேங்ஸ்டர் கேம்

DIE NO SIRS டைனோ்சர்ஸ் பட விமர்சனம் 3.5/5.; கேங்ஸ்டர் கேம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டைனோசர்ஸ்’ (Die No Sirs).

எம்.ஆர்.மாதவன் இயக்கிய இப்படத்துக்கு போபோ சசி இசையமைக்க ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிடுகிறது.

கதைக்களம்…

சாலையார் மற்றும் கிள்ளியப்பன் ஆகிய இரு ரவுடி கேங்ஸ்டர்கள் உள்ளன.

இவர்களின் பழைய பிரச்சினை ஒன்றை முடித்து வைக்க.. சில மாதங்களுக்கு பின் 8 பேரை சரணடைய செய்கிறார் சாலையார்.

அதில் ஒருவனுக்கு மட்டும் திருமணம் ஆகி ஒரு வாரமே ஆன நிலையில் அவனுக்கு பதிலாக அவன் நண்பன் சிறைக்கு செல்கிறான்.

இதை ஒரு கட்டத்தில் அறியும் மற்றொரு கும்பல் தலைவன் கிள்ளியப்பன் என்ன செய்தார்.? இரு கும்பலுக்கும் பிரச்சினை என்ன ஆனது.?

நண்பனுக்காக சிறைக்குச் சென்ற தன் அண்ணனை நாயகன் எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

என்னதான் கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அதில் சிக்காமல் நல்லவனாக வாழ நினைக்கும் நாயகனாக மண்ணு பாத்திரத்தில் ஜொலிக்கிறார் உதய் கார்த்திக். நாயகியை பிராக்கெட் போட இவர் டூவீலரில் தீபா என்று வரையும் காட்சிகள் டூவீலர் ரைடர்களுக்கு டூ மச் ட்ரீட்.

புதுமாப்பிள்ளை துரையாக மாறா. சிலநேரம் நடிப்பில் விஜய்சேதுபதியை போல இருக்கிறார்.

அண்ணன் தனாவாக நடித்திருக்கும் ரிஷி, சாலையாறாக நடித்திருக்கும் மணேக்‌ஷா ஆகியோர் அசத்தல்.. அவரை பார்த்தாலே பயமாக இருக்கிறது. (இவர் போடும் திட்டமும் செம ஸ்கெட்ச்).

பெரும்பாலும் கேங்ஸ்டர் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதிலும் பெரிதாக கொடுக்கப்படவில்லை. நாயகி வேடத்தில் சாய் ப்ரியா.

ஆனால் இதில் நாயகனின் அம்மாவாக நடித்த ஜானகி ஒரு காட்சி என்றாலும் அலற விட்டுள்ளார்.

பேருந்தில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஆன்ட்டியாக நடித்த சிந்துவும் ரசிக்கவும் கவனிக்கவும் வைக்கிறார். இவருக்கு ஒரு பிரச்சனை வரும்போது அங்கே நுழையும் ‘திருமலை’ படத்தின் இயக்குனர் ரமணா கவனிக்க வைக்கிறார்.

கழுத்தைப் பிடித்துக் கொண்டு அவர் பேசும் வசனங்கள் பலே பலே.. அது போல கிளைமாக்ஸ் காட்சியில் அவர் சொல்லும் டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன.

ஊனமுற்றவராக நடித்திருப்பவரும் அவர் பேசும் வசனமும் நம்மை மறந்து கைதட்ட வைக்கும்.. அல்லாஹ் கோவிந்தா அல்லேலூயா..!!!

டெக்னீஷியன்கள்…

இரண்டு கேங்ஸ்டர் என்பதால் இரு கும்பல் தலைவனையும் மிரட்டலாக காட்ட வேண்டும்.. அதற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன்.

அதிலும் ஒரு பக்கம் பணம் எண்ணிக் கொண்டே மற்றொரு புறம் இதில் துரை யார்.? என கண்டுபிடிக்க கும்பல் தலைவன் போடும் திட்டம் நம்மை பதற வைக்கிறது.

போபோ சசி இசையில் டாலி டாலி, மெரினா பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. கேங்ஸ்டர் படங்களுக்கு பின்னணி இசை தான் பலம். அதை உணர்ந்து மிரட்டலான இசையை கொடுத்துள்ளார்.

வடசென்னை குடிசைப் பகுதி, கிணற்றுக்குள் இருக்கும் சூப்பர் ஏரியா.. அடுத்து ‘காக்கா நகர்’ ஏரியா என ஜோன்ஸ் வி ஆனந்த் கேமரா கைவண்ணம் ரசிக்க வைக்கிறது. அந்த கிணறை காட்டும் காட்சியும் அதில் இருக்கும் ஒரு ஓவியமும் அற்புதமாக இருக்கிறது.

வசனங்கள் பலே… பலே…

அவரு உதவி செய்றது வெளியே யாருக்கும் தெரியாது என்பார்கள்.. அப்புறம் உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது.? இது போன்ற நக்கல் நையாண்டி வசனங்கள் படத்தில் நிறையவே உள்ளன

ஒவ்வொரு ரவுடிக்கும் அவன் உயிர் ஆஸ்கார் அவார்டு’ … ‘ஒரு சிகரெட் 1 கிலோ அரிசி விலை… ‘மதுரைல எங்கய்யா சுனாமி வந்துச்சு.. ஸ்விம்மிங்க போட்டீங்க’ என பல வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன

வழக்கமான வட சென்னை கேங்ஸ்டர் கதை தான் என்றாலும் அதில் வசனங்களை தெறிக்க விட்டுள்ளார். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு என்பதால் முழுமையாக ஒன்ற முடியவில்லை.

ஆக.. இந்த டைனோசர்.. கேங்ஸ்டர் கேம்

Dienosirs aka Dinosaurs review and rating in tamil

More Articles
Follows