NEVER ESCAPE நெவெர் எஸ்கேப் விமர்சனம்

NEVER ESCAPE நெவெர் எஸ்கேப் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NEVER ESCAPE நெவெர் எஸ்கேப் விமர்சனம்

ஸ்டோரி…

நாம் வசிக்கும் இந்த உலகத்திலேயே பாதாள உலகம் ஒன்று இருக்கிறது.. ஆனால் அதை எவராலும் உணர முடியாது.. சில நபர்களால் தன்னுடைய அதீத சக்தியால் உணர முடியும். இதை கருவாக வைத்து உருவான படம் Never Escape..

சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் சில நபர்கள் வெவ்வேறு காரணத்திற்காக தியேட்டருக்கு வருவார்கள்.. அதே போல இந்த படத்தில் சில நபர்கள் போலீஸிடம் இருந்து தப்பிக்கவும் சிலர் அமானுஷ்ய சக்திகளை படம் பிடிக்க Youtuberகளும் திரையரங்கு உள்ளே வருகின்றனர்.

அங்கு தியேட்டர் ஓனர் ராபர்ட் டிக்கெட் கிழித்து கொடுப்பது முதல் அனைத்து வேலைகளையும் பார்க்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர்களால் அங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர முடிகிறது.. அந்த சமயத்தில் அவர்களால் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? அமானுஷ்ய சக்தியை எதிர்த்துப் போராடினார்களா.? அந்த தியேட்டரை விட்டு ஓட முயற்சித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

* ராபர்ட் மாஸ்டர் – தியேட்டர் ஓனர்
* ஆதி பிருத்திவி – ஹரிஷ்
* ஹர்ஷினி – மித்ரா
* கவி ஜெ சுந்தரம் – சி எம்
* உவிஸ் கான் – ரெக்ஸ்
* ராஜி – சாரா
* அகிலா சுந்தர் – அகிலா
* ஜெபின் ஜான் – மரியான்
* பிரனேஸ்வர் – வலோகஇர்
சஷ்டி பிரனேஷ் – கேமராமேன்

படத்தின் ஆரம்பத்தில் வெளியுலகம் காட்டப்படுகிறது.. அங்கு எப்போதும் பார்க்கும் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது.. அதன் பின்னர் தியேட்டருக்குள் நுழைந்த பின்னர் தான் கதையின் வேகம் சூடு பிடிக்கிறது..

இடைவேளைக்குப் பிறகு 2வது பாதியில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தன் நடனத்தைப் போல அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ஆளவந்தான் கமல் கஜினி சூர்யா போல மொட்டை போட்டு கலக்கி இருக்கிறார்… ஒரு சைக்கோ கில்லரைப் போல பாடி லாங்குவேஜிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்..

தாங்கள் புதுமுகங்கள் என்னும் தெரியாத அளவிற்கு நடிப்பை கொடுத்திருக்கின்றனர் சிலர்.. ஆனால் டப்பிங் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அதில் சில குறைகள் தெளிவாக தெரிகிறது..

டெக்னீசியன்ஸ்…

* பேனர் – ராயல் பி ப்ரோடுக்ஷன் ஹவுஸ்
* தயாரிப்பு – நான்சி ஃப்ளோரா
* கதை மற்றும் இயக்கம் – டி ஸ்ரீ அரவிந்த் தேவராஜ்
* இசை – சரண் குமார்
* டைரக்டர் ஆப் போட்டோகிராபி – சந்தோஷ் குமார் எஸ் ஜே
* எடிட்டர் – குரு பிரதீப்
* ஆர்ட் டைரக்டர் – முத்து
* பாடல் – சாஸ்தா, பொன் லெனின் குமார்
* சவுண்ட் மிக்ஸ் – சி ஜெரோம், சரவண தீபன்
* ஸ்டண்ட் – விஜய் ஜாக்குவார்
* நடனம் – ராபர்ட் மாஸ்டர்

இசையமைப்பாளரான சரண்குமார் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

ஒரு திகில் படத்திற்கு உரித்தான கேமரா ஆங்கிள்களை அழகாக காட்டி திகில் ஊட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சாஸ்தி பிரனேஷன்.

சில காட்சிகளில் Hollywood ல் The Shining பட பாணியில் எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார். எடிட்டர் குரு பிரதீப்..

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாகேஷ் திரையரங்கம்.. சமீபத்தில் வெளியான ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படங்கள் திரையரங்கை மையப்படுத்தி பேய் படங்களாக அமைந்திருந்தது.. அந்த பாணியில் இந்த படம் சொல்லப்பட்டிருக்கிறது ஆனாலும் அந்த சாயல் இல்லாத வகையில் திரைக்கதையை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ டி அரவிந்த்ராஜ்.

என்னதான் கதை மற்றும் கேரக்டர் தேர்வு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் உள்ள தொய்வு தான் இந்த படத்தை சற்று தளர்ச்சி அடையச் செய்துள்ளது.

Never Escape movie review

ரூபன் திரை விமர்சனம் 3/5

ரூபன் திரை விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரூபன் திரை விமர்சனம் 3/5

வனப்பகுதி பட கதைகள் என்றாலே அதில் இருக்கும் வளங்களை விற்கும் ஒரு கும்பல் நிச்சயமாக இருக்கும். இதில் அந்த கும்பலுடன் ஆன்மீகத்தை கலந்து இந்த ரூபனை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐயப்பன்.

ஸ்டோரி…

Casting : Vijay Prasad, Gayathri Rema, Charli, Kanja Karuppu, Ramar

ஒரு அடர்ந்த வனப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கிறார்கள் நாயகனும் நாயகியும்.. நாயகன் விஜய் பிரசாத், நாயகி காயத்ரி ரெமா.. இவர்களுக்கு குழந்தை இல்லை.. எனவே ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் இவர்களை யாரும் அழைப்பதில்லை.. சபரிமலைக்கு மாலை போட்டால் கூட யாரும் பூஜையிலும் பங்கேற்பதில்லை..

இதனால் வெறுத்து ஊரை விட்டு ஒதுங்கி / ஒதுக்கப்பட்டு வாழ்கிறார்கள். இப்படியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நாயகனுக்கு திடீரென காட்டில் ஒரு குழந்தை கிடைக்கிறது.. அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறார்

இது ஒரு புறம் இருக்க காட்டில் உள்ள யானை சிங்கம் புலி உள்ளிட்ட மிருகங்களை வேட்டையாடி வெளிநாடுகளுக்கு விற்று பிழைப்பு நடத்துகிறார் வில்லன்.

இதனை கண்டுபிடிக்கும் நாயகனை அவர்கள் பழி தீர்க்க நினைக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஊருக்குள் புலி வந்து விட்டதாக எல்லாரையும் பயமுறுத்துகின்றனர்.

எனவே ஊருக்குள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என போலீஸ் கட்டு கட்டுப்பாடு விதிக்கிறது.. இதனால் பிழைப்புக்காக நாயகனால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் மர்மமான முறையில் 4 – 5 பேர் கொல்லப்பட கொலைப்பழி நாயகன் மீது விடுகிறது.

இதன்பிறகு என்ன நடந்தது.? நாயகன் நீதியை நிரூபித்தாரா? வில்லன் கோஸ்டி என்ன செய்தது.? ஊருக்கு மீண்டும் வந்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் பிரசாத்.. வீரமான நாயகன் விவேகமான கணவன் என அழகாகவே செய்திருக்கிறார். முகம் முழுவதும் தாடியை வைத்து முகத்தில் உணர்ச்சிகளை மறைத்து விட்டார்.. கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்..

நாயகி காயத்ரிக்கு பெரிதாக வேலை இல்லை. கொடுத்து பாத்திரத்தை தன்னால் முடிந்தவரை நிறைவாக செய்ய முற்பட்டிருக்கிறார்.. அதே சமயத்தில் புலி ஊருக்குள் வந்த சமயத்தில் கணவன் வீட்டில் இல்லை என அவர் துடித்துடிக்கும் காட்சி நடிப்பை பாராட்டலாம்.. ஆனால் கணவனை இவர் காப்பாற்றாமல் அடுத்தவர் உதவியை மட்டும் எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பது ஏனோ.?

பெரும்பாலும் சார்லி அவரது நடிப்பில் சபாஷ் பெற்று விடுவார்.. இந்த படத்தில் அவருக்கான ஸ்கோப் மிகவும் குறைவு.

விஜய் டிவி புகழ் ராமரை பார்த்ததும் தியேட்டரில் கைதட்டல் கேட்கிறது.. ஆனால் அவரது காமெடிக்கு நம்மால் எந்த கைதட்டலும் கொடுக்க முடியவில்லை. அதுபோல கஞ்சா கருப்பு நடிப்பிலும் நகைச்சுவை இல்லை.. அவரது குரல் கூட அவரே கொடுத்ததாக தெரியவில்லை..

டெக்னீசியன்ஸ்…

Directed By : Ayyappan

Music By : Aravindbabu

Produced By : AKR Future Films – K.Arumugam, Elangkarthikeyan, M.ராஜா

ராஜு ராஜேந்திரனின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. அடர்ந்த காட்டுக்குள் தன் கேமராவை நுழைத்து ஒரு அழகான ஆன்மிகம் கலந்த ஆக்சன் படத்தை கொடுக்க உதவி புரிந்திருக்கிறார்.

அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்களை திரும்ப கேட்கலாம். பின்னணி இசை மிரட்டல் ரகம்.. சில இடங்களில் ஓவர் இரைச்சலை கொடுத்திருப்பதையும் இசை அமைப்பாளர் கவனித்திருக்கலாம்..

பல ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் படங்கள் ஐயப்பன் படங்கள் என நிறைய படங்கள் வந்திருந்தன.. இவற்றையெல்லாம் ஒரு சீசனில் மக்களும் பார்த்து ரசித்தனர்.. ஆனால் தற்போது குறைந்துவிட்டது.

இந்த படத்தில் ஆன்மீகத்தை மையப்படுத்தி ஐயப்பன் சபரிமலை சீசனை கொண்டாடுவது போல காட்சிகள் நிறைய வைத்திருக்கின்றனர்.. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல் எங்கெங்கோ சென்று திடீரென கிளைமாக்ஸ்சில் ஐயப்பனை தரிசிப்பதாக காட்சிகள் வைத்து விட்டது ஒரு குழப்பமான திரைக்கதையை காட்டுகிறது.

அதேசமயம் ஆன்மீகத்துடன் கமர்சியல் விஷயங்களையும் கலந்து பேண்டஸியான ஒரு திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் ஐயப்பன் பெயரிலையே ஐயப்பன் சாமி இருப்பதால் அதற்கு உயிரூட்டும் வகையில் கிட்டத்தட்ட 20 நிமிட கிளைமாக்ஸ் காட்சியை கொடுத்து இருக்கிறார்.

Rooban movie review

சிறகன் விமர்சனம் 3.5/5.. சிறகடிக்கலாம்

சிறகன் விமர்சனம் 3.5/5.. சிறகடிக்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறகன் விமர்சனம் 3.5/5.. சிறகடிக்கலாம்

சிறகன் என்றால் என்ன? என்று கண்டிப்பாக ரசிகர்களுக்கு கேட்க தோன்றும்.. ஒருவேளை மனிதனுக்கு சிறகுகள் இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றலாம்.. சிறகன் என்றால் அது ஒரு வகையான பட்டாம்பூச்சியின் பெயரை குறிப்பதாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.

தன் மீது நம்பிக்கை வைத்து தன் படைப்பு மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஸ்வராஜ்.

ஸ்டோரி…

ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதை விசாரிக்க இன்ஸ்பெக்டர் வினோத் வருகிறார். இந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில் எம்எல்ஏ ஜீவா ரவியின் மகன் காணாமல் போகிறார்.

இதனைத் தேடும் வேட்டையில் போலீஸ் இறங்கி வரும் நிலையில் அடுத்து ஜீவா ரவியும், அவரது வக்கீல் கஜராஜின் உதவியாளரும் யாரோ ஒருவரால் கொல்லப்படுகிறார்கள்.

எனவே கஜராஜ் இன்ஸ்பெக்டர் வினோத்திடம் புகார் அளிக்கிறார்… அதன் பிறகு நடந்தது என்ன?

எல்லாக் கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்தாரா? கொலையாளியின் நோக்கம் என்ன? கொல்லப்பட்டவர்களின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Casting : Gajaraj, Jeeva Ravi, Anand Nag, Vinoth GT, Fafzi Hithaya, Harshitha Ram, Rayil Ravi, Poovendhan, Malik, Balaji

கஜராஜ் மற்றும் ஜீவா ரவி இருவரும் தான் கதையின் நாயகர்கள்.. நிறைய படங்களில் நடித்துள்ள இவர்களது அனுபவம் இவரது கேரக்டர்களுக்கு ஒரு சிறப்பான அந்த அங்கீகாரத்தை கொடுக்கும்..

மகளைக் கொன்றவர்களுக்காக பழி வாங்கும் கஜராஜ் கேரக்டர் கம்பீரமான ஒன்றாகும்..

இடைவேளைக்கு முன்பே பாதி த்ரில் கதை சொல்லப்பட்டாலும் இடைவேளைக்கு பின்பு கதை நகரும் வேகம் விறுவிறுப்பை கூட்டுகிறது.

பவுசியாவின் நடிப்பு பலே போட வைக்கிறது.. மாணவனுக்கு பாடம் நடத்துவது மட்டுமல்லாமல் வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற இவரது துணிச்சல் சிறப்பு..

பவுசியாவின் சக ஆசிரியையாக வரும் ஹர்ஷிதா ராம் அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.

பிஞ்சிலே பழுத்து விட்டது எனச் சொல்வோம்.. அதுபோல பிஞ்சிலேயே முதிர்ச்சியான மாணவனாக பாலாஜி.. பதட்டம் வரும்..

ராணுவ வீரராக ஆனந்த் நாக்.. இவரது கேரக்டர் எதிர்பாராத ஒன்று.. இவரும் கஜராஜும் பேப்பரில் எழுதி பேசிக் கொள்ளும் ஒரு சீன் செம சீன்..

அதே சமயம் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை முயற்சிக்கும்போது ஒரு ராணுவ வீரன் எப்படி செயல்பட்டு இருக்க வேண்டும்? ஆனால் ஜன்னலை பிடித்துக் கொண்டு அழும் காட்சி நிச்சயம் ஒரு ராணுவ வீரனுக்கு அழகு அல்ல.?!

பிற பாத்திரங்களில் வரும் ரயில் ரவி, பூவேந்தன், ஆனந்த் வெங்கட் உள்ளிட்டோரும் கவனம் பெறும் நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

தங்கையை இழந்து விட்டு இன்ஸ்பெக்டர் உடைய உடுத்திக் கொண்டு சிறப்பாக பணிபுரியும் நேர்மையான அதிகாரியாக வினோத்.. உடன் வரும் மாலிக் கேரக்டர் கச்சிதம்..

டெக்னீசியன்ஸ்…

Directed By : Venkateshvaraj.S

Music By : Ram Ganesh.K

Produced By : Durga Fedrick

ராம் கணேசன் பின்னணி இசை கவனம் பெறுகிறது.. ‘எனை மறந்தேனே’ பாடல் இதம்..

சேட்டை சிக்கந்தர் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. காட்சிகளை அழகாக எதார்த்தமாக கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.

வேறு எவரேனும் இந்த படத்தை படத்தை தொகுத்து இருந்தால் நிச்சயம் ரசிகர்களை குழப்பி இருப்பார்கள்.. ஆனால் இயக்குனரே ஒரு எடிட்டராக பணிபுரிந்து முன்னும் பின்னும் தாவி ஓடும் திரைக்கதைக்கு அழகான வடிவம் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க எடிட்டிங் செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ்வராஜ்.

Siragan movie review

ஜனமும் பணமும்..; வல்லவன் வகுத்ததடா 3.25/5 விமர்சனம்

ஜனமும் பணமும்..; வல்லவன் வகுத்ததடா 3.25/5 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வல்லவன் வகுத்ததடா 3.25/5 விமர்சனம்..

கீதாச்சாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை முன்வைத்து ஒரு ஐந்து அதிகாரங்களாக இந்த படத்தை கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.

1) எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

2) எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

3) உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?

4) எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

5) எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது.

இந்த கருத்துக்களை முன்வைத்து பணம் மட்டுமே மனித வாழ்க்கைக்கு அடிப்படை என்பதையும் பணத்தால் ஒருவரின் வாழ்வில் வளர்ச்சியும் அடுத்தவர் வாழ்வில் வீழ்ச்சியும் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஐந்து கதைகளை இணைத்து ஹைபர் லிங்க் படமாக தந்திருக்கிறார்

ஸ்டோரி…

1) தேஜ் சரண்ராஜ் ரஜின் ரோஸ் இருவரும் நண்பர்கள்.. கொள்ளை அடிப்பது கார் திருடுவது இவர்ளின் தொழில்..

2) வட்டி ஆசாமி பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. வட்டி சரியான நேரத்தில் வரவில்லை என்றால் போலீஸ் என்றாலும் பொளந்து கட்டுவார்.

3) காதல் என்ற பெயரில் வசதியான ஆண்களை வீழ்த்தி அவர்களிடம் பணம் பறித்து தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் நாயகி அனன்யா.

4) இன்ஸ்பெக்டர் நீதிமணி.. நிதி மணி என்று கூட வைத்திருக்கலாம்.. அந்த அளவிற்கு பணத்தாசை பிடித்த காவல்துறை அதிகாரி. போலீஸ் ஸ்டேஷனிலே காணிக்கை என்ற பெயரில் வசூலிக்கும் வசூல்ராஜா இவர்..

5) கால் டாக்ஸி ஓட்டும் அடுத்த நாயகி சுவாதி மீனாட்சி. முறையான வேலை கிடைக்காத இவரின் தந்தை ஒரு விபத்தில் காயம் அடைய சிகிச்சைக்காக 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

இவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஹைப்பர்லிங்க் கதையாக தொகுத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இறுதியில் என்ன நடந்தது.?

கேரக்டர்ஸ்…

Tej Charanraj (as) Chiranjeevi
Rajesh Balachandiran (as) Neethimani
Aananya Mani (as) Agalya
Swathi Meenakshi (as) Subhatra Vikram Adhitya (as) Kuberan
Regin Rose (as) Chakkaravarthi

ஓரிரு முகங்களை தவிர மற்ற அனைவருமே புது முகங்கள் தான்.. ஆனால் நடிப்புக்கு ஏற்றவாறு தங்கள் கேரக்டரில் பளிச்சிடுகின்றனர்.. எங்கும் மிகை இல்லாத நடிப்பை கொடுத்து நம்மை படத்துடன் ஒன்றை வைக்கின்றனர்.

இது எங்க நிலம் எங்கள் அப்பாவின் தவறான சகவாசத்தால் இந்த இடத்தை இழந்து விட்டோம்.. இதை வாங்கின பிறகு தான் நம்ம கல்யாணம் என்று ஒவ்வொரு ஆண்களையும் அனன்யா ஆட்டையை போடுவது வேற லெவல் ரகம்.. ஆனால் இவரையும் காதலிக்கும் நேர்மையான நபரும் உண்டு..

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரன்.. வழக்கமான ‘மாமூல்’ போலீஸ்.. பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் பணம் கொடுப்பவர் பக்கம்தான் நான் நிற்பேன் என கம்பீரம் காட்டியிருக்கிறார். இவரது சிரிப்பும் இவரது ஹேர் ஸ்டைலும் கவனிக்க வைக்கிறது.

தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ்.. இருவரும் கார் திருடுவது என சுற்றினாலும் ஒரு கட்டத்தில் பணத்திற்காக நண்பனை போட்டுத் தள்ளுவது பேராசையின் உச்சம்.

பெரும்பாலும் பணத்திற்காக ஓடும் நெகட்டிவ் மனிதர்களை காட்டி பாசிட்டிவான நேர்மையான கேரக்டராக டிரைவர் சுவாதியின் கேரக்டர்.. இவரது நேர்மைக்கு கிடைத்த வெகுமதியாக கோடிக்கணக்கில் பணம் இவர் கையில் வருவது பாராட்டுக்குரியது.. ஆனால் நேர்மைக்கு இந்த காலம் தகுமா என்பது இயக்குனரே?

ஸ்மார்ட் பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. பெரும்பாலும் பைனான்சியர்களை கொடூரமாகவே காட்டுவார்கள்.. இதில் இவர் ஸ்மார்ட்.. அவசரத்திற்காக பணம் பெறுபவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடிபவர்களுக்கு இவரைப் போன்ற பைனான்சியர்கள் தேவை தான்..

இப்படியாக ஒவ்வொரு கேரக்டரும் பாராட்டப்படும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டெக்னீசியன்ஸ்…

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். அஜய் படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

சகிஷ்னா பின்னணி இசை திரில்லர் படத்திற்கான உணர்வை கொடுத்திருக்கிறது..

கீதாச்சாரக் கதை நல்ல கேரக்டர்கள் என இருந்தும் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

போக்கஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘வல்லவன் வகுத்ததடா’.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு முடிவு கொடுக்கப்பட்டு உள்ளது.. அதே சமயத்தில் நேர்மையாக வாழ்ந்த சுவாதிக்கு கடவுள் துணை இருப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ஆன்மீகவாதிகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்பலாம்

Vallavan Vaguthadhada movie review

Romeo ரோமியோ திரை விமர்சனம்

Romeo ரோமியோ திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Romeo ரோமியோ திரை விமர்சனம்

விஜய் ஆண்டனி, மிருணாளினி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்டோரி…

குடும்பத் தேவைக்காக வருமானத்தைத் தேடி வெளிநாட்டு சென்று பணிபுரிகிறார் விஜய் ஆண்டனி.. வருடங்கள் சென்று கொண்டே இருந்தாலும் தனக்கு பிடித்த ஒரு பெண்ணை தேடி காதலித்து திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அது திருமணமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் 35 வயதை கடக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தென்காசிக்கு தன்னுடைய உறவினர் மரணத்திற்காக வரும் விஜய் ஆண்டனி அங்கு நாயகி மிருணாளினியை சந்திக்கிறார்.

தான் தேடியே கனவு காதலி இவள் தான் தன்னுடைய மனைவி என்ற ஏக்கத்தில் மிருணாளினியை காதலிக்க தொடங்குகிறார்.

ஆனால் மிருணாளினிக்கு திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.. மிகப்பெரிய நடிகையாக வர வேண்டும் என்பதற்காகவே பணக்கார கனவில் வாழ்கிறார்..

ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் நாயகி மிருணாளினி.

ஆனால் தான் நினைத்த வாழ்க்கை அமையவில்லை என்ற காரணத்தினால் விவகாரத்து கேட்கிறார் மிருணாளினி..

தான் ஆசைப்பட்டபடி காதலி மனைவியாக அமைந்து விட்டாள் என்று உருகும் விஜய் ஆண்டனி அதன் பின்னர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நீண்ட நாட்களாகவே முழுக்க முழுக்க ரொமான்டிக் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டவர் விஜய் ஆண்டனி.. இந்தப் படத்தில் அதில் பாஸ்மார்க் பெற்றும் விடுகிறார்.. நிறைய காட்சிகளில் இப்படி ஒரு கணவர் கிடைக்க மாட்டாரா என பெண்களே ஏங்கும் அளவிற்கு நடிப்பையும் வாரி வழங்கியிருக்கிறார்.

நாயகி மிருணாளினி மெச்சூரிட்டியான நடிப்பில் வெளுத்துக்கட்டி இருக்கிறார்..

விஜய் ஆண்டனியின் காதலுக்கு ஐடியா மணியாக யோகி பாபு.. சில இடங்களில் டைமிங் காமெடியில் கலகலக்க வைக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், இளவரசு, ஷாரா ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

இயக்குனர் – விநாயக் வைத்தியநாதன்.

இசை – பரத் தனசேகர்

ஒளிப்பதிவு – பருக் ஜே பாஷா

பரத் தனசேகர் இசையில் செல்லக்கிளி உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. அதிலும் விஜய் ஆண்டனி ‘வெத்தல…’ பாடலுக்கு போட்ட ஆட்டம் நிச்சயம் ரசிகர்களையும் ஆட வைக்கும்..

ஒளிப்பதிவாளர் பருக் ஜே பாஷா தன் பணியில் பக்கா.. வைத்திருக்கும் இவரது கேமராக்கள் ஆங்கிள் அனைத்தும் படத்துடன் ஒன்ற வைக்கிறது..

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்.. என்ற பழமொழியை பார்த்து வந்திருக்கிறோம்.. இதில் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண் என்ற வாழ்க்கை முறையை பார்க்கலாம்..

சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்களின் வாழ்க்கையும் மனைவிக்காக விட்டுக் கொடுத்தும் செல்லும் ஆண்களின் உணர்வுகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன்..

திரைக்கதையில் காட்சியமைப்பிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அல்லது காட்சி நீளத்தை ட்ரிம் செய்திருந்தால் இந்த ரோமியோ இன்னும் ரசிக்க வைப்பான்..

Romeo movie review

DeAr டியர் திரைப்பட விமர்சனம்

DeAr டியர் திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DeAr டியர் திரைப்பட விமர்சனம்

வெள்ளிக்கிழமை என்றாலே புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்.. இது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜிவி பிரகாஷின் படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷின் படங்களும் ரிலீஸ் ஆவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்னலாம்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து இன்று ரிலீஸ் ஆகி உள்ள படம் டியர்.

Deepika + Arjun = DeAr

இப்படத்தின் விமர்சனம் பார்ப்போம்…

கடந்த 2023 ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் ‘குட் நைட்’ இந்த படத்தில் ஹீரோ குறட்டை விடும் நபராக நடித்திருப்பார்.. அதையே கொஞ்சம் உல்ட்டா கதையாக டியர் படத்தில் ஐஸ்வர்யா குறட்டை விடும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

மனைவியின் குறட்டையால் கணவன் ஜி வி பிரகாஷ் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் தான் இந்த படத்தின் கதை.

ஸ்டோரி..

ஒரு செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார் ஜி.வி பிரகாஷ்.. இவருக்கு பெரிய டிவி நிறுவனத்தில் பணிபுரிந்து பெரிய பெரிய விஐபி-களைப் பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

இந்த சூழ்நிலையில் நாயகனின் அம்மா ரோகிணி அண்ணன் காளி வெங்கட் இருவரும் அவரை கட்டாயப்படுத்தி ஐஸ்வர்யா உடன் திருமணம் செய்து வைக்கிறார்கள்.. அப்போதுதான் உறங்கும் போது மனைவி ஐஸ்வர்யாவுக்கு மிகப்பெரிய சத்தத்துடன் குறட்டை விடும் பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரமாக உறங்க வேண்டும்.. அப்போதுதான் வேலையில் முழு கவனத்துடன் செயல்பட முடியும் என நினைக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இந்த சூழ்நிலையில் தான் மனைவியின் குறட்டை சத்தத்தால் இவரது வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்..

ரெபெல், கள்வன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் மூன்றாவது வாரமாக வந்திருக்கும் படம் தான் இந்த டியர்… தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை.. ஆனால் உடல் மொழியிலும் நடிப்பிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.. செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கும் பிரகாஷ் தாடி மற்றும் தலைமுடியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்..

பெரும்பாலும் பெண்கள் குறட்டை விடுவதில்லை.. ஆனால் குறட்டை விடும் பெண்ணாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவை நிச்சயம் பாராட்டலாம்.. தனக்கு உண்டான பிரச்சனையை தீர்க்க இவர் பாடுபடும் வேதனைகள் சிந்திக்கவும் வைக்கிறது..

ஐஸ்வர்யாவின் அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக இளவரசு.. யதார்த்தமான நடிப்பில் கவர்கின்றனர்..

ஜிவி பிரகாஷின் தந்தையாக தலைவாசல் விஜய்… தாயாக ரோகினி அண்ணனாக காலி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.. மற்ற கேரக்டர்களுக்கு அட்வைஸ் செய்யும் நபராக இவர்கள் நடித்திருக்கின்றனர்.

அதிலும் தன் மனைவியை தன் கட்டுக்குள் அடிமையாக வைத்திருப்பவராக காளி வெங்கட் நடித்திருக்கிறார்.. இவரது மனைவியாக நடித்திருக்கும் நந்தினி கேரக்டர் நச் என்று பளிச்சிடுகிறது..

ஓடிப்போன தந்தை குடும்பத்தில் ஒரு அண்ணனாக இருந்து தம்பி மற்றும் குடும்பத்தை கவனிக்கும் காளி வெங்கட்டின் பாத்திரம் கனமான பாத்திரம்..

மூத்த மருமகளாக நந்தினி இரண்டாவது மருமகளாக ஐஸ்வர்யா.. இருவரும் இந்த குடும்பத்திற்கு கிடைத்த வரம் என்பது போல காட்சிப்படுத்தி இருப்பது மாமியார்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சந்தோஷத்தை தரும்..

விமானத்தில் பறக்கும் போது ஐஸ்வர்யாவிடும் குறட்டை அந்த கற்பனை பூகம்பம் நிச்சயம் ரசிகர்களை சிரிக்க வைக்கும்..

டெக்னீசியன்ஸ்…

ஜிவி பிரகாஷ் இசையில் ஓரிரு பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. இன்னும் பாடல்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.. பின்னணி இசை வழக்கம் போல சிறப்பு.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.. அழகான ஊட்டியை இன்னும் அழகாக காட்டி இருக்கிறது இவரது கேமரா.

செத்தும் ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த ரவிச்சந்திரன் தான் இந்த ஃபீல் குட் படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.

குறட்டையை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் அவர் சென்று விடுவதால் படத்தை முடிப்பதற்குள் கொஞ்சம் தடுமாறி இருப்பது தெரிகிறது.. இடைவேளைக்குப் பிறகு வரும் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் எடிட்டர்..

கணவன் மனைவி உறவுக்கு இடையே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுப்பது எப்படி என்பதையும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு..

Dear movie review

More Articles
Follows