மாநகரம் விமர்சனம்

மாநகரம் விமர்சனம்

நடிகர்கள் : சுந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெசன்ட்ரா, சார்லி, ராம்தாஸ் (முனிஷ்காந்த்), மதுசூதனன் மற்றும் பலர்.
இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
இசை : ஜாவேத் ரியாஸ்
ஒளிப்பதிவாளர் : செல்வகுமார் எஸ்.கே.
எடிட்டர்: பிலோமின் ராஜ்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பு : பொன்டேன்ஷியல் ஸ்டூடியோஸ் எஸ்.ஆர். பிரபு

maanagaram stills

கதைக்களம்…

சென்னைக்கு ஐடி கம்பெனியில் வேலை தேடி வரும் ஸ்ரீ. கார் டிரைவர் வேலைக்கு வரும் சார்லி. அதே கம்பெனியில் பணிபுரியும் ரெஜினா. மற்றும் இவரின் காதலன் சுந்தீப் இவர்கள் ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் தாதா மதுசூதனன், காமெடி ரவுடி முனிஷ்காந்த், நேர்மையற்ற போலீஸ் அதிகாரி.

இதனிடையில் தாதா மதுசூதனின் சிறுவயது மகன் கடத்தப்படுகிறான்.

இவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பிரச்சினைகளை சந்திக்க, அந்த அனைத்தும் பிரச்சினைகளையும் ஒரே முடிச்சில் கொண்டு வந்து, அதன்பின் ஒவ்வொன்றாய் இயக்குனர் தீர்வு சொல்லும் போது நம்மை படபடக்க வைக்கிறார்.

இந்த ட்விஸ்ட்கள் அனைத்தையும் நாம் எதிர்பார்க்காத வண்ணம் கொடுத்திருப்பது டைரக்டர் டச்.

maa
கதாபாத்திரங்கள்..

ஸ்ரீ மற்றும் சுந்தீப் இருவரும் நாயகர்கள். ஸ்ரீ கிராமத்து இளைஞர். நகரத்து வாழ்க்கை நரகம் என்றாலும் வேறுவழியின்றி வசிக்கிறார். அதை தன் நடிப்பிலும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீ.

தன்னை ஏற்காக ஒரு பெண் முகத்தில் ஆசிட் ஊற்றிய ஒருவனுக்கு ஆசிட் மூலமே பழிவாங்கும் சுந்தீப் சூப்பர். எவருக்கும் பயப்படாமல் நேர்மையாக துணிந்து வாழும் இவரைப் போன்றோர் மாநகரங்களுக்கு தேவை.

இந்த சீரியஸ் சப்ஜெக்ட்டில் காமெடி சிக்ஸர் அடித்துள்ளார் ‘முண்டாசுப்பாட்டி’ ராம்தாஸ்.

க்ளைமாக்ஸில் இவர் போலீஸிடம் மாட்டிக் கொண்டு செய்யும் வார்த்தை ஜால சேட்டைகள் செம ரிலாக்ஸ்.

இறுதியாக முனிஷ்காந்த் பணத்தை விட்டு சென்று, நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

எமன் படத்தில் முத்திரை பதித்த சார்லி இதிலும் அதிகம் ஸ்கோர் செய்கிறார். தன் ஆஸ்துமா நோய் மகனுக்காக ஏங்குவதும், சென்னை ரூட் தெரியாமல் திண்டாடுவதும் ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் ஐடி எச்ஆர். (Human Resource) ரெஜினா மற்றும் மதுசூதனன் கேரக்டர்களும் ரசிக்க வைக்கிறது.

maanagaram team

வசீகரிக்கும் வசனங்கள்…

“இந்த சென்னை சிட்டிக்கு பொழப்பு தேடி வரவங்க இந்த ஊரை திட்டிக்கிட்டேதான் இருப்பாங்க. ஆனா ஒருத்தனும் இந்த ஊரை விட்ட போக மாட்டானுங்க”,”

நடு ரோட்டுல போட்டு ஒருத்தன அடிச்சா ஏன்னு எவனும் கேட்கிறது இல்ல. நாம சரியா கேட்கிறோமோ? ஆனா நாமளும் குறைதானே சொல்றோம்.

உள்ளிட்ட பல வசனங்கள் சென்னை வாசிகளுக்கு உறுத்தலை ஏற்படுத்தும்.

maanagaram heros

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் எந்தவொரு காட்சியையும் ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாது என்று இயக்குனர் நினைத்திருப்பார் போல.

படத்தின் டைட்டில் கார்டு முதல் இறுதிவரை சீன் நுனியில் உட்கார வைத்துள்ளார்.

இதுபோன்ற டைட்டில் கார்டு டிசைன்ஸ் நம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும். (மிஸ் பண்ணீடாதிங்க.. பீல் பன்னுவீங்க..)

இயக்குனர் லோகேஷ் கனகராஜை சபாஷ் கனகராஜ் என்று தாராளமாக அழைக்கலாம். அவ்வளவு பொருத்தம்.

மாநகரம்… மெகா விருந்து

Comments are closed.