தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், கவின், ஐஸ்வர்யா தத்தா, ரியோ ராஜ், சௌந்தரராஜா, அருள்தாஸ், விஜய்முருகன், போஸ்டர் நந்தகுமார், சரத் லோகிஸ்த்தவா, ஆடுகளம் நரேன், யோகி பாபு மற்றும் பலர்.
இயக்கம் : எஸ்ஆர். பிரபாகரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : சிவக்குமார் விஜயன்
எடிட்டர்: எம் வெங்கட்
பி.ஆர்.ஓ. : டைமண்ட் பாபு
தயாரிப்பு :சத்யஜோதி பிலிம்ஸ்
கதைக்களம்…
படம் ஆரம்பித்த சில நிமிங்களிலேயே அமைச்சர் போஸ்டர் நந்தகுமார் அவர்கள் திருச்சியை கட்டி ஆளும் தாதா சரத்லோகிதஸ்வாவை அருள்தாஸிடம் சொல்லி கொல்ல சொல்கிறார்.
சரத் லோகிதஸ்வா கொல்லப்பட அவருக்கு நெருக்கமான விஜய்முருகன் அந்த இடத்திற்கு வருகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ரவுடியாக விக்ரம் பிரபு இருக்கிறார்.
இந்நிலையில் சரத் லோகிதஸ்வாவின் மகளுக்கு பாதுகாப்பா இருக்க வேண்டிய சூழ்நிலையில் விக்ரம் பிரபு பாதுகாவலராக இருக்கிறார்.
அதன்பின்னர் அவர்களுக்குள் காதல் உருவாகிறது. இதனால் விஜய்முருகனே விக்ரம் பிரபுக்கு எதிரியாகி விடுகிறார்.
மற்றொரு புறம் விக்ரம் பிரபுவை கொல்ல அருள்தாஸ் கூட்டமும் அலைகிறது.
இந்த இரண்டு கும்பலிடம் இருந்து தன்னையும் தன் காதலியையும் இந்த சத்ரியன் எப்படி காப்பாற்றுகிறார் என்பேதே இதன் மீதிக் கதை.
கேரக்டர்கள்…
வாகா, வீர சிவாஜி என துவண்டு இருந்த விக்ரம் பிரபு இப்படத்தில் மூலம் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறார் எனலாம்.
சீரியசான கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். மஞ்சிமா காதலை சொல்லும் போதெல்லாம் விலகிப் போவதில் ரசிக்க வைக்கிறார்.
ஹோம்லியாக வந்து ரசிகர்களை கவர்கிறார் மஞ்சிமா மோகன். அவரது பேச்சும் பார்வையும் ரசிகர்களை இழுக்கும்.
சுடிதார், பாவடை தாவணி என திருச்சி பெண்ணாக வந்து திரும்பி பார்க்க வைக்கிறார்.
சில காட்சிகளில் ரொம்ப டல்லாக இருக்கிறாரே? கண் அருகே கருவளையம் வேறு. என்ன ஆச்சு மஞ்சிமா? மஞ்சள் பூசலையா?
ரியோ ராஜ் மற்றும் கவின் ஆகியோரின் கேரக்டர்கள் சிறப்பு.
ஐஸ்வர்யா தத்தா பாவம். அழகாக வந்து நின்று செல்கிறார்.
அருள்தாஸ் மற்றும் போஸ்டர் நந்தகுமார் கேரக்டர்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
சௌந்தரராஜா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோருக்கு இன்னும் சிறப்பான கேரக்டரை கொடுத்திருக்கலாம்.
பல படங்களில் மிரட்டிய சரத்லோகிஸ்தவா இதில் ஒரே காட்சியில் விடைபெறுகிறார். இவரைப் போலவே யோகிபாபு கேரக்டரும் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
யுவன் சங்கர்ராஜா பின்னணி இசையில் மிரள வைக்கிறர். மைனா இரண்டு பாடலும் வைரமுத்து வரிகளும் ரசிக்க வைக்கிறது. விஜய் யேசுதாஸ் குரல் இப்பாடலுக்கு கூடுதல் பலம் கொடுக்கிறது.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் திருச்சி நகரை சுற்றி பார்க்க ஆசைவருகிறது.
வெங்கட் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். யோகிபாபு கேரக்டர் படத்தில் ஒன்றையும் செய்யவில்லை. பின்பு ஏன் அந்த காட்சிகள்.?
இயக்கம் பற்றிய அலசல்….
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் கதையை கொண்டு செல்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.
வசனங்கள் பக்கபலமாய் அமைந்திருக்கிறது.
ஆனால் பல படங்களில் பார்த்த கதை என்பதால் சலிப்பு வருகிறது. ரவுடி திருந்த நினைப்பான். ஆனால் மற்றொரு கும்பல் அவனை விடாது. பின்னர் மீண்டும் கத்தி எடுப்பான்? என்பதையெல்லாம் ட்விஸ்ட் வைத்தாவது சொல்லியிருக்கலாமே பாஸ்..?
விறுவிறுப்பான ரவுடி ஸ்டோரிக்கு இன்னும் வேகம் கூட்டியிருந்தால் சத்ரியன் சதம் அடித்திருப்பான்.
சத்ரியன்… சவுண்ட் ஏத்தியிருக்கலாம்