ட்ராமா விமர்சனம்..; சிங்கிள் ஷாட் சினிமா

ட்ராமா விமர்சனம்..; சிங்கிள் ஷாட் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா பிரேம்குமார், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் “ட்ராமா

ஒன்லைன்…

ஒரு காவல் நிலையத்தில் ஒரு இரவில் நடக்கும் கதை. அந்த கொலையை செய்தவர் யார்? என்பது பற்றிய விசாரணையே இந்த படம்

இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. மலையாள இயக்குனர் அஜு குளுமலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

கதைக்களம்…

காவல்நிலையத்தில், ஜெய்பாலா புதிதாக எஸ் ஐ ஆக பொறுப்பேற்கிறார். அங்கு ஸ்டேஷனில் ஏட்டாக சார்லி.

ஜெய்பாலாவின் காதலியாக காவ்யா பாலு.

ஒரு நாள் காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று தஞ்சம் கொள்ள வருகிறது.

அப்போது சார்லி கொலை செய்யப்பட்டு ஸ்டேஷனில் கிடக்கிறார்.

அங்கு இருக்கும் யாரோ ஒருவரால் தான் சார்லி கொலை செய்யப்பட்டிருக்கிறார், யார் அவர்.? என்பதை விசாரிக்க வருகிறார் கிஷோர்.

குற்றவாளி யார்? கிஷோர் கண்டுபிடித்தாரா.? எதற்காக சார்லி கொலை செய்யப்பட்டார் என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், காவ்யா பெல்லு ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம்.

ஆனால் கிஷோரின் விசாரணையை இன்னும் தெளிவுபடுத்தி இருக்கலாம். அந்த அறைக்குள் என்ன நடக்கிறது? என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே அமைந்துவிட்டது.

ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இப்படம் சற்று மாறுபட்டு நிற்கிறது.

இதனால் ஒளிப்பதிவில் போதுமான தரம் இல்லை. ஆனால் நிறைய ரிகர்சல் செய்துள்ளதால் நடிகர்களின் நடிப்பை நிச்சயம் பாராட்டலாம்.

காமெடி என்ற பெயரில் சில காட்சிகளில் காம நெடி அதிகமாக இருக்கு. , அதை தவிர்த்திருக்கலாம்.

ஓர் இரவு.. ஒரு கொலை ஒரு ஸ்டேஷன் என வித்தியாசமான பாணியில் இந்த படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர். அதுவும் சிங்கிள் சாட்டில் அதை செய்திருப்பது பாராட்டுக்குரியது

பின்னணி இசை படத்திற்கு பலம்.

ஆக ட்ராமா.. சிங்கிள் ஷாட் சினிமா

ஆதார் விமர்சனம் 3.25/5.; திருடனே திருந்தினாலும் திருந்தாத போலீஸ்

ஆதார் விமர்சனம் 3.25/5.; திருடனே திருந்தினாலும் திருந்தாத போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ & ‘திருநாள்’ படங்களை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ் நடித்துள்ள படம் ‘ஆதார்’.

இவருடன் ரித்விகா, அருண்பாண்டியன் இனியா, உமா ரியாஸ்கான், திலீப் உள்ளிட்டோர் நடிக்க ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக சசிகுமார் தயாரித்துள்ளார்.

ஒன்லைன்…

ஜெய் பீம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் போலீசின் மறுபக்கம் திரைப்படம் ஆகியுள்ளது

கதைக்களம்…

பிறந்து சில தினங்களே ஆன பச்சிளங் குழந்தையோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் கருணாஸ். தன் மனைவியை காணவில்லை என அவர் புகார் அளிக்கிறார்.

கம்ப்ளைன்ட் கொடுத்து பல நாட்கள் ஆகியும் அவரின் மனைவி கிடைக்கவில்லை. உன் மனைவி கள்ளக் காதலருடன் ஓடிப்போய் விட்டாள்” என போலீஸ் இவர் மீது குற்றம் சுமத்துகிறது. இது ஒரு புறம்…

மற்றொரு புறம்.. இந்த புகாருக்கு முன்பு ஒரு காஸ்ட்லியான காரை ஒரு பெண் (நீதிபதியின் மகள்) டெஸ்ட் டிரைவ் என ஓட்டி செல்கிறார். அப்போது அந்த கார் விபத்துக்குள்ளாகிறது.

அந்த காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதை மறைக்க முயல்கின்றன அந்த கார் கம்பெனி. இந்த விசாரணையில் போலீஸ் இறங்குகிறது.

இரண்டு வழக்குகளையும் காவல்துறை எப்படி விசாரிக்கிறது.? இறுதியில் என்ன ஆனது.? கருணாசின் மனைவி கிடைத்தாரா? தன் மனைவி உத்தமி என நிரூபித்தாரா.? என்பதே இந்த ஆதார்.

கேரக்டர்கள்…

கட்டிட தொழிலாளி பச்சமுத்துவாகவே மாறிவிட்டார் கருணாஸ். முதல்-அமைச்சர் செல்லில் புகார் கொடுத்து போலீஸிடம் அடி வாங்கும் போது நம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். ஒரு சாமானியனை காவல்துறை எப்படி நடத்தும் என்பதற்கு ஜெய் பீம் போல இந்த படமும் ஒரு உதாரணம்.

ரித்விகா இனியா திலீப் ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் படத்தின் முக்கிய கேரக்டர்களாக இவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.

நேர்மையான போலீஸ் ஏட்டாக அருண்பாண்டியன். மனதில் நிற்கும் படியான ஒரு இஸ்லாமிய கேரக்டரை செய்திருக்கிறார்.

உதவி போலீஸ் கமிஷனராக மிரட்டி இருக்கிறார் உமா ரியாஸ்கான். தன் கீழ் அதிகாரிகளை இவர் மிரட்டி வேலை வாங்குவது சாமர்த்தியம். உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா காவல்துறை நிக்கணும்.. ஆனா காவல்துறைக்கு பிரச்சினைன்னா நீங்க நிக்க மாட்டீங்களா? என சக போலீஸிடம் இவர் கேட்கும் தோரணையே செம.

முரட்டு போலீஸ் அதிகாரியாக ‘பாகுபலி’ பிரபாகர் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். தாலாட்டு பாடல் ரசிக்கலாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலே நடப்பதால் கொஞ்சம் லைட்டிங் வைத்திருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது

ராம்நாத் இயக்கியிருக்கிறார். சொல்ல வேண்டிய கதையை தெளிவாக சொல்லாமல் கதைக்குள் ஒரு கதையை சொருகி நமக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதால் ஏகப்பட்ட கன்ஃபியூஷன்.

ஆக… இந்த ஆதார்.. திருடனே திருந்தினாலும் திருந்தாத போலீஸ் ..

Aadhaar movie review and rating in tamil

டூடி DOODI விமர்சனம்.. லூட்டி

டூடி DOODI விமர்சனம்.. லூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, நிஹாரிகா சதீஸ், ரத்தன் கங்காதர் இவர்களுடன் சேர்ந்து கலை இயக்கம் செய்து, சாம் ஆர் டி எக்ஸ் உடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் கார்த்திக் மது சூதன் நடித்துள்ள படம் டூடி.

ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி, அர்ஜுன் மணிகண்டன் அக்ஷதா, எட்வின் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

காதலியை வெறுக்கும் நாயகன் கார்த்திக் மதுசூதன். எந்த பெண்ணை பார்த்தாலும் அன்று இரவே அவளை படுக்கைக்கு அழைப்பது இவரது வாடிக்கை.

இந்த நிலையில் நாயகியை சந்திக்கிறார் அன்றே அவரிடமும் இதே கேள்வியை கேட்கிறார்.

முதலில் நாயகனை வெறுக்கும் நாயகி ஒரே வாரத்தில் காதலில் விழுகிறாள். முதலில் காதலை வேண்டாம் என்னும் சொல்லும் நாயகன் பின்பு காதலுக்கு ஓகே சொல்கிறார்.

ஆனால் நாயகியோ நான் ஏற்கனவே 5 வருடமாக ஒருவனை காதலித்து வருகிறேன் என தெரிவிக்கிறாள். இதனால் நாயகியை விட்டு விலகுகிறார் நாயகன்.

அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் கதை.

கேரக்டர்கள்….

நாயகன் கார்த்திக்.. அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாத நடிப்பு. இவரது குரல் இவருக்கு செம பிளஸ். ஒரே படத்தில் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டு செய்திருப்பதால் நடிப்பில் பெரிய கவனம் செலுத்தவில்லை போலும்.

நாயகி ஸ்ரீதா சிவதாஸ். – இயக்குனர் நினைத்திருந்தால் கவர்ச்சியை அள்ளிவிட்டு இருக்கலாம். ஆனால் படம் முழுவதும் நாயகி பக்கா குடும்ப பெண்ணாகவே வருகிறார். அதை நிச்சயம் பாராட்டலாம். நடிப்பில் ஓகே ரகம்தான்.

தமிழ் கணவன் கன்னட மனைவியாக வரும் ஜீவி மது சூதன்- உத்ரா வேடம் செய்தவர்கள் அருமை.

டெக்னீஷியன்கள்…

பால சாரங்கனின் பின்னணி இசை ஓகே. ஓரிரு பாடல்களும் கூட இனிமை.

திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கி இருப்பதோடு படத் தொகுப்பும் செய்து இருக்கிறார் சாம் ஆர் டி எக்ஸ்.

நாயகியை படுக்கைக்கு அழைக்கும் நாயகன்.. அவள் யாரை காதலித்தால் என்ன என நினைக்க வேண்டாமா? தினமும் படுக்கையில் ஒரு பெண்ணைப் பகிரும் நாயகனை நாயகி காதலிப்பதற்கான வலுவான காரணங்களும் இல்லை.

மேலும் அழுத்தமான திரைக்கதையோ உணர்வுபூர்வமான காட்சிகள் இல்லை என்பதால் படத்துடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

படத்தில் மொத்தம் ஒரு ஐந்து ஆறு நபர்களை சுற்றியே கதை நகர்கிறது. படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்கிறது.

ஆனால் பாடல்களும் காட்சிகளும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மது சுந்தர்ராஜின் கேமரா ஒர்க் சிறப்பு.

ஆக டூடி… லூட்டி

doodi movie stills

FIRST ON NET சினம் விமர்சனம் 3.5/5.. சமூக சிந்தனை

FIRST ON NET சினம் விமர்சனம் 3.5/5.. சமூக சிந்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு நேர்மையான போலீஸ் தன் உயர் அதிகாரியால் அவமானப்படுத்தப்படும் போதும்… தன் குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் போதும்… சினம் கொண்டால் என்ன ஆகும் என்பதே ஒன்லைன்.

கதைக்களம்…

நேர்மையான போலீஸ் அருண் விஜய். தன் மனைவி ஒரு மகள் என அழகாக வாழ்ந்து வருகிறார். இவரின் நேர்மை சில உயரதிகாரிக்கு பிடிக்காமல் போனாலும் தன் கடமையில் தவறாது நிற்கிறார்.

ஒரு கட்டத்தில் இவரது மனைவி காணாமல் போகிறார். சில மணி நேரங்களில் சடலமாக மீட்கப்படுகிறார். அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை எப்படி எதிர்கொண்டார் அருண் விஜய்? அவரின் மனைவியை கொன்றவர் யார்? என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

வழக்கமாக போலீஸ் என்றால் ஒரு டெரர் மீசை ஹீரோக்கள் வைத்திருப்பார்கள். ஆனால் இதில் பக்கா கிளீன் ஷேவ் என படு ஸ்மார்டாக வருகிறார் அருண் விஜய்.

எதையும் நிதானமாக சிந்தித்து விசாரணையில் இறங்கும் சுபாவம். கிளைமாக்ஸ்சில் இவரது சினம் வேற லெவல். ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது.

நாயகியாக பால் லால்வானி. அளவான நடிப்பு.

காளி வெங்கட்டின் கேரக்டர் கனகச்சிதம். முக்கியமாக அருண் விஜய் மனைவி இறந்தபின் அவர் அழைத்துச் செல்லும் காட்சியில் யதார்த்த நடிப்பில் கவர்கிறார்.

இவர்களுடன் RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி, நாயகியின் குடும்பம் மற்றும் வில்லன் கும்பல் என அனைவரும் தங்கள் பங்களிப்பில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

சண்டை பயிற்சி – ’ஸ்டண்ட்’ சில்வா. பார் ஃபைட் சீன் மற்றும் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் என இரண்டிலும் சினம் பறக்கிறது.

கிளைமாக்சில் காட்டப்படும் அந்த பள்ளிக்கூடம் செம லொகேஷன். அந்த இடத்தையே மிரட்டலாக படம் எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் – கோபிநாத்.

இசை – ஷபீர் தபேரே ஆலம். பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார். சில இடங்களில் மட்டும் தேவை இல்லாத இ(சை)ரைச்சல் பில்டப்.

மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், ஆர். விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு இயக்கிய ஓரிரு படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதில் தன் திறமையை காட்டி இருக்கிறார்.

க்ளைமாக்ஸ் வசனங்கள் சூப்பர். நாம் குற்றங்களை கண்டுகொள்ளாமல் செல்வதை காட்டிலும் சினம் கொண்டு எதிர்க்க வேண்டும். அப்போதுதான் ஓர் அழகான சமுதாயத்தை உருவாக்க முடியும் என அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆக.. இந்த சினம்… சமூக சிந்தனை

வெந்து தணிந்தது காடு விமர்சனம் 3.5/5.. சிம்புவின் சிறப்பான சம்பவம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம் 3.5/5.. சிம்புவின் சிறப்பான சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நெல்லை பையன்… மும்பை டான்… சாதாரண ஒருவன் எப்படி டானாக மாறுகிறான் என்பதே ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

நெல்லையில் ஒரு கிராமத்தில் அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு.

ஒருநாள் வயகாட்டில் அவருக்கு விபத்து ஏற்படுகிறது. எனவே வேறு வேலைக்கு சிம்புவை அனுப்ப நினைக்கிறார் ராதிகா.

அதன்படி மும்பைக்கு சென்று பரோட்டா கடையில் வேலைக்கு சேர்கிறார் சிம்பு.

ஒருகட்டத்தில் எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலுடன் இணையும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன்பிறகு சிம்பு வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

டீன்ஏஜ் பையனாக தன்னை காட்ட உடலை வருத்தி அர்ப்பணித்து நடித்து இருக்கிறார் சிம்பு. சென்டிமெண்ட் ஆக்சனிலும் அசத்தல். சிம்பு உழைப்புக்கு அவார்ட் கிடைக்கும்.

ஜாபரின் நடிப்பு தியேட்டரில் விசில் பறக்கிறது.

நாயகியாக சித்தி இதானி. முதல் தமிழ் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பு..

வழக்கமான அம்மாவாக அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார் ராதிகா. நடிகர் அப்புகுட்டிக்கு பாராட்டுக்கள்.

டெக்னீஷியன்கள்…

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஜெயமோகனின் கதை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஆல்ரெடி சூப்பர் ஹிட். ஸ்ரேயா கோஷல் குரலில் “உன்ன நெனச்சதும்… பாடல் அருமையான மெலோடி.

‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடலும் வேற லெவல்.. பின்னணி இசை படத்துடன் ஒன்றி செல்வது சிறப்பு.

சித்தார்தாதாவின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும் சிட்டி காட்சிகளும் சிறப்பு. காஸ்ட்யூம் டிசைனர் உத்ரா மேனனுக்கும் பாராட்டு.

திடீரென வேகம் எடுக்கும் திரைக்கதை பின்னர் காதல் காட்சிகளால் தொய்வடைகிறது. இதேபோல பல இடங்களில் வேகம் குறைந்து பின்னர் ஏறுகிறது.

வழக்கமாக கௌதம் படங்களில் வாய்ஸ் ஓவரில் காட்சிகள் நகரும். ஆனால் இந்த படத்தில் அது இல்லை என்பது பெரிய ஆறுதல்.

இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் வெறித்தனம்.

ஆக வெந்து தணந்தது காடு.. சிம்புவின் சிறப்பான சம்பவம்

VTK

லில்லி ராணி திரைப்பட விமர்சனம்

லில்லி ராணி திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபச்சார தொழில் செய்து வருகிறார் சாயாசிங் (ராணி). எதிர்பாராத விதமாக இவருக்கு பெண் குழந்தை பிறந்து விடுகிறது. குழந்தை பெயர் லில்லி.

எனவே அந்த தொழிலை விட்டு வேறு ஒரு வேறு ஒரு வேலைக்கு சென்று வருகிறார் சாயாசிங்.

இந்த நிலையில் அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நோய் வந்துவிடுகிறது. சிகிச்சைக்கு தந்தையின் எலும்பு மஜ்ஜை இருந்தால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்கிறார் டாக்டர்.

லில்லி ராணி

அந்தக் குழந்தையின் தந்தை யார்? என் தேடுகிறார் ராணி. கண்டுபிடித்தாரா.? குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள் பணி…

சாயா சிங்குக்கு வித்தியாசமான வேடம். இது போன்ற கதைளை மற்ற நாயகிகள் எடுப்பது கடினம். நல்ல நடிப்பை கொடுத்துள்ளார் சாயாசிங்.

ஆனால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆமை வேகத்தில் இருக்கிறது.

போலீசாக தம்பி ராமையா. இவரின் காட்சிகள் படத்தின் கலகலப்புக்கு உதவி உள்ளன. சிரிக்கவும் வைத்திருக்கிறார். ஆனால் அறிமுக காட்சியில் தம்பி பேசுவதை விட பின்னணி இசை அதிக அளவில் ஒலிக்கிறது.. இதை கூடவா யாருமே கவனிக்கவில்லை.??

அமைச்சர் மகன் என்ற முக்கிய வேடத்தில் துஷ்யந்த். தம்பிராமையாவைக் கன்னத்தில் அறைகிற காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் ஜெயப்பிரகாஷ் செம. க்ளை மாக்ஸ் ட்விஸ்ட் சூப்பர்.

சிவதர்ஷனின் ஒளிப்பதிவு நிறைவு. ஜெர்விஜோஷ்வா இசை ஓகே.சேரனின் பின்னணி இசை இரைச்சல்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். வித்தியாசமான கதைக்களம் என நம்மை சீட்டுகளில் அமர வைத்து விட்டார்.

ஆனால் திரைக்கதையில் இன்னும் நிறைய கலகலப்பு ஊட்டி காட்சிகளை நகர்த்தி இருந்தால் இந்த லில்லி ராணி கில்லி ராணியாக வந்திருப்பார்.

லில்லி ராணி

Lilly Rani review and rating

More Articles
Follows