வேலைக்காரன் விமர்சனம்

வேலைக்காரன் விமர்சனம்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், பஹத்பாசில், நயன்தாரா, ஸ்நேகா, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோகினி, விஜய்வசந்த், சார்லி மற்றும் பலர்
இயக்கம் : மோகன்ராஜா
இசை : அனிருத்
ஒளிப்பதிவு: ராம்ஜி
எடிட்டிங்: ரூபன் (விவேக் ஹர்சன்)
கலை: முத்துராஜ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஆர் டி ராஜா (24ஏஎம் ஸ்டூடீயோஸ்)

கதைக்களம்…

உணவு துறையில் நடக்கும் ஊழல்தான் படத்தின் ஒன்லைன். நாம் தினம் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்களை எப்படி மார்கெட் செய்கிறார்கள்? அதை நாம் எப்படி நம்பி ஏமாறுகிறோம் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள்.

பல படங்களில் வேலை வெட்டி இல்லாமல் திரிந்த சிவகார்த்திகேயன் இதில் பொறுப்பான இளைஞராக வருகிறார்.
சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வசிப்பவர் சிவகார்த்திகேயன். அந்த பகுதியே பிரகாஷ்ராஜ் கன்ட்ரோலில் இருக்கிறது. அவர்களை தனக்கு சாதமாக பல விதங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்.

இதனால் கடுப்பாகும் சிவகார்த்திகேயன் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்.

அங்கு அவருக்கு பஹத்பாசில் உதவுகிறார். நம் முன்னேற்றத்திற்கு HardWork தேவையில்லை, ஸ்மார்ட் Work தான் முக்கியம் என சிவாவுக்கு புரிய வைக்கிறார்.

அந்த வேலை சூழ்நிலையில் நம்மால் இந்த சமுதாயம் எத்தனை பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை உணர்கிறார்.

அதன்பின் சிவா எடுக்கும் முடிவு நம்மை சார்ந்த சமூகத்திற்கான பாடமாக அமைகிறது.

அவர் எப்படி சிறந்த வேலைக்காரன் ஆனார்? என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கேரக்டர்கள்…

10 படங்கள் வரை ஜாலியாக சுற்றுத்திரிந்த சிவகார்த்திகேயன் ரெமோ தொடங்கி சுமோ வேகத்தில் செல்ல ஆரம்பித்துவிட்டார்.

வேலைக்காரன் படத்திலும் அந்த வேகத்தில் பயணிக்கிறார். காமெடி இவருக்கு கைகொடுத்தாலும் சீரியஸ் காட்சிகளில் நம்மை அசரடிக்கிறார். வேலைக்காரனுக்கு சரியான தீனி இந்த சிவா.

ஒரு காட்சியில் தன் வீட்டிற்கு பொருளை விற்க வரும் மார்கெட்டிங் ஆளிடம் சிவா பேசும் வசனங்கள் நச். ரொமான்ஸ் பாடலிலும் ஸ்கோர் செய்கிறார்.

இதன் ஆடியோ விழாவில் சிவா சொன்னது போல பஹத்பாசில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அருமையான நடிகர். அலட்டிக்கொள்ளாமல் அசத்தியிருக்கிறார்.

ஒரு காட்சியில் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளை எங்கே வைக்க வேண்டும் என சொல்லும் விளக்கம் அருமை.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சார்லி, ஸ்நேகா, ரோகினி, விஜய் வசந்த் ஆகியோரும் நம்மை அதிகம் கவர்கின்றனர்.

நயன்தாரா, சதீஷ், ரோபா சங்கர், ஆர்.ஜே.பாலாஜி என நட்சத்திர பட்டாளங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாமே என தோன்றுகிறது.

சிவகார்த்திகேயன் நயன்தாரா கெமிஸ்ட்ரியை விட சிவா பகத் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. காரணம் நயன்தாராவுக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை.

ஒரு நடிகர் சங்கமே இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பெரிய வேலையில்லை. அனைத்தையும் முக்கிய வேலைக்காரன் சிவகார்த்திகேயன் பார்த்துக் கொள்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நண்பர் சிவகார்த்திகேயனுக்காக மெனக்கெட்டு பாடல் போட்டிருப்பார் போல அனிருத். கருத்தவனெல்லாம் கலீஜாம் பாடலுக்கு தியேட்டரே அதிருகிறது.

காதலர்களுக்கு இதயனே பாடலும், சமூகத்திற்கு எழு வேலைக்காரா என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறார். பின்னணி இசையும் ஓகே.

கலை இயக்குனர் முத்துராஜை பாராட்டியே ஆகவேண்டும். சேரி பகுதிகளை செட் போட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னதால்தான் தெரியும். அப்படியொரு யதார்த்தம்.

படத்தின் பலம் கதையும் வசனங்களும்தான். வசனங்களுக்காகவே நிறைய அப்ளாஸ் கிடைக்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் எந்த குறையும் இல்லை. தேவையானதை கண்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார் ராம்ஜி.

இயக்கம் பற்றிய அலசல்…

இனி விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று சிவகார்த்திகேயன் ஏன் சொன்னார்? என்பதற்கு இந்த படம் மிகப்பெரிய உதாரணம். அவர் மாறிவிட்டார். மற்றவர்கள் மாறுவார்களா? என்பதே கேள்வி.

அட்வர்டைசிங் மற்றும் மார்கெட்டிங் எப்படி எல்லாம் செய்து நம்மை ஏமாற்றுகிறார்கள் என பாடம் நடத்தியுள்ளார் மோகன்ராஜா.

வேலைக்காரன் என்னைக்குமே முதலாளியை நம்புறான், ஆனால், முதலாளி தான் வேலைக்காரனை நம்பாமல் கேமரா வைச்சு பாக்குறான். என்ற வசனம் விசில் பறக்க செய்கிறது. (நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ?)

பகத்பாசில் ஒரு பெரிய நிறுவன அதிகாரியின் மகன். இது சாதாரண வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மற்ற பணக்கார நிர்வாகிகளுக்கு எப்படி தெரியாமல் போகும்.? முக்கியமான கேரக்டரை இப்படி செய்திருக்கலாமா டைரக்டர்..?

வேலைக்காரன்… பப்ளிக் அலர்ட்

Comments are closed.

Related News

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'ரெமோ, வேலைக்காரன்,…
...Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ்…
...Read More