‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரெமோ’ படங்களின் பார்ட் 2..; என்ன சொன்னார் சிவகார்த்திகேயன்..?

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரெமோ’ படங்களின் பார்ட் 2..; என்ன சொன்னார் சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள டாக்டர் படம் அக்டோபர் 9-ம் தேதி தியேட்டர்களின் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன் நடிப்பில் வெற்றியடைந்த படங்களின் 2வது பாகம் குறித்து பேசியுள்ளார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது. அது ஒரு எபிக் படம்.

எங்களையே அறியாமல் நாங்கள் ஜாலியாக எடுத்த படம். எனவே அதைத் திரும்ப எடுக்க முடியாது என நினைக்கிறோம்.

‘ரெமோ’ படத்தின் கதைப்படி அதை தொடர முடியாது. ஆனால், ரெமோ நர்ஸ் கேரக்டரை வைத்து வேறொரு படம் எடுக்கலாம்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan talks about his hit films sequels

நயன்தாரா – விக்னேஷ்சிவன் கூட்டணியில் இணையும் கவின்

நயன்தாரா – விக்னேஷ்சிவன் கூட்டணியில் இணையும் கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து படங்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் தயாரித்த நெற்றிக்கண் படம் அண்மையில் வெளியானது.

தற்போது இவர்களின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம், லலித்குமாருடன் இணைந்து தயாரித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமைகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கவின் கதைநாயகனாக நடிக்கவுள்ள ஒரு படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Actor Kavin’s next project with Nayanthara and Vignesh Shivan

ஏமாற்றுபவர்கள் செழிப்பா இருக்க மாட்டாங்க…; சமந்தாவின் பழைய காதலை சொல்கிறாரா சித்தார்த்..?

ஏமாற்றுபவர்கள் செழிப்பா இருக்க மாட்டாங்க…; சமந்தாவின் பழைய காதலை சொல்கிறாரா சித்தார்த்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் 4 வருட இல்லற வாழ்க்கைக்கு பிறகு பிரிந்தனர்.

இதனை நடிகை சமந்தா தன் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அது சமந்தாவை குறிப்பிட்டு சொன்னாரோ? என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

சித்தார்த் தன் பதிவில், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் செழிப்பாக இருக்க மாட்டார்கள். சிறுவயதில் நான் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று” என பதிவிட்டுள்ளார்.

எதையும் யாரையும் குறிப்பிடாமல் இப்படி ஒரு பதிவை சித்தார்த் வெளியிட்டுள்ளதால், அவர் சமந்தாவை மனதில் வைத்துத்தான் கூறியிருக்கிறார் என நெட்டிசகன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

One of the first lessons I learnt from a teacher in school… “Cheaters never prosper.” What’s yours?

நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்னர் சித்தார்த் உடன் இணைத்து பேசப்பட்டவர் நடிகை சமந்தா. இவர்கள் காதலிப்பதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் அப்போது கிசுகிசுக்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Siddharth reacts to Samantha’s divorce?

இழுத்துப் போர்த்திய பெண்கள் மட்டும் சந்தோஷமா இருக்காங்களா..? – வித்யூலேகா

இழுத்துப் போர்த்திய பெண்கள் மட்டும் சந்தோஷமா இருக்காங்களா..? – வித்யூலேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா, சமந்தா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.

இவர் குண்டாக பப்ளிமாஸ் மாதிரி இருப்பார். இதனால் இவருக்கு நாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் நாயகியின் தோழியாக பல படங்களில் நடித்திருப்பார்.

இதனையடுத்து திடீரென ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை குறைத்தார்.

அண்மையில் சஞ்சய் என்ற தொழிலதிபரை மணந்தார்.

தற்போது கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா.

எனவே மாலத்தீவில் எடுக்கப்பட்ட தன்னுடைய பிகினி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

வித்யுலேகா பகிர்ந்துள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் சிலர் நெகட்டிவ்வான கமெண்ட்ஸ் போட்டுள்ளனர்.

ஒரு சிலர் ஓவராகவே உங்க விவாகரத்து எப்போது? என்றும் கேட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமான வித்யூலேகா தன் ரிப்ளை பதிவில்…

“என் பிகினி உடை புகைப்படத்திற்கா இத்தனை நெகட்டிவ் கமெண்ட்டுகள்?

1920-ஐ சேர்ந்த ஆன்ட்டிஸ் மற்றும் அங்கிள்கள் 2021-க்கு வாருங்கள்.

ஒரு பெண் அணியும் உடையை வைத்து அவருடைய விவாகரத்தை தீர்மானிக்க முடியுமா? அப்படி என்றால் முழுமையாக இழுத்துப்போர்த்தி ஆடை உடுத்தும பெண்கள் மட்டும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறார்களா? என கேட்டிருக்கிறார் வித்யூலேகா.

Actress Vidyulekha’s reply to negative comments

Chellamma Glimpse : ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன்… வலிமை பாணியில் டாக்டர்

Chellamma Glimpse : ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன்… வலிமை பாணியில் டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். துப்பறிவாளன் படத்தில் வில்லனாக மிரட்டிய வினய் இதிலும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

அதில் குறிப்பாக ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியுள்ளது.

அண்மையில் அஜித்தின் வலிமை பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் படக்குழுவும் அதே பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

75 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயனின் அசத்தலான நடனம் இடம் பெற்றுள்ளது.

சில டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை பார்க்கும் போது ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் அசத்தியுள்ளார் எனலாம்.

முக்கியமாக இப்பாடலின் நடன இயக்குனரும் கலை இயக்குனரும் இந்த பாடலை ரசித்து செதுக்கியுள்ளனர் என்பதை பாடலை பார்த்தாலே தெரிகிறது. (பிரஸ் மீட்டில் இந்த பாடல் திரையிடப்பட்டு பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது)

இதோ செல்லம்மா.. பாடல்…

The peppy track Chellamma from Doctor is trending now

#பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் & #வாழவிடுங்க_அஜித்..; தல தளபதி ரசிகர்கள் மோதல்.. ஏன் தெரியுமா?

#பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் & #வாழவிடுங்க_அஜித்..; தல தளபதி ரசிகர்கள் மோதல்.. ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் விஜய் & அஜித்தின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்று தான்.

தற்போது நேற்று நடந்த ஒரு சம்பவத்திற்காக அஜித்தை கலாய்த்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

நேற்று நடந்த நிகழ்வு இது தான்.. (அஜித்தால் வேலையிழந்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி)

ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித் ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அஜித்துக்கு தெரியாமல் அவரை பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அந்த பெண்ணை மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இதனால் வேலை இல்லாமல் கடந்த ஒரு வருடமாக திண்டாடி வந்துள்ளார் அந்த பெண்.

எனவே நடிகர் அஜித்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் அந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அஜித் வீட்டு வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது,

மேலும் வேலைக்கு பரிந்துரை செய்ய முடியாது எனவும் அந்த பெண்ணின் குழந்தையின் படிப்புக்கு உதவுவதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

இந்நிலையில் நேற்று அக்டோபர் 4 மாலை நடிகர் அஜித் வீட்டின் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மேலும் அஜித்தால் தான் எனக்கு வேலை போய்விட்டது என் சாவுக்கு காரணம் அஜித் தான் என கதறி கொண்டே சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த போலீஸ் அவர் மேல் தண்ணீர் ஊற்றி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக #வாழவிடுங்க_அஜித் என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

உடனே அஜித் ரசிகர்கள் ச்சும்மா இருப்பார்களா..?

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா டைரக்டர் எஸ்ஏசி-க்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்பதால் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என ட்விட்டரில்
ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சும்மா சொல்லக்கூடாது… நல்லாவே டரெண்ட் வார்த்தைகளை பிடிக்கிறாங்க..

Reason behind Thala Thalapathy fans social media fight

More Articles
Follows