கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகி பாபு

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் ரஜினியுடன் ‘தர்பார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, விஜய் உடன் ‘சர்க்கார்’ சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

மைக் மோகன் உடன் ஹரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்த வருகிறார்.

இவர் நடித்த ‘மண்டேலா’ படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த அவதாரமாக கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்தில் நடிக்க உள்ளார் யோகி பாபு.

இந்த படத்தை ரமேஷ் சுப்ரமணியன் என்பவர் இயக்குகிறார். லெமன் லீஃப் நிறுவனத்தின் இது மூன்றாவது படைப்பாகும்.

இந்த படத்தின் பூஜை இன்று அக்டோபர் 3ல் நடைபெற்றது.

அடுத்தது என்ன இயக்குனர் தானே யோகி பாபு.?

யோகி பாபு

.@iYogiBabu is all set to star in #LemonLeafProductions ‘Production No.3’ for which he has written the story, screenplay and dialogues!

Directed by
#RameshSubramaniam kickstarted with a pooja that took place at a #MuruganTemple yesterday!

#YogiBabu
@RIAZtheboss l #filmistreet https://t.co/OOiRkpma95

Yogi Babu writes story screenplay dialogue and acts

சூரியா மற்றும் ஜோதிகாவின் பிள்ளைகள் தேவ் மற்றும் தியா ஃபேமிலி கிளிக் வைரல்

சூரியா மற்றும் ஜோதிகாவின் பிள்ளைகள் தேவ் மற்றும் தியா ஃபேமிலி கிளிக் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

68 வது தேசிய திரைப்பட விருது விழாவில், சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்த சூரரைப் போற்று சிறந்த திரைப்படத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

விழாவின் புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நட்சத்திர ஜோடி தங்களது பெரிய வெற்றியை தங்கள் மகள் தியா மற்றும் மகன் தேவுடன் கொண்டாடினர்.
“பெருமையும் ஆசீர்வாதமும்” என்று ஜோதிகா அந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.

சூர்யா, ஜோதிகா வீட்டில் இரட்டைக் கொண்டாட்டங்கள் நடக்கும் நேரம் இது.

அன்பையும் பெருமையையும் பொழிந்த ரசிகர்களே…; வானில் மிதக்கும் வந்தியதேவன்

அன்பையும் பெருமையையும் பொழிந்த ரசிகர்களே…; வானில் மிதக்கும் வந்தியதேவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியதேவனாக நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படம் வெளியாகி ஓரிரு தினங்களே ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ 150 கோடியை வசூலித்து வெற்றி நடைப் போட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பட வெற்றி குறித்தும் தன் அனுபவம் குறித்தும் நடிகர் கார்த்தி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணம். அந்த மகத்தான உணர்வை நன்றி என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

பொன்னியின் செல்வன் என்றொரு மாயாஜால காவியம் படைத்த அமரர் கல்கிக்கு முதலில் ஒரு பெரிய வணக்கமும் மரியாதையும் சொல்லிக் கொள்கிறேன்.

இத்தனை வருடங்களாக இதைப் பின்பற்றி மறக்க முடியாத தலைசிறந்த படைப்பை வடிவமைத்த எங்கள் மணிரத்னம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதுவரை பார்த்திராத பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கொடுத்து செட்டில் உந்து சக்தியாக இருந்த ரவிவர்மன் அவர்களுக்கு நன்றி.

எங்களின் பொக்கிஷம் ஏ ஆர் ரஹ்மான் தனது இசையால் நம்மை பரவசப்படுத்தியதற்காக நன்றி. இந்த பொற்காலத்தை மீண்டும் உருவாக்கியதற்காக தோட்ட தரணி க்கு நன்றி. இவரைத் தவிர வேறு யாரும் இந்தளவுக்கு உருவாக்கி இருப்பார்களா என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஜெயமோகன் சார் எழுதிய அருமையான வசனம் மற்றும் ஒரு வரியின் மூலம் அழியாத கல்கி சாரின் எழுத்தின் உணர்வை வெளிப்படுத்திய ஸ்ரீகர் பிரசாத் சாருக்கு நன்றி.

தனிச்சிறப்பு மிக்க கதாபாத்திரங்களை மிகவும் நிஜமாக காட்டியதற்காக ஏகா மற்றும் விக்ரம் கெய்க்வாட் சாருக்கு நன்றி. டவுன்லி, ஆனந்த் மற்றும் குழுவினர் உற்சாகமான மற்றும் செழுமையான ஒலிகளுக்காக நன்றி. திரைக்குப் பின்னால் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்த சினிமாவை காதலிக்கும் எண்ணற்றோர்களுக்கு நன்றி.

மேலும், இந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதற்காக ஒருவரையொருவர் மற்றும் சினிமா கலையின் மீது மிகுந்த அன்புடன் கூடிய அற்புதமான நடிகர்கள், மரியாதைக்குரிய மூத்தவர்கள் மற்றும் எனது அன்பான சக ஊழியர்கள். ஒவ்வொரு நாளும் கணக்கைப் பார்த்த சிவாவுக்கும், இந்த ஒட்டுமொத்த குழுவின் மீது நம்பிக்கை வைத்த சுபாஸ்கரன் சாருக்கும், இறுதியாக இப்படிப்பட்ட அன்பையும் பெருமையையும் எங்களுக்கு பொழிந்த அன்பான ரசிகர்களே, நண்பர்களே, சினிமா ஆர்வலர்களே, உங்கள் எல்லா அன்பையும் பெறுவது மிகவும் மகத்தானது.

நன்றி
நன்றி
நன்றி!

– கார்த்தி. இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ & ‘பொன்னியின் செல்வன்’ மெகா ஹிட்.; இந்த வெற்றிகள் சொல்வது என்ன? ஓர் அலசல்

‘விக்ரம்’ & ‘பொன்னியின் செல்வன்’ மெகா ஹிட்.; இந்த வெற்றிகள் சொல்வது என்ன? ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாகவே தமிழ் சினிமாவை குறித்து பேசும்போது.. “முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பதில்லை” என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது’.

எம்ஜிஆர் – சிவாஜி ‘கூண்டுக்கிளி’ என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.

ரஜினி – கமல் பல படங்களில் இணைந்து நடித்தாலும் அது நடந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விஜய் – அஜித் ‘ராஜாவின பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தனர். அதுவும் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது.

‘பிதாமகன்’ என்ற ஒரே படத்தில் விக்ரம் – சூர்யா இருவரும் இணைந்து நடித்தனர்.

சிம்பு – தனுஷ் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. அது போல சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவில்லை.

இவர்களின் ரசிகர்களும் ஏட்டிக்கு போட்டியாக நினைக்கின்றனர். மேலும் சண்டைகள் தான் அடிக்கடி நடக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத்பாசில் சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலும் சூப்பர்.

அதுபோல ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் ஒரு மல்டி ஸ்டார் படம் தான்.

இதில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி விக்ரம் பிரபு சரத்குமார் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அது போல நடிகைகள் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது உலகளவில் ரூ. 150 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது.

மலையாளம் தெலுங்கு ஹிந்தி சினிமாக்களில் இதுபோல மல்டி ஸ்டார்ஸ் அடிக்கடி இணைந்து நடிப்பது உண்டு.

ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோல நடைபெறுவது மிக அரிதான ஒன்றாகும்.

தற்போது விக்ரம் & பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய மாற்றம் உண்டாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே நம் கோலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடித்தால் அதன் வெற்றி பல மடங்காக உயர்ந்து நிற்கும் என்பதையே இந்த இரு படங்களின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

இனியாவது இது போன்ற பிரம்மாண்ட வெற்றிகள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்குமா? நம் ஹீரோக்கள் மனது வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் உள்ளிட்ட மூவர் நீக்கம்; உதயா கடும் கண்டனம்

நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் உள்ளிட்ட மூவர் நீக்கம்; உதயா கடும் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து மூத்த நடிகர்-இயக்குநர் பாக்கியராஜ், நடிகர்கள் ஏ எல் உதயா மற்றும் பாபி நீக்கப்பட்டது தொடர்பாக உதயாவின் அறிக்கை பின்வருமாறு:

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக தன்னிலை விளக்க கடிதம் கிடைத்த போதே அதிர்ச்சியாக இருந்தது.

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் சார் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியதே வருத்தத்திற்குரிய விஷயம் எனும் போது நீக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தன்னிலை விளக்க கடிதத்திற்கு பதில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன். இருந்தபோதும் நான் இப்போது நீக்கப்பட்டுள்ளேன்.

என்னையும் சக நடிகரான பாபியையும் நீக்கியது கூட பெரிதில்லை. ஆனால் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பாக்கியராஜ் அவர்களை நீக்கியது மிகவும் வருத்தமளிக்கிறது.

அவர் கடந்த தேர்தலின் போது தலைவராக போட்டியிட்டதற்காக அவரை நீக்கியது பெரும் குற்றம். இது ஒரு தவறான முன்னுதாரணம் மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

சங்கத்தில் இருந்து எங்களை நீக்கியிருப்பது தற்போது இருக்கும் நிர்வாகிகளின் பழிவாங்கும் எண்ணத்தையே காட்டுகிறது.

பழிவாங்கும் எண்ணம் இப்போது உள்ள நிர்வாகிகளிடம் ஆரம்பம் முதலே இருந்துள்ளது. கடந்த முறை பதவியில் இருந்த போது எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம் என்று கூறினோம். ஆனால் அதை கேட்காமல் நலிந்த நாடக கலைஞர்கள் உட்பட பலரை நீக்கி அவர்களது வருத்தத்தை சம்பாதித்தனர்.

கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் நீக்குகிறார்கள். அண்ணன் சரத்குமார் அணியை கேள்வி கேட்க உருவாக்கப்பட்டது தான் பாண்டவர் அணி. ஆனால் அவர்கள் (சரத்குமார் அணி) யாரையும் நீக்கவில்லை.

சங்க கட்டிடட பணிகள் முழுமையாக நடைபெறவில்லை, உறுப்பினர்களின் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

பழிவாங்குவது மட்டுமே இப்போது உள்ள நிர்வாகிகளின் குறிக்கோளாக உள்ளது.

இப்போது உள்ள நிர்வாகிகளின் இந்த போக்கு பல உறுப்பினர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் தங்களையும் நீக்கி விடுவார்களோ என்ற பயம் பல உறுப்பினர்களிடம் உள்ளது.

சங்கத்திற்காக இப்போது உள்ள நிர்வாகிகளை விட நான் அதிகமாக உழைத்துள்ளேன். திரு ஏ சி சண்முகம் (ஏ சி எஸ்) அவர்களிடம் இருந்து சங்க கட்டிடம் கட்டுவதற்காக வட்டியில்லா கடனாக பெரும் தொகை, சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகள் என்னால் நடந்துள்ளன. எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இப்படி உறுப்பினர்களை நீக்குவது எதற்கும் தீர்வாகாது. எதுவாக இருந்தாலும் சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும்.

சங்க உறுப்பினர்கள் 64 பேர் இதுவரை இறந்துள்ளனர். அவர்களுக்கு இறுதி சடங்கிற்கான பணம் கூட வழங்கப்படவில்லை. சங்க கட்டிட பணிகளை முடிப்பது, மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே தற்போதைய தேவை.

ஒரு உறுப்பினராக சங்க விதிகள் அனைத்தையும் அறிந்தவன் என்ற முறையில் எனது தரப்பு விளக்கத்தை அளிப்பது என் கடமை என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
நடிகர் உதயா
02.10.2022

Nadigar Sangam issue Actor Udhaya statement

அன்றே செய்தார் கமல்.; மீண்டும் மௌனபடம்.; விஜய்சேதுபதி – அரவிந்த் சாமி நடிப்பில் ‘காந்தி டாக்ஸ்’

அன்றே செய்தார் கமல்.; மீண்டும் மௌனபடம்.; விஜய்சேதுபதி – அரவிந்த் சாமி நடிப்பில் ‘காந்தி டாக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் படம் ‘காந்தி டாக்ஸ்’.

கிஷோர் பி.பெலேகர் என்பவர் இயக்க ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் வசனமே இல்லாமல் மௌனப் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் அதிதி ராவ் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பிளாக் காமெடி ஜானரில் வசனங்களற்ற மவுனப்படமாக உருவாகி உள்ளது.

இது மவுனப் படமாக இருப்பதால், அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து பார்வையாளர்களுக்கு ஒரு பேரனுபத்தை தரும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் அறிமுக வீடியோ காந்தி பிறந்த நாளான இன்று அக்டோபர் 2ல் வெளியாகியுள்ளது.

கூடுதல் தகவல்…

இதுபோன்று வசனமே இல்லாத படத்தில் 30 வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசன் மற்றும் அமலா நடித்துள்ளனர். அந்த படத்திற்கு பேசும் படம் என பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

Relive the silent film era Gandhi Talks

@ZeeStudios_ proudly presents #GandhiTalks, a dark comedy starring @VijaySethuOffl @thearvindswami @aditiraohydari @SIDDHARTH23OCT in an @arrahman musical.
#ComingSoon

? https://bit.ly/GandhiTalks

@kishorbelekar #Kyoorius
@moviemillent @zeestudiossouth @donechannel1

More Articles
Follows