ஹீரோ & வில்லன்.; தமிழ் – மலையாளம் என இரு குதிரைகளில் சௌந்தரராஜா சவாரி

ஹீரோ & வில்லன்.; தமிழ் – மலையாளம் என இரு குதிரைகளில் சௌந்தரராஜா சவாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சௌந்தரராஜா.

இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழிலும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார் சௌந்தரராஜா.

அருள்நிதியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

விஜய் இயக்கும் இந்த படத்தில் தான் சௌந்தரராஜா வில்லனாக நடிக்கிறாராம்.

இந்த படம் வெளியானவுடன் அதிக படங்களில் வில்லனாக நடிக்க சௌந்தர்க்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வருகின்றன.

இவையில்லாமல் மலையாள இயக்குனர் அணில் இயக்கும் ‘சாயாவனம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சௌந்தரராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கணவன் மனைவியின் அழகிய உறவை சொல்லும் படமாக வளர்ந்து வருகிது.

Soundararajas upcoming movie in Tamil and Malayalam

சினிமாவில் எழுத்தாளர்களுக்கு உரிமையில்லை… நானும் ஒரு காரணமாயிட்டேன் – பாக்யராஜ்

சினிமாவில் எழுத்தாளர்களுக்கு உரிமையில்லை… நானும் ஒரு காரணமாயிட்டேன் – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையாவின் உதவி இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பம்பர்’.

லாட்டரி சீட்டை மையப்படுத்திய இந்த படத்தில் வெற்றி, ஷிவானி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் K பாக்யராஜ் பேசியதாவது…

அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது.

புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார்.

ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும். புதுத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ‘பம்பர்’ படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரித்துள்ளார்.

இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார்.

‘பம்பர்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றியுள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை ‘நெடுநல்வாடை’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஆலம்பனா’ மற்றும் ‘கடமையைச் செய்’ ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாண்டுள்ளார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

Writers doesn’t have good recognition says Bhagyaraj

திரில்லர் மட்டும்தான் செய்றேன்னு விமர்சனம் இருக்கு.. இனி மாறும்.. – வெற்றி

திரில்லர் மட்டும்தான் செய்றேன்னு விமர்சனம் இருக்கு.. இனி மாறும்.. – வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையாவின் உதவி இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பம்பர்’.

லாட்டரி சீட்டை மையப்படுத்திய இந்த படத்தில் வெற்றி, ஷிவானி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் வெற்றி பேசியதாவது…

முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன், தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன், இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார், அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

இயக்குநர் செல்வகுமார் பேசியதாவது…

இந்த இடத்திற்கு நான் வந்ததற்குக் காரணமான பலர் இங்குள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றி, என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் தியாகராஜா அண்ணனுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது, இதற்கு உதவியாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. இது ஒரு குழு முயற்சி. இந்தப்படம் அழுத்தமான கருத்தைப் பேசும். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி.

Here after my thriller route will be changed says Vettri

வெற்றி மற்ற படங்களை பம்பரில் வித்தியாசம் காட்டியிருக்கார் – ஷிவானி

வெற்றி மற்ற படங்களை பம்பரில் வித்தியாசம் காட்டியிருக்கார் – ஷிவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையாவின் உதவி இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பம்பர்’.

லாட்டரி சீட்டை மையப்படுத்திய இந்த படத்தில் வெற்றி, ஷிவானி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை ஷிவானி பேசியதாவது…

தயாரிப்பாளர் தியாகராஜா சார் படத்திற்குத் தேவையான அனைத்தும் கொடுத்துள்ளார், இயக்குநர் செல்வம் மிகுந்த உழைப்பை இந்த படத்திற்குக் கொடுத்துள்ளார், படம் பார்த்தால் உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும்.

நடிகர் வெற்றி, மற்ற படங்களை விட இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு நடித்துள்ளார்.

அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படக்குழு அனைவருக்கும் நன்றி, படம் நன்றாக உள்ளது, உங்களுக்கும் பிடிக்கும், நன்றி.

Shivani talks about Vettri and Bumper movie

பம்பர் படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன்; வெற்றிக்கு தனி ரசிகர் கூட்டம் – முத்தையா

பம்பர் படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன்; வெற்றிக்கு தனி ரசிகர் கூட்டம் – முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’.

ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், அயோத்தி இயக்குநர் மந்திரமூர்த்தி, டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் முத்தையா பேசியதாவது…

இயக்குநர் செல்வம் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார், அனைவருடனும் சுலபமாக இணைந்து பணியாற்றுவார். செல்வத்திடம் ஒரு நல்ல கிராமத்துச் சாயல் உள்ளது , என்னிடம் வந்து கதையைச் சொன்னார், நான்தான் தயாரிப்பதாக இருந்தது.

நடிகர் வெற்றியிடம் கதை சொன்னதும் உடனே ஒத்துக்கொண்டு நடித்தார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு வாழ்த்துகள், இது போன்ற புது இயக்குநருக்கு வாய்ப்பு அளித்துள்ளார், படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

நாயகன் வெற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் அவருக்கும் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றியடையும், நன்றி.

இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது…

ஒரு இயக்குநர் வெற்றிப்படம் கொடுப்பதை மட்டும் வெற்றியாக நினைக்க மாட்டார்கள், தன் உதவியாளர்களும் படம் செய்வதை தான் வெற்றியாக பார்ப்பார்கள். அந்த வகையில் என் உதவியாளர் படம் செய்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். நடிகர் வெற்றியை தொடர்ந்து கவனித்து வருகிறேன், மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

இயக்குநர் செல்வகுமார் என்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர், மிக நல்ல மனதுக்காரர். இந்தக்கதை பற்றி சொல்லியிருக்கிறார். நல்ல டீம் இதில் வேலை பார்த்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் இயக்குநர் திருமலை பேசியதாவது…

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் கொடுத்துள்ளனர், அதிலிருந்தே தெரிகிறது இந்தப்படம் அறத்தை பற்றி பேசும் என்று, இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், வெற்றி பெயரிலேயே வெற்றியை கொண்டவர். அதனால் இப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெறும் போதுதான் சினிமாத்துறை ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சில இளம் இயக்குநர்கள் வந்துள்ளனர், அவர்கள் இதற்கு சாட்சி. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் பம்பர் படம் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை, அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

I missed chance to produce Bumper movie says Muthaiya

3 தலைமுறை பெண்கள் வாழ்வியலை சொல்லும் ‘ஸ்வீட் காரம் காஃபி’

3 தலைமுறை பெண்கள் வாழ்வியலை சொல்லும் ‘ஸ்வீட் காரம் காஃபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா உருவாக்கிய வெப் சீரிஸ் ‘ஸ்வீட் காரம் காபி’.

இதை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர்.

மதுபாலா, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்களுடன் ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது.

எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணத்தை அழகாக தொகுத்துள்ளது.

வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையின் மீதான தங்கள் அன்பு, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான வாசனையைக் கண்டறிகின்றனர்.

ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்தது. இதயத்தைத் தூண்டும் தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர்.் மற்றும் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்வீட் காரம் காபி

Sweet Kaaram Coffee Three Women From Different Generations

More Articles
Follows