சௌகரியமான வாழ்க்கை வாழ சௌந்தரராஜா சொல்லும் செம ஐடியா

சௌகரியமான வாழ்க்கை வாழ சௌந்தரராஜா சொல்லும் செம ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சௌந்தரராஜா.

இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் நடித்திருந்தார்.

சௌந்தரராஜா

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

ஓசியானிக் மூவிஸ் (Oceanic movies) சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர்.

ராஜ் கார்த்திக் எழுத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு நிகில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சௌந்தரராஜா

பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 நேற்று “கட்டிஸ் கேங்” படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.

சௌந்தரராஜா

Actor Soundararajas World Environmental day message

BREAKING ‘சந்திரமுகி’ ரஜினி.. கஜினி சூர்யா என் வாழ்க்கை மாற்றியவர்கள் – சுனைனா

BREAKING ‘சந்திரமுகி’ ரஜினி.. கஜினி சூர்யா என் வாழ்க்கை மாற்றியவர்கள் – சுனைனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீர்ப்பறவை சமர் சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களின் நடித்தவர் சுனைனா.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெஜினா’. சதீஷ் நாயர் தயாரித்துள்ள இந்த படத்தை டொமின் டீ சில்வா என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியிட்டு விழாவில் விழா தற்போது சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் வெங்கட் பிரபு.

இந்த விழாவில் மேடையில் பேசிய சுனைனா…

” 2006 ஆம் ஆண்டு நான் வட இந்தியாவில் வசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தென்னிந்தியா சினிமா என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது.

வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்பதை கூட நான் அப்போது முடிவு செய்யவில்லை. அப்போது நான் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் ஒருவரை கண்டேன். அந்த படம் அவர்தான் என் வாழ்க்கையை மாற்றியது.

அந்த படம் சந்திரமுகி.. அவர் ரஜினிகாந்த். அதன் பின்னர் சூர்யா நடித்த கஜினி படத்தை பார்த்தேன்.

ரஜினியும் கஜினியும் தான் என் வாழ்க்கையில் நான் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அதற்குப் பின்னர் தான் சினிமாவில் நடிக்க துவங்கியனேன். தென் இந்திய படங்களை அதிகம் பார்த்தேன். ரெஜினா என்ற இந்த திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்” என பேசினார் சுனைனா.

‘Chandramukhi’ Rajini and Ghajini Suriya changed my life says sunaina

“விஜய் பட நடிகைக்கு கல்யாணம்”; மாப்பிள்ளை இவரா..? ரசிகர்கள் மகிழ்ச்சி..!

“விஜய் பட நடிகைக்கு கல்யாணம்”; மாப்பிள்ளை இவரா..? ரசிகர்கள் மகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் ரோபோ போல் பேசியும், நடனமாடியும் மக்களை சிரிக்க வைத்ததால் இவருக்கு ‘ரோபோ சங்கர்’ என்று பெயர் வந்தது.

அதன் பின் தமிழ் சினிமாவின் முன்ணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார்.

இந்திரஜா

இந்த படத்தில் பாண்டியம்மா என்ற பெயரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘விருமன்’ படத்திலும் அதிதி ஷங்கரின் தோழியலாக நடித்திருந்தார்.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அண்மையில் குடும்பத்தோடு குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இதை பார்த்து ரசிகர் இவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்றும் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது என்று கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இதற்கு இந்திரஜா, ஆமாம், வீட்டில் பேசியிருக்கிறார்கள் திருமணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து, இந்திரஜாக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்திரஜா

Robo Shankar’s daughter Indraja Shankar reveals her future husband

இசை மழையில் நனைய ரெடியா.? ரசிகர்களை அழைக்கும் சிம்பு – யுவன்

இசை மழையில் நனைய ரெடியா.? ரசிகர்களை அழைக்கும் சிம்பு – யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைஞர்களின் நாடித்துடிப்பு அறிந்து அதற்கு ஏற்ப இசையை கொடுப்பதில் வல்லவர் யுவன் சங்கர் ராஜா.

இவருக்கு யாருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறதோ இல்லையோ சிலம்பரசனிடம் யுவன் இணைந்தால் அந்தப் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வருவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

எவன்டி உன்ன பெத்தான்.. லூசு பெண்ணே லூசு பெண்ணே.. காதல் வளர்த்தேன்.. என பல பாடல்களை இந்த கூட்டணியினர் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜூலை 15 ஆம் தேதி மலேசியாவில் யுவன் சங்கர் ராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளது.

மலேசியா கோலாலம்பூரில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்.. “மலேசியா மக்களே வணக்கம்… யுவனுக்காகவும் ரசிகர்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உள்ளேன்”

என பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://youtube.com/shorts/NPqCO_KEUT4?feature=share4

Simbu will participate in Yuvan Concert Live

சகுனி மாமா மரணம்.; குஃபி பெயின்டல் நடித்த படங்கள் என்ன – ஒரு பார்வை.

சகுனி மாமா மரணம்.; குஃபி பெயின்டல் நடித்த படங்கள் என்ன – ஒரு பார்வை.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொலைக்காட்சியில் வெளியான மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக வேடமேற்று நடித்த பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல்.

அவர் 1975-ம் ஆண்டு ‘ரபூ சக்கார்’ என்ற திரைப்படத்தில் முதன்முறையாக நடித்து பிரபலம் ஆனார்.

அதன்பின்னர், தில்லாகி, தேஷ் பரதேஷ் மற்றும் சுஹாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

பகதூர் ஷா ஜாபர், மகாபாரதம், கனூன், ஓம் நமசிவாய, சி.ஐ.டி., ஷ்…கோய் ஹை, துவாரகதீஷ் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ராதாகிருஷ்ணர் மற்றும் ஜெய் கனியா லால் கி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார்.

கடைசியாக ஜெய் கன்னையா லால் கி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் நடித்து உள்ளார்.

அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

குஃபி பெயின்டல் அவர்கள் சில காலமாக இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் நீண்டகாலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கடந்த மே 31-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் அவரது உடல்நலம் குன்றியது. இதுபற்றிய விவரங்களை அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னணி காமெடி நடிகரான பைந்தல், சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று (05-06-2023) காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி குஃபி பெயின்டல் காலமானார். இவருக்கு வயது 79.

நடிகர் குஃபி பெயின்டலின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

mahabharata serial actor gufi paintal passed away

‘சம்பூர்ண ராமாயணா’ புகழ் நடிகை சுலோச்சனா காலமானார்.; மோடி இரங்கல்

‘சம்பூர்ண ராமாயணா’ புகழ் நடிகை சுலோச்சனா காலமானார்.; மோடி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1930 ஆண்டில் கர்நாடகவில் பிறந்தவர் சுலோச்சனா. தன் 16ஆம் வயதில் திரையுலகில் நுழைந்தார்.

மராத்தி மொழி படங்களில் மட்டுமே 260+ படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஹிந்தியில் சுலோச்சனா நடித்த ‘கோரா ஆர் காலா’, ‘சம்பூர்ண ராமாயணா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பெற்று தந்தது.

மேரே ஜீவன் சாதி’, ‘கட்டி பட்டங்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

‘மகாராஷ்டிர பூஷன்’ விருதும் அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2004ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அவருக்கு தற்போது வயது 94.

கடந்த சில மாதமாக வயது மூப்பு தொடர்பான பிரச்சின்னைகளால் அவதிப்பட்டு வந்தார்.

எனவே அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா, நேற்று (ஜூன் 04) மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

சுலோச்சனாவில் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The passing of Sulochana Ji leaves a big void in the world of Indian cinema. Her unforgettable performances have enriched our culture and have endeared her to people across generations. Her cinematic legacy will live on through her works. Condolences to her family. Om Shanti.

Modi ji..

Actress Sulochana passes away

More Articles
Follows