தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் அமிதாபச்சன், பகத் பாசில், ராணாகுபதி, மஞ்சு வாரியார். ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக லாரன்ஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு வேடத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
காரணம் இனிமேல் தான் நான் ‘தலைவர் 171’ பட கதையை எழுத இருக்கிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார் லோகேஷ்.
மேலும் 2024 ஏப்ரல் மாதத்தில் தான் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜினியுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்ற ட்ரெண்டிங் செய்தி உலா வருகிறது.
Sivakarthikeyan and Lawrence in Thalaivar 171