40 வயதில் 20 வருட சினிமா.; நயன்தாரா-வின் டாப் 12 IMDb லிஸ்ட்

40 வயதில் 20 வருட சினிமா.; நயன்தாரா-வின் டாப் 12 IMDb லிஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் இவருக்கே முதலிடம்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ்நாட்டில் தன் வெற்றி கொடியை பறக்க விட்டவர் நயன்தாரா.

கமல் தவிர ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா வரை ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இயாக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் 2 குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார்.

தற்போது பெர்ப்யூம் மற்றும் காஸ்மெட்டிக் வியாபாரங்களை வெளிநாடுகளில் தொடங்கியுள்ளார் நயன்தாரா.

தற்போது 40 வயதை நெருங்குகிறார் இவர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணபூரணி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்த டாப் 12 படங்களை வெளியிட்டுள்ளது IMDb நிறுவனம் இதோ அந்த லிஸ்ட்..

தனி ஒருவன், அறம், கோலமாவு கோகிலா, ஜவான், சிவாஜி (ஒரு பாடல்), ராஜா ராணி, யாரடி நீ மோகினி, இமைக்கா நொடிகள், கஜினி உள்ளிட்ட படங்களும் இதில் அடங்கும்.

1. Thani Oruvan – 8.4
2. Super – 8.1
3. Aramm – 7.7
4. Raja Rani – 7.6
5. Ghajini – 7.5
6. Maya – 7.5
7. Sivaji – 7.5
8. Manassinakkare – 7.5
9. Yaaradi Nee Mohini – 7.3
10. Imaikkaa Nodigal – 7.3
11. Kolamavu Kokila – 7.3
12. Billa – 7.3

Nayanthara Turns 40 – 12 highest-rated titles of Nayanthara on IMDb

ரியலில் 1 ரீலில் 2 குழந்தைகளுக்காக காத்திருக்கும் திலீபன் புகழேந்தி

ரியலில் 1 ரீலில் 2 குழந்தைகளுக்காக காத்திருக்கும் திலீபன் புகழேந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புலவர் புலமைப்பித்தன் பேரன் திலீபன் புகழேந்தி (Dhileepan Pugazhendhi) மலையாள சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற அதுல்யா பாலக்கல் (Athulya palakkal) என்பவரை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் வரும் 2024 பிப்ரவரியில் தங்களுக்கான புதுவரவை (குழந்தை) எதிர்பார்த்து உள்ளனர்.

திலீபன் புகழேந்தி நடித்த ‘எவன்’ திரைப்படம் இவ்வருடம் வெற்றி படமாக அமைந்திருந்தது.

அதைத்தொடர்ந்து ‘சாகாவரம்’ திரைப்படம் இறுதிக்கட்டப் பணியில் உள்ளார்.

‘ஆண்டனி’ என்கிற திரைப்படம் ஆரம்ப கட்ட வேலைகளும் நடைபெறுகின்றன.

இவ்விரண்டு திரைப்படங்களும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் அடுத்த வருடம் மிக பிரமாண்டமாக வெளி வர உள்ளது.

கூடுதல் தகவல்..

சினிமாவைப் பொறுத்தவரை படைப்பாளிகள் தங்களுடைய படைப்பை திரைப்படத்தை ஒரு குழந்தையாகவே பாவிப்பார்கள்.

பல மாதங்கள் உழைத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்வது ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என்றும் சொல்வார்கள்.

அப்படி பார்க்கையில் திலீபனுக்கு நிஜத்தில் குழந்தையும் திரையில் இரண்டு குழந்தை (படங்களும்) வரவிருப்பதால் இரண்டும் சிறப்பான குழந்தையாக பேரும் புகழும் அடைய வாழ்த்துக்கள்.

திலீபன் புகழேந்தி

Dhileepan Pugazhendhi waiting for his baby & movie release

சாண்டியின் பெண் கேரக்டர் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

சாண்டியின் பெண் கேரக்டர் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.

இப்படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றவர் நடன இயக்குனர் சாண்டி.

சாண்டி தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறது.

அந்த படத்திற்கு ‘ரோசி’ என பெயரிடப்பட்டுள்ளது.

கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கும் இந்த படத்தில் நடிகர் யோகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு குருகிரண் இசையமைக்கிறார்.

இந்நிலையில், சாண்டி நடிக்கும் ‘ரோசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஆண்டாள் என்ற பெண் கதாபாத்திரத்தில் சாண்டி நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் கன்னட மொழி போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அதே போல தமிழ் மொழி போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோசி

sandy’s rosy movie poster released by lokesh kanagaraj

சூப்பர் ஸ்டார் யார்.? கமல் – அமீர்கானுடன் இருந்த போட்டோவை பகிர்ந்த விஷ்ணு விஷால்

சூப்பர் ஸ்டார் யார்.? கமல் – அமீர்கானுடன் இருந்த போட்டோவை பகிர்ந்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.

அந்தப் படத்தின் டீசர் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது. இதன் பின்னர் நவம்பர் 14ஆம் தேதி தன்னுடைய X பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வந்தார். அது சர்ச்சையானது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்..

அதன் விவரம் வருமாறு.

கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் தான் (விஷ்ணு) போட்டோவை பகிர்ந்து அதில்.. ’ஃபேவரிட் படங்களுக்கு எல்லாம் ஃபேவரிட்’ என்று குறிப்பிட்டு ‘Superstars are superstars for a reason’ என பதிவிட்டார்.

பின்னர் அந்த வார்த்தைகளை மாற்றி ’stars are stars for a reason’ இருந்தார்.

தற்போது பதிவில்…

சூப்பர்ஸ்டார்கள் சூப்பர்ஸ்டார்கள் தான். அந்தப் பதிவை நான் எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் அல்ல. சூப்பர்ஸ்டார்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

என்னுடைய டைம்லைனில் நெகட்டிவிட்டியை பரப்புவோர் இங்கிருந்து கிளம்புங்கள். நமக்கென்று ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு. அப்பாற்பட்டு, சாதித்த அனைவருமே சூப்பர்ஸ்டார்கள்தான்.” என பதிலளித்துள்ளார்.

Vishnu Vishal click with Kamal and Amirkhan became controversy

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பதவியிலிருந்து விலகிய திருப்பூர் சுப்ரமணியம்

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பதவியிலிருந்து விலகிய திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பார்கள்.

ஆனால் அவர்கள் வெற்றிக்கு காரணமான தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ பெரிதாக வெளியே தெரிவதில்லை.

அதுபோலதான் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும்.. ஆனால் தமிழக ரசிகர்களை பொறுத்தவரை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மிகவும் பிரபலம்.

காரணம் இவர் யூடியுப் மற்றும் டிவி சேனல்களில் கொடுக்கும் இன்டர்வியூகள் எப்போதுமே வைரலாக இருக்கும்.

இந்த நிலையில் இவர் தீபாவளியன்று அரசு அனுமதி இன்றி ஆறு காட்சிகளை அவரது சக்தி சினிமாஸ் திரையரங்கில் திரையிட்டுள்ளார்.

இதனை எடுத்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் ராஜினாமா..

சமீபத்தில் இவரது திரையரங்கத்தில் தீபாவளி அன்று காலை அனுமதியின்றி படங்களை திரையிட்டதாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளர்.

திருப்பூர் சுப்பிரமணியம்

Tirupur Subramanyam resigned his post from theatre owners association

PONGAL 2024 ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய்சேதுபதி

PONGAL 2024 ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த ஆண்டு 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கௌரவத் தோற்றத்தின் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் பொங்கல் சமயத்தில் வெளியாகிறது. இதன் டீசர் கடந்த நவம்பர் 12 தீபாவளி அன்று வெளியானது. இந்த டீசரிலும் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதற்கு முன்னரே சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான் இசையமைப்பில் உருவான ‘அயலான்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ படமும் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படமும் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ளனர்.

ப்ரீத்தம் இசையமைக்க தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியிருக்கிறார்.

மது நீலண்டன் ஒளிப்பதிவு செய்ய, பூஜா லதா சூர்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது.

மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas movie release postponed to Pongal 2024

More Articles
Follows