‘பிக்பாஸ்’ வின்னர் அசீம் படத்தை இயக்கும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் இயக்குனர்

‘பிக்பாஸ்’ வின்னர் அசீம் படத்தை இயக்கும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் அசீம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழக ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக இவர் அறிவிக்கப்பட்டதை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அசிம் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ விஜய்சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பொன்ராம்.

இவரது படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதையம்சம் உள்ள படங்களாகவே இருக்கும். எனவே இந்த படமும் கிராமத்து பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தின் நாயகி & தயாரிப்பாளர் மற்றும் இதர விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Azeem next movie is directed by ponram

சமந்தாவுடன் விவகாரத்து ஏன்.? ‘கஸ்டடி’ மீட்டிங்கில் கஷ்டத்தை சொன்ன நாக சைதன்யா

சமந்தாவுடன் விவகாரத்து ஏன்.? ‘கஸ்டடி’ மீட்டிங்கில் கஷ்டத்தை சொன்ன நாக சைதன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இவர்களுடன் அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இளையராஜா – யுவன் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் இந்த படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதன் பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் நாக சைதன்யா தன்னுடைய இல்லற வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்.

“நாங்கள் பிரிந்து 2 வருடம் ஆகிறது. முறைப்படி விவாகரத்து செய்துவிட்டோம். அது ஒரு வருடம் ஆகிவிட்டது.

நாங்கள் இருவரும் அவரவர் வாழ்க்கையின் அடுத்த கட்டத்மிற்கு நகர்ந்துவிட்டோம்.

இனிமையானவர் சமந்தா. எங்களின் அந்த திருமண வாழ்க்கை மீது மிகுந்த மரியாதை இப்போதும் உண்டு.

ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பும்போதுதான் அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வதந்திதான் பிரச்சினைக்கு காரணம். முதலில் அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. பிறகு அது எங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.” என்றார்.

Why divorce with Samantha? Naga Chaitanya talks about the difficulty in the ‘custody’ meeting

நேதாஜீ மரணம் : ஜூன் மாதம் ரகசியங்களை சொல்ல வரும் ‘ஸ்பை’

நேதாஜீ மரணம் : ஜூன் மாதம் ரகசியங்களை சொல்ல வரும் ‘ஸ்பை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘கார்த்திகேயா 2’ எனும் திரைப்படத்திற்கு பிறகு அப்படத்தின் நாயகனான நிகில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் படைப்பு ‘ஸ்பை’.

இந்த படைப்பு 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த புலனாய்வு சார்ந்த படைப்பாக இருக்கும். நடிகர் நிகில் நடித்திருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ஸ்பை’ படத்தின் பின்னணியைப் பற்றி தயாரிப்பாளர்கள் ஒரு சிறிய காணொளியை வெளியிட்டிருந்தனர்.

இதில் இந்திய நாட்டின் சிறந்த ரகசியம் என்ன? என்பதையும், ‘நீ எனக்கு ரத்தம் கொடு நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன்’ என்ற முழக்கத்தை முதன்முதலாக முழங்கிய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பற்றியது என்பதையும் விவரித்தது.

நேதாஜீ சுபாஷ் சந்திர போஸின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. அந்த மறைக்கப்பட்ட ரகசியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்பை திரைப்படம் தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படம் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கிறது. மேலும் இந்த ‘ஸ்பை’ திரைப்படம், உளவு தொடர்பான வழக்கமான படைப்பாக இல்லாமல் புதிதாக உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் மூலம் பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனத்தை சேர்ந்த கே. ராஜசேகர் ரெட்டியும், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சரந்தேஜ் உப்பளபதியும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் பிரத்யேக காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் இந்த ‘ஸ்பை’ திரைப்படம் ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று வெளியாகிறது என்றும், இப்படத்தின் டீசர் மே பன்னிரண்டாம் தேதியன்று வெளியாகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், ஆக்சன் கலந்த ஸ்பை திரில்லராக உருவாகி இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கான கதையை தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் காட்சித் துணுக்குகள் மற்றும் ஏனைய போஸ்டர்கள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த்தா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக நடிகைகள் ஐஸ்வர்யா மேனன் மற்றும் சான்யா தாக்கூர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிசு சென் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பகாலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஸ்பை

SPY movie Theatrical Release On June 29th, Teaser On May 12th

இசைப் புயல் ரஹ்மான் இசையில் பாடிய வைகைப் புயல் வடிவேலு

இசைப் புயல் ரஹ்மான் இசையில் பாடிய வைகைப் புயல் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

“மாமன்னன்” படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைபுயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் “மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. தற்போது இப்பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “மாமன்னன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
இயக்கம் – மாரி செல்வராஜ்
இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
கலை – குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு – செல்வா Rk
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
பாடல் – யுகபாரதி
நடனம் – சாண்டி
நிர்வாக மேற்பார்வை – E.ஆறுமுகம்
விநியோக நிர்வாகம் – ராஜா.C
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Actor Vadivelu has sung a song in Rahman’s music

லியோ படத்தில் இணைந்த அட்வகேட் நடிகை

லியோ படத்தில் இணைந்த அட்வகேட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் புதிய ஷெட்யூல் சிறிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் தொடங்கியது.

மிகவும் பரபரப்பான கேங்ஸ்டர் படத்தில் ஏற்கனவே பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் உள்ளனர்.

வக்கீலாக இருந்து நடிகையாக மாறிய சாந்தி மாயாதேவி லியோ வில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

லோகேஷ் கனகராஜுடன் ‘லியோ’ படத்தின் ஷூட்டிங்கின் தற்போதைய ஷெட்யூலில் தான் இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படத்தை சாந்தியே பகிர்ந்துள்ளார்.

மோகன் லால் மற்றும் மீனா நடித்த ‘த்ரிஷ்யம் 2’ மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advocate turned actress joins Thalapathy Vijay’s ‘Leo’

JUST IN ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி கேரக்டர் லுக் ரிலீஸ்.; ‘பாட்ஷா’ பாய்-க்கு நிகராகுமா.?

JUST IN ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி கேரக்டர் லுக் ரிலீஸ்.; ‘பாட்ஷா’ பாய்-க்கு நிகராகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர்.

ரஜினியின் தங்கையாக முன்னாள் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். 1980-90-களில் ஜீவிதா பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ரஜினி படத்தில் இணைந்து நடிக்கவில்லை.

தற்போது தான் முதன்முறையாக ரஜினியுடன் ஜீவிதா நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் நேற்று மே 7 ஞாயிறு தங்களது ட்விட்டர் பக்கத்தில் லால் சலாம் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதில் ” நமது பாய் மும்பைக்கு திரும்பியுள்ளார்” என குறிப்பிட்டு இன்று நள்ளிரவு லால் சலாம் படத்தில் ரஜினி கதாபாத்திரம் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்து இருந்தது.

ரஜினி நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் மும்பை மாநகரம் இடம்பெற்று இருக்கும். அதில் பாட்ஷா பாய் பாம்பே நகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. எனவே ‘லால் சலாம்’ படத்திலும் இந்த கேரக்டர் பவர்ஃபுல்லாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்து நம் FILMISTREET தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினியின் கேரக்டர் மொய்தீன் பாய் என தெரிவித்து ரஜினியின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இவர் நாம் எதிர்பார்த்த மாதிரி பாட்ஷா பாய்க்கு நிகராக வருவாரா என படம் வரும்போது காத்திருந்து பார்ப்போம்..

Rajinikanth as Moideen Bhai in Lal Salaam

More Articles
Follows