தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகார்த்திகேயனின் ஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘அயலான்’ அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப்படம் 2024 பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வரும் நிலையில், படக்குழு ‘தி வாய்ஸ் ஆஃப் அயலான்’ பற்றிய ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்தான அறிவிப்பு வெளியானதில் இருந்தே சமூகஊடக தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பல பெயர்களை யூகித்து சொல்லி வந்தனர். அப்படி இருக்கும்போது ‘அயலான்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் ஈர்ப்பு, ரகுல் ப்ரீத் சிங்கின் அழகு, வில்லன் ஷரத் கேல்கர், நீரவ் ஷாவின் சிறந்த ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்புக்கு தேசிய விருது பெற்ற ராஜகிருஷ்ணன், சிங்க் சினிமா SFX பணிகளை மேற்கொள்ள, இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திறமையாளர்களின் வரிசையில் தற்போது சித்தார்த்தும் இணைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
’அயலான்’ திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்க ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார்.
*தொழில்நுட்ப குழு:*
எழுத்து, இயக்கம்: ஆர்.ரவிக்குமார்,
ஒளிப்பதிவு: நீரவ் ஷா,
படத்தொகுப்பு: ரூபன்,
தயாரிப்பு வடிவமைப்பு: டி. முத்துராஜ்,
சண்டைப் பயிற்சி: அன்பறிவ்,
விஎஃப்எக்ஸ்: பிஜாய் அற்புதராஜ், பாண்டம் எஃப்எக்ஸ்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
ஒலிக்கலவை: ராஜகிருஷ்ணன்,
நடனம்: கணேஷ் ஆச்சார்யா, பரேஷ் ஷிரோத்கர், சதீஷ் கிருஷ்ணன்,
ஆடை வடிவமைப்பு: பல்லவி சிங், நீரஜா கோனா,
பாடல் வரிகள்: விவேக், மதன் கார்க்கி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
கிரியேட்டிவ் புரோமோஷன்: பீட்ரூட்,
போஸ்டர் வடிவமைப்பு: கோபி பிரசன்னா,
வண்ணக்கலைவை: Redchillies.color,
கலரிஸ்ட்: கென் மெட்ஸ்கர்,
தயாரிப்பு: கேஜேஆர் ஸ்டுடியோஸ்,
நிர்வாக தயாரிப்பாளர்: டி ஏழுமலையான்
Sivakarthikeyans Ayalaan update Siddharth joins hands with SK