சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.

இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தாவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இந்த நிலையில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் சமந்தா.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்..

“ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures) என்ற என் தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி. புதிய சிந்தனைகள் அடங்கிய படைப்புகளை முன்னிலைப்படுத்துவதே நோக்கம்.

வலிமையான சிக்கலான தன்மைகள் கொண்ட கதைகளை நிறுவனம் ஊக்குவிக்கும். அர்த்தமுள்ள உலகளாவிய படைப்புகளை வெளிப்படுத்தவும் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் சமந்தா.

Actress Samantha started new production house

கூகுள் 2023 லிஸ்ட்.; முதலிடத்தில் ஜவான்.. 4ல் – ஆதிபுருஷ்.. 7ல் – ஜெயிலர்.. 8ல் – லியோ

கூகுள் 2023 லிஸ்ட்.; முதலிடத்தில் ஜவான்.. 4ல் – ஆதிபுருஷ்.. 7ல் – ஜெயிலர்.. 8ல் – லியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 ஆம் ஆண்டில் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம்..

இன்று டிசம்பர் 12ஆம் தேதி இந்த நிலையில் இந்திய சினிமா ரசிகர்களால் கூகுளில் அதிக தேடப்பட்ட படங்கள் விவரங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஷாருக்கான் தயாரித்து நடித்த அட்லி இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில்… கர்தார் 2

மூன்றாம் இடத்தில்… ஓபன் ஹெய்மர்

நான்காம் இடத்தில்… ஆதிபுருஷ்

ஐந்தாம் இடத்தில்… பதான்

ஆறாம் இடத்தில்… தி கேரளா ஸ்டோரி

ஏழாம் இடத்தில்… ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் நடித்த ‘ஜெயிலர்’

எட்டாம் இடத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் நடித்த ‘லியோ’.

ஒன்பதாம் இடத்தில்.. டைகர் 3.

பத்தாம் இடத்தில் விஜய் – ராஷ்மிகா நடித்த ‘வாரிசு’.

Google released Most searched movies of 2023

ரஜினி பிறந்தநாளில் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரிலீஸ்

ரஜினி பிறந்தநாளில் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் அடுத்தது வெளியாக உள்ள படம் ‘லால் சலாம்’. இந்த படம் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகி இருந்தது.

தற்போது ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை ‘ஜெய் பீம்’ படப்புகழ் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப்பச்சன்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே ஹிந்தியில் இணைந்து நடித்திருந்தாலும் நேரடி தமிழ் படத்தில் அமிதாப்பச்சன் நடிப்பது இதுவே முதன்முறையாகும்.

மேலும் ராணா ரகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நாளை டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது.

Thalaivar170 Title with Birthday Special Teaser Tomorrow at 5PM

‘ஜெய்பீம் 2’ஆம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த முன்னாள் நீதியரசர் சந்துரு

‘ஜெய்பீம் 2’ஆம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த முன்னாள் நீதியரசர் சந்துரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்த படம் ‘ஜெய் பீம்’ இந்த படத்தை கொரோனா லாக்டவுன் சமயத்தில் வெளியான இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

மிகப்பெரிய வரவேற்பு பெற்று பல சர்ச்சைகளை உண்டாக்கியது. ஒரு பக்கம் ஜெய் பீம் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் சில சாதிய அமைப்புகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த திரைப்படம் ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துருவின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் எடுக்கப்பட்டிருந்தது.

1990 களில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு போலீஸ் விசாரணையை மையப்படுத்தி (இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராசாகண்ணு – பார்வதி) இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் மூலம் இந்த வழக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது…

“‘ஜெய்பீம்’ எனக்கு பல படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. படம் வெளியான பிறகு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல மாணவர்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிட்டியது.” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.

கூடுதல் தகவல்..

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaibhim 2 update by Ex Judge Chandru

அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே..; இவானா நடிக்கும் ‘மதிமாறன்’

அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே..; இவானா நடிக்கும் ‘மதிமாறன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.

பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்
இயக்கம் – மந்த்ரா வீரபாண்டியன்
தயாரிப்பு நிறுவனம் – ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல்
TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர் – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – பர்வேஸ் K
எடிட்டர் – சதீஷ் சூர்யா
கலை இயக்குனர் – V.மாயபாண்டி சண்டைக்காட்சி – சுரேஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் – கடலூர் M ரமேஷ், ஷேர் அலி N (வெங்கட் செங்குட்டுவன்) ஒப்பனை – என்.சக்திவேல்
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

Love Today fame Ivana starrer Mathimaaran

எப்போதும் ஜெய் ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்தேன்..; வைபவ்வின் ‘ஆலம்பனா’ அலப்பறை

எப்போதும் ஜெய் ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்தேன்..; வைபவ்வின் ‘ஆலம்பனா’ அலப்பறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி, லியோனி, காளிவெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட நடித்துள்ள படம் ‘ஆலம்பனா’.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது…

இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ ஹீரோயின் அனைவருக்கும் என் நன்றி. KJR Studios தயாரிப்பு நிறுவனம் என் சொந்த நிறுவனம் போல அவர்களின் அனைத்து படங்களிலும் நான் நடித்துள்ளேன். இந்தப்படம் நீங்கள் மனம் விட்டு சிரித்து மகிழும் படமாக இருக்கும். இப்படம் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும். இயக்குநருக்கும், என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் வைபவ் பேசியதாவது…

இப்படத்தின் கதையை KJR லிருந்து சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன்.

இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன்.

பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். இந்தப்படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர்கள்: வைபவ், பார்வதி, முனிஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் I லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங்

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: பாரி K விஜய்
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
எடிட்டிங் : ஷான் லோகேஷ்
கலை: கோபி ஆனந்த்
சண்டைக்காட்சிகள்: பீட்டர் ஹெய்ன்
பாடல் வரிகள் -பா.விஜய், கபிலன் வைரமுத்து
நடனம்: ஷெரிப்
ஆடை வடிவமைப்பாளர் – கீர்த்தி வாசன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Mostly acted with Jai and Premji says Vaibhav

More Articles
Follows