தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி.
வடிவேலு, சூரி, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் கதையின் நாயகர்களாக மாறிவிட்ட நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லிக்கு காமெடி வாய்ப்புகள் வந்த வண்ண உள்ளன.
‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’, ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களிலும் வாய்ப்பை பெற்றார் ரெடின் கிங்ஸ்லி.
இந்த நிலையில் இன்று டிசம்பர் 10ஆம் தேதி ரெடின் கிங்ஸ்லிக்கும் டிவி சீரியல் நடிகை சங்கீதாவுக்கும் மைசூரில் திருமண நடைபெற்றுள்ளது.
கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்களை நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Actor Redin Kingsley and Actress Sangeetha got married at Mysore
கூடுதல் தகவல்…
‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு உதவிய டாக்டர் ஸ்ரீநாத்தின் மனைவி மதி என்ற கேரக்டரில் நடித்தவர் சங்கீதா. மேலும் கார்த்தியுடன் ‘சுல்தான்’ &, அஜித்துடன் ‘வலிமை’ படத்திலும் நடித்து இருந்தார் சங்கீதா.