தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு 4 வேடங்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகவுள்ளதால், முதல் பாகத்தை மட்டும் வருகிற ஜீன் மாதம் 23ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்தனர்.
மேலும் இப்படத்தில் இடம்பெற்ற, ஒரு பாடலை விரைவில் வெளியிடவுள்ளதாக சொல்லப்பட்டது.
எனவே, இதுபற்றிய ஹேஷ்டேக்குகளை சிம்பு ரசிகர்கள் ஏற்படுத்தி, அதாவது கிட்டதட்ட 18க்கும் மேற்பட்ட ஹேஷ்டேக்குகள் உபயோகித்து அனைத்தையும் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.
இவையில்லாமல், சிம்புவே எழுதியுள்ள ஒரு பாடலின் சில வரிகளும் வெளியானது.
அதில் ‘யாருடா நான்னு கேட்பவன் புத்திசாலிடா, நான் யாரு தெரியுமான்னு கேட்பவன் கோமாளிடா’ என்ற வரிகளும் நேற்று டிரெண்ட் ஆனது.
Simbu fans created 18 tags and made all trends regarding AAA movie