மீண்டும் அது நடக்கனும்.. காத்திருக்கும் தமன்னா..; ஆசையை நிறைவேற்றுவாரா சிம்பு..?

மீண்டும் அது நடக்கனும்.. காத்திருக்கும் தமன்னா..; ஆசையை நிறைவேற்றுவாரா சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால், ஆர்யா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இதில் நிறைய படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் சிம்பு உடன் இணைந்து நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில் அண்மையில் சிம்பு குறித்து தன் பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.

’விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துவிட்டேன். அவர்களுடன் கெமிஸ்ட்ரியும் நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது.

ஆனால் சிம்புவுடன் நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகவில்லை. படம் ப்ளாப் ஆனது.

எனவே மீண்டும் சிம்புவுடன் நடிக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் தமன்னா.

…. தமன்னாவின் ஆசையை சிம்பு நிறைவேற்றுவாரா-? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamannaah wants to act with STR again

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ ஆ(ஓ)ட்டத்தை தொடங்கி வைத்த மிஷ்கின்

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ ஆ(ஓ)ட்டத்தை தொடங்கி வைத்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘ரேக்ளா’.

‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

Prabhu Deva’s Rekla Movie Shooting Starts Today With Poojai

மன்மத சாமி.. மந்திர சாமி..; விஜய்யுடன் டூயட் பாட ரெடியாகும் ராஷ்மிகா

மன்மத சாமி.. மந்திர சாமி..; விஜய்யுடன் டூயட் பாட ரெடியாகும் ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் ‘தளபதி 66’ (தற்காலிக டைட்டில்) படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தமன் இசையமைக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம்.

இவர் தமிழில் ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஹே சாமீ்… ஹே சாமீ.. மன்மத சாமி.. மந்திர சாமி.. என்று ஆட்டம் போட்டு இருந்தார் ராஷ்மிகா.

எனவே சூப்பர் டான்சர் ஆன விஜய்யுடன் ராஷ்மிகா இணைவதால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என தெரிகிறது.

பூவே உனக்காக & காதலுக்கு மரியாதை படம் போல காதலுடன் குடும்ப உறவுகளை பற்றி பேசும் படமாக ‘தளபதி 66’ திரைப்படம் இருக்குமென இதன் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Rashmika joins for a new film

சிலம்பரசனுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சிலம்பரசனுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ‘முஷாபீர்’ என்ற பாடல் ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த பாடல் 4 மொழிகளில் வெளியாகிறது.

தமிழ் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். தமிழில் பயணி என்று பாடல் வெளியாகும்

முசாபிர் வீடியோவை மார்ச் 8ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் அதற்குள் ஐஸ்வர்யாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீடியோ வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

18 வருடமாக நடிகர் தனுஷ் உடன் திருமண வாழ்க்கையில் இருந்த இவர் அண்மையில் தனுஷை பிரிந்தார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிலம்பரசனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

திருமணத்திற்கு முன்பு நடிகர் சிம்புவுடன் நல்ல நட்பில் இருந்தவர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinikanth joins with Simbu for his next

காமெடியன்களையும் அப்டேட் செய்யும் சுந்தர்-சி படங்கள்.; அடுத்து இவரா?

காமெடியன்களையும் அப்டேட் செய்யும் சுந்தர்-சி படங்கள்.; அடுத்து இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கும் சென்டிமெண்ட்டுக்கும் பஞ்சமிருக்காது.

எனவே இவரது படங்களுக்கு தாய்மார்களுக்கு மத்தியில் பெரும் ஆதரவு இருக்கும்.

அதுபோல் அந்தந்த காலகட்டங்களில் பிரபலமான காமெடியன்களை தன் படத்தில் பயன்படுத்தி ஹீரோவுக்கு நிகரான வேடம் கொடுப்பார்.

சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணிக்கு அப்படி ஒரு வேடத்தை கொடுத்திருந்தார்.

அதுபோல் வின்னர் படத்தில் வடிவேலுவின் வேடம் பெரிதாக பேசப்பட்டது.

பின்னர் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் சந்தானம் காமெடி வேற லெவலில் இருந்தது, இப்படியாக காமெடியன்களையும் தன் படத்தில் அப்டேட்டாக வைத்திக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

தற்போது சூரி, யோகிபாபு, சதீஷ் ஆகியோரையும் தன் படத்தில் காமெடிக்கு பயன்படுத்தி வருகிறார். ஆனால் இவர்கள் தற்போது கதையின் நாயகன்களாக மாறிவிட்டனர்.

எனவே தன் பார்வையை ரெடின் கிங்ஸ்லீ பக்கம் திருப்பியிருக்கிறார். A1 மற்றும் டாக்டர் படங்களில் ரெடின் கிங்ஸ்லீ காமெடி பெரிதாக பேசப்பட்டது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சுந்தர் சி தற்போது ஸ்ரீகாந்த், ஜெய், ஜீவா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இதில்தான் ரெடின் கிங்ஸ்லீக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கிறாராம்.

This comedy actor plays important role in Sundarc’s next

உலகமே ஒரு கணக்கில்தான் ஓடுது.; ‘குதிரைவால்’ ட்ரைலரால் ரசிகர்கள் குஷி

உலகமே ஒரு கணக்கில்தான் ஓடுது.; ‘குதிரைவால்’ ட்ரைலரால் ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளைய கலைஞர்களில் ஒருவர் கலையரசன். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஒரு சில படங்களில் நாயகனின் நண்பனாக நடித்தாலும் அதிலும் தன் கேரக்டரில் ஜொலிக்கிறார்.

இவர் தற்போது ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஷன்ஸ் தயாரித்துள்ள குதிரைவால் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

ரஜினியின் காலா படத்தில் நடித்த அஞ்சலி பட்டேல் இதில் நாயகியாக நடித்துள்ளார். மனோஜ் – சியாம் என்ற இருவர் இயக்கியுள்ளனர்.

அடுத்த வாரம் மார்ச் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.

அந்த டிரைலரில்… “இந்த உலகமே ஒரு (கணக்கை) மேத்தமெடிக்ஸை வைத்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற வாசகத்துடன் தொடங்குகிறது.

1980களில் எம்ஜிஆர் இறந்த காலக்கட்டத்தில் நாயகன் கலையரசனுக்கு குதிரைவால் முளைக்கிறது. இதை வைத்து படத்தின் கதைக்களத்தை அமைத்துள்ளனர்.

இந்த வித்தியாசமான ட்ரைலரால் ரசிகர்கள் குஷியாகி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

Intriguing fantasy trailer for blockbuster director Pa Ranjith’s next – Kuthirai Vaal

More Articles
Follows