தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தொடர்ந்து ஜீவா நடிக்கும் கீ படத்தை தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.
இப்படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் இப்பட இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி, சுஹாசினி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட கீ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக விஷால், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது…
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார்.
அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே விஷாலின் ஆதரவாளர் இது பற்றி இங்கு பேசக்கூடாது” என்றார்.
இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால்.. “தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.
ஆனால் சிம்பு தரப்பில் இருந்து எந்த ஒரு ரியாக்சனும் இல்லை.
எனவே இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என்பதே தெரியவில்லை. அதனால் தான் இந்த பிரச்சனையில் இன்னும் காலதாமதம் ஆகிறது” என்றார்.