தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே மட்டுமே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் அந்த தயாரிப்பாளர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கமும் கேட்டது. அவரது படங்களுக்கு தடையும் போட்டது.
தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
ஆனால் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.
இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில் அவர்கள் சிம்புவுக்கு ஆதரவாக பேசி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Simbu fans condemns Vishal and Producer Michael Rayappan