நான் திருந்திட்டேன்.. சிம்புவின் வார்த்தையை கேட்டு ஏமாந்த தயாரிப்பாளர்

நான் திருந்திட்டேன்.. சிம்புவின் வார்த்தையை கேட்டு ஏமாந்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer michael rayappanஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

எனவே தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு சிம்பு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் மைக்கேல்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர்…

சிம்பு வைத்து படம் எடுத்த பிறகுதான் அவரை முழுமையாக தெரிந்துக் கொண்டேன்.

சொன்ன நேரத்திற்கு படத்திற்கு வரமாட்டார். என் மகள் திருமணம் முடிந்த மறுநாள் விருந்து வைத்திருந்தேன். அப்போது மாப்பிள்ளையை கூட கவனிக்காமல் சிம்பு வீட்டிலேயே இருந்தேன்.

சூட்டிங் அழைத்தாலும் அவர் வருவதில்லை. பிறகு பார்க்கலாம் என்பார்.

அவர் படம் என்றால் பைனான்சியர் கூட பணம் தரமறுக்கிறார்.

நான் திருந்திவிட்டேன். என்னை நம்பி என்னிடம் வேலை பார்க்கும் சில குடும்பங்கள் உள்ளது.

அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை. என்னை வைத்து படம் எடுங்கள். நான் ஒத்துழைக்கிறேன் என கூறினார்.

ஆனால் அவர் சொன்னது எதையும் செய்யவில்லை. இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். என தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்றால் பல மணிநேரம் காக்க வைக்கிறார். அவரால் எனக்கு ரூ 18 கோடி நஷ்டம். கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், அவர் திருந்துவதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கேவலமான படத்தை எடுத்தேன்.. ஆதிக்ரவிச்சந்திரன் ஓபன் டாக்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கேவலமான படத்தை எடுத்தேன்.. ஆதிக்ரவிச்சந்திரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu with adhik ravichandranஜிவி. பிரகாஷ் நடிப்பில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்தில் காமெடி என்ற பெயரில் காம நெடி அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் பிட்டு படம் ரேஞ்சுக்கு பாடல்களும் இருந்தன.

ஆனால் படம் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.

எனவே இதனையடுத்து சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார் ஆதிக்ரவி.

ஆனால் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்து விட்டது.

இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தயாரிப்பாளரும் இயக்குனரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது சிம்பு மீது சரமாரி புகார்களை கூறினார் தயாரிப்பாளர்.

இயக்குனர் பேசும்போது… முதல் படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஒரு கேவலமான படம்தான். ஆனால் நன்றாக ஓடியது.

2வது படத்தை ஒரு கமர்ஷியலாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் சிம்பு செய்த பிரச்சினைகளால் படம் வேறுமாதிரி ஆகிவிட்டது.

அவர்தான் AAA படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வற்புறுத்தி இப்படி செய்துவிட்டார்” என தெரிவித்தார்.

AAA ஓவர்; இப்போ அதுக்கு பதில் சொல்ல முடியாது… மறுக்கும் சிம்பு

AAA ஓவர்; இப்போ அதுக்கு பதில் சொல்ல முடியாது… மறுக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbuஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்துள்ளார்.

மேலும், 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை சிம்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து சிம்பு தெரிவித்துள்ளதாவது..

ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கும்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த தயாரிப்பாளர் புகார் கூறினார் பதில் சொல்கிறேன்.

தற்போது படம் வெளியாகிவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை.

அப்படியொரு சட்டமும் இல்லை. என்றைக்குமே நான் தயாரிப்பாளரைப் பற்றி தவறாக பேசமாட்டேன்.

என் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் அப்போது என் என் பதிலை தெரிவிவிப்பேன்.” இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்

15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் நடித்த நகுல்

15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் நடித்த நகுல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nakul stillsட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படத்தின் இயக்குநர் ராஜ்பாபு பேசுகையில், நான் மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியி ருக்கிறேன். தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. திரைக்கதை யாசிரியர் ராஜேஷைத்தவிர டெக்னிசீயன்ஸ் எல்லாரும் புதியவர்கள். இவர்களின் சப்போர்ட் எனக்கு இருந்ததால் இப்படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது என்றார்.

நடிகர் நகுல் பேசுகையில், ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் நடித்திருக்கும் படம் செய். இதில் சரவெடி சரவணன் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைத்து கமர்சியல் எலிமெண்ட்டுகளும் சரியான அளவில் உள்ளது.

‘நடிகா நடிகா’ எனத் தொடங்கும் பாடலை, 15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து படமாக்கினார்கள். அந்த காட்சி படமாக்கப்படும் போது கடினமாக இருந்தது. ஆனால் காட்சியாக பார்க்கும் போது வியப்பாகவும், மனதிற்கு திருப்தியாக இருந்தது.

பயிற்சியில்லாமல் சினிமாவில் ஜெயித்த ரகசியம் சொன்ன விஜய்ஆண்டனி

பயிற்சியில்லாமல் சினிமாவில் ஜெயித்த ரகசியம் சொன்ன விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyஇன்று அண்ணாதுரை படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு இப்பட நாயகனும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது திரையுலகில் தான் ஜெயித்த ரகசியம் பற்றி பேசினார்.

காஜேஜ் நாட்களில் முதன்முறையாக எந்த வித பயிற்சியும் இல்லாமல் மேடையேறி ஒரு பாடலை பாடினேன்.

அதன்பின் பாட வேண்டும் என்ற ஆசை வந்தது. இசை பள்ளிக்கு சென்று முறையாக இசை கற்கவில்லை.

ஆனால் இசை கற்காமல் இன்று இசைத்‘ துறையில் இருக்கிறேன் என்பதே உண்மை. அதுபோல் நடிப்பை கற்காமல் இப்போது நடிப்புத் துறையிலும் நுழைந்துவிட்டேன்.

ஒருமுறை முதன்முறையாக ரத்தம் கொடுக்க நினைத்தபோது.. என்னை பரிசோதித்தால் அவர்கள் அசந்துவிடுவார்கள். இதுபோன்ற ரத்த வகையே நாங்கள் பார்த்தது இல்லை. என்பார்கள் என்று நினைத்துக் கொண்டுதான் ரத்தம் தானம் செய்தேன்.

அதுபோல் சென்னைக்கு வந்து முதல்முறையாக இறங்கியபோது மண்ணில் கால் வைத்தபோது மழை வரும் என சினிமா பாணியில்தான் யோசித்தேன்.

இது ஏன்? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு முயற்சியும் என்னையறியாமல் ஏதோ நினைப்பேன்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்கலாம். ஆனால் பயிற்சி இருந்தால் முறையாக ஜெயிக்கலாம்.

ஆனால் நான் எந்தவித பயிற்சி இல்லாமல் எப்படியோ வந்துவிட்டேன். இது சிலருக்கு உதாரணமாக இருக்கலாம். இப்படியும் சாதிக்க முடியும் என்று அவர்களுக்கு புரிய இது ஒரு உதாரணமாக இருக்கும்.

ஆனால் இதற்கு பின்னணியில் நான் பட்ட வலிகள் அவமானங்கள் அதிகம். அவற்றை நான் மறைத்துவிட்டேன்.” என்று மனம் திறந்து பேசினார் விஜய்ஆண்டனி.

மேரேஜ் பண்ணிக்கலாமா கேட்டால் யாரும் ஓகே சொல்லல…? : விஜய்ஆண்டனி

மேரேஜ் பண்ணிக்கலாமா கேட்டால் யாரும் ஓகே சொல்லல…? : விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony stillsவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்து எடிட்டராக பணிபுரிந்துள்ள அண்ணாதுரை படம் இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தன் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் விஜய்ஆண்டனி.

காதலித்து திருமணம் செய்ய ஆசை. எனவே பெண்ணிடம் சென்று காதலை சொல்வேன்.

ஆனால் அந்த பெண்ணிடம் பேசும்போது கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றுதான் கேட்பேன். எனவேதான் யாரும் ஒத்துக்கல போல.

சொந்த ஊரில் இருக்கும்போது முயற்சி செய்தேன். சென்னை வந்த பிறகும் முயற்சி செய்தேன்.

ஆனால் யாரும் ஒத்துக்கல. இறுதியாக ஒப்புக் கொண்டவர்தான் இப்போது என் மனைவி பாத்திமா.” என்று தன் காதல் திருமணத்தை பற்றி பேசினார்.

More Articles
Follows