தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜிவி. பிரகாஷ் நடிப்பில் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இப்படத்தில் காமெடி என்ற பெயரில் காம நெடி அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் பிட்டு படம் ரேஞ்சுக்கு பாடல்களும் இருந்தன.
ஆனால் படம் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.
எனவே இதனையடுத்து சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார் ஆதிக்ரவி.
ஆனால் இப்படம் பெரும் தோல்வியை சந்தித்து விட்டது.
இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தயாரிப்பாளரும் இயக்குனரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது சிம்பு மீது சரமாரி புகார்களை கூறினார் தயாரிப்பாளர்.
இயக்குனர் பேசும்போது… முதல் படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா ஒரு கேவலமான படம்தான். ஆனால் நன்றாக ஓடியது.
2வது படத்தை ஒரு கமர்ஷியலாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் சிம்பு செய்த பிரச்சினைகளால் படம் வேறுமாதிரி ஆகிவிட்டது.
அவர்தான் AAA படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வற்புறுத்தி இப்படி செய்துவிட்டார்” என தெரிவித்தார்.