தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.
இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.
இப்படம் சிம்பு கேரியரில் மாபெரும் தோல்வியை சந்தித்தது.
இதனால் விநியோகர்ஸ்தர்கள் நஷ்டஈடு கேட்க தயாரிப்பாளர் சிம்புவை நாடினார்.
மேலும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கால்ஷீட்டை சிம்புவிடம் கேட்டார்.
ஆனால் அவர் தரப்பில் எந்த பதிலும் சரியாக வழங்கப்படவில்லை.
இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் முறையிட்டார்.
இந்நிலையில் மைக்கேல் ராயப்பனின் நிலையை அறிந்த விஷால் இன்றைய கீ பட விழாவில் அவருக்கு தான் உதவுதாக அறிவித்தார்.
ராயப்பன் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து இயக்குனரை கொண்டு வந்தால் நான் அட்வான்ஸ் வாங்காமல் நடித்துக் கொடுக்கிறேன்.
படம் வந்து வெற்றி அடைந்த பின் அவர் சம்பளம் கொடுக்கட்டும்” என்று தெரிவித்தார்.