எப்படி இருக்க வேண்டிய நான் இப்படி இருக்கேன்.? – மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

எப்படி இருக்க வேண்டிய நான் இப்படி இருக்கேன்.? – மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்றி கூற பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசியதாவது…

“நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா போராடி வந்துட்டு இருக்கேன். என் பயணம் எல்லாருக்கும் தெரியும்.

2004ல் நியூ வெளியானது. 2005ல் அன்பே ஆருயிரே ரிலீஸ் ஆனது. இரண்டுமே பட்டையை கிளப்பியது. கோவை ஏரியாவில் பெரிய ஆர்டிஸ்ட் படம் 1.5 கோடி விற்ற போது, என் படம் 1 கோடி ரூபாய்க்கு விற்றது.

அப்படிப்பட்ட நான் எங்கே இருந்திருக்கனும்.. இப்போ எங்கே இருக்கிறேன்?

வாழ்க்கையில் அவ்வளவு வலி. ஆண்டவன், ஒரே உச்சத்தில் மேலே கொண்டு உட்கார வெச்சுட்டு , திடீரென கண்ணை பிடிங்கின மாதிரி ஆகிடுச்சு.

பல வருடமா, செத்து காணாமல் போய், திரும்ப எழுந்து, இறைவில் என்னுடைய வாழ்க்கை மீண்டும் தொடங்கியது.

அதன் பின் நிறைய படங்களில் நடித்து, மாநாடு வரை பேர் வாங்கி, கடைசியா மார்க் ஆண்டனியில் நல்ல பெயர் கிடைச்சிருக்கு.

நான் கடவுளிடம் கேட்பேன், ‘மக்கள் நம்மை எவ்வளவு ரசித்தார்கள், அந்த இடம் திரும்ப கிடைக்காதா?’ என்று கேட்டேன்.

அதை மார்க் ஆண்டனி வெற்றி 70% திருப்பி கொடுத்துவிட்டது. இதை தக்கவைத்து மக்களை தொடர்ந்து நான் சந்தோஷப்படுத்த வைப்பேன்,’’ என்று எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

SJ Suryah emotional speech at Mark Antony success meet

மாமா.. உங்க சின்ன வெர்ஷன்தான் ஆதிக் ரவிச்சந்திரன்.. – எஸ்ஜே. சூர்யா

மாமா.. உங்க சின்ன வெர்ஷன்தான் ஆதிக் ரவிச்சந்திரன்.. – எஸ்ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்றி கூற பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசியதாவது…

ஆதிக் ரவிச்சந்திரன் அடிக்கடி என்னிடம் வந்து கதை சொல்வார். அதை எனர்ஜியா சொல்லுவார்.. ‘சார்.. உங்க எனர்ஜிக்கு நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு, என்னிடம் சொல்றீங்க, எனக்கு செட்டாக மாட்டேங்குது சார்’ என்றுதான் சொல்வேன்.

கொரோனா லாக்டவுன் காலத்தில், ஒரு கதையை சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. பண்ணலாம் என்று சொன்னேன்.

ஆனால் திடீரென வேறுஒரு நாள் வந்து. ‘சார், வேறு ஒரு படம் முதலில் பண்ணப் போறேன். விஷால் சார் தான் ஹீரோ, நீங்களும் பண்ணனும்’ என்றார்.

‘நல்ல பழுத்த பழமா, ஒரு கேங்ஸ்டர் ரோல் பண்ணனும்’ என்றார் ஆதிக். ‘சார்.. இப்போ தான் வாழ்க்கையில் போராடி ஏதோ ரோல் பண்ணிட்டு இருக்கேன். இப்போ போய், என்னை கிழவனா ஆக்கினால் எப்படி சார்’ என்று மறுத்துவிட்டேன்.

‘மாநாடு’ டப்பிங் போகும் போது, கீழே எனிமி படத்தின் பணிகள் போய்க் கொண்டிருந்தது.

அப்போ விஷால் என்னை பார்த்து ‘சார் அந்த கதை கேட்டீங்களா?’ என்று கேட்டார். வேண்டாம்’ என்றேன்.

‘சார்.. நீங்க கதை கேளுங்க, பிடிக்கலைனா வேண்டாம்’ என்றார். அன்று அவர் சொன்னதால் வேறு வழியின்றி கதை கேட்டேன்.

விஷால் என்னிடம் சொல்லாமல் போயிருந்தால், அதன் பின் ஆதிக் சாரை சந்தித்திருக்க மாட்டேன். இந்த படத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன்.

கதை கேட்டதும் பயங்கர சூப்பரா இருந்தது. விஷாலை அப்பா, பையன் கேரக்டர் வைச்ச மாதிரி. எனக்கும் அப்பா, மகன் கேரக்டர் வைங்க, அப்போ நான் வர்றேன் என்று கூறினேன்.

அப்போது 20 நாள் கழித்து வருகிறேன் சார் என்று போனார். வந்தார் பாருங்க, அப்படி ஒரு நரேஷன். என்ன ஒரு இயக்குனர் சார் அவர். அவரை அப்படியே கட்டிப்பிடிச்சுட்டேன்.

மார்க் ஆண்டனி பார்த்துட்டு எங்க அக்கா பசங்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள், ‘ஏன் மாமா.. இந்த ஆதிக் ரவிச்சந்திரன் உங்க சின்ன வெர்ஷன் போல’ என்றார்கள். எங்களுக்குள் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி செட் ஆகிவிட்டது.”

இவ்வாறு எஸ்ஜே. சூர்யா பேசினார்.

My junior version is Adhik Ravichandran says SJ suryah

சினிமாவில் அறிமுகமாகிறார் அரசியல்வாதி திருநாவுக்கரசர் மகன்

சினிமாவில் அறிமுகமாகிறார் அரசியல்வாதி திருநாவுக்கரசர் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நாயகனாகும் திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன் சாய் விஷ்ணு.

உதவி இயக்குனராக இருந்து கதாநாயகனாக நடிக்கும் திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன் சாய் விஷ்ணு.

காங்கிரஸ் கட்சியின் முன்னால் தமிழ்நாட்டின் தலைவராகவும், முன்னால் மத்திய, மாநில எம். பியும், தற்போது காங்கிரஸ் எம். பி யாக பதவிவகித்து வரும் திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு.

இவர் லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குனர் பா. ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி சினிமாவை சிறப்பாக கற்றுக்கொண்டு தற்போது கதநாயகனாக அறிமுகமாகிறார். படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

எனது குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. எனது அப்பா மருதுபாண்டி என்ற படத்தை தியாரித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம் அதனால் சினிமாவை நன்றாக அறிந்துகொண்டு தற்போது நாயகனாக நடிக்கவிருக்கிறேன் அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்து எனது சினிமா பயணத்திற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் சாய் விஷ்ணு.

Thirunavukkarasu MP son debut in Kollywood

விமல் பட தயாரிப்பாளருக்கு சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சௌந்தரராஜா

விமல் பட தயாரிப்பாளருக்கு சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச் சித்திர வேடங்களில் நடித்து பிரபலமாகி தற்போது நடிகராக உயர்ந்துள்ளவர் சௌந்தரராஜா.

இவர் ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, ‘தர்மதுரை’, ‘பிகில்’, ‘ஜெகமே தந்திரம்’ உள்பட 35-க் கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

சௌந்தரராஜா விக்ரம் பிரபுவுடன் `ரெய்டு’ படத்தில் நடித்துள்ளார் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் திரைக்கு வந்த விமலின் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சௌந்தரராஜாவின் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்தப் படம் கொரோனா கஷ்டங்களுக்கு மத்தியில் தயாராகி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கிய முழு சம்பளத்தையும் சௌந்தரராஜா திருப்பிக் கொடுத்து விட்டார்.

அவரது செயலை படக்குழுவினர் பாராட்டி உள்ளனர்.

மேலும், சௌந்தரராஜா தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இடிமுழக்கம்’, `சாயாவனம்’ உள்பட 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundararaja who returned the salary to the producer of thudikkum karangal

அட்லி பிறந்தநாளில் ‘ஜவான்’ பட ‘பட்டாசா..’ பாடல் வெளியீடு

அட்லி பிறந்தநாளில் ‘ஜவான்’ பட ‘பட்டாசா..’ பாடல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் – ‘ஜவான்’ படத்திலும் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒரு பாடலில் ஜொலித்திருக்கிறது.

‘ஜவான்’ படத்தில் இடம்பெற்ற ‘பட்டாசா..’ எனத் தொடங்கும் பாடலின் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் இயக்குநரான அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது..!

இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன்.

இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் வரலாற்றை தொடர்கிறார்கள். ‘ஓம் சாந்தி ஓம்’ மற்றும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ போன்ற படங்களில் இவர்களின் மாயாஜாலம் ரசிகர்களால் மறக்க இயலாது.

‘லுங்கி டான்ஸ்..’, ‘டார்ட்-ஈ- டிஸ்கோ..’ போன்ற தரவரிசையில் முன்னிலையில் பெற்ற பாடல்கள் – இவர்களின் மாயாஜால கெமிஸ்ட்ரியின் வரலாற்றுக்கு சான்றாகும். இது ரசிகர்களை தொடர்ந்து மயக்கி வருகிறது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கான் – தீபிகா படுகோன் இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்.

இவர்களின் தீவிர ஆதரவாளர்களை மகிழ்விக்க, படத்தின் தயாரிப்பாளர்கள் ‘பட்டாசா..’ எனத் தொடங்கும்.. இந்த ஜோடி திரையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கும் பாடலின் காணொளியை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த டைனமிக் இரட்டையர்களின் மாயாஜாலத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்வையிடுவார்கள்.

‘ஜவான்’ திரைப்படம் இந்திய திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்திருக்கிறது.

விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுகளை பெற்றிருக்கிறது. படத்தின் கதை, புத்திசாலித்தனமான திரைக்கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷாருக்கான் -தீபிகா படுகோன் எனும் ஜோடியின் நிரந்தரமான மாயாஜால கெமிஸ்ட்ரி ஆகியவை… அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கி இருக்கிறது. இந்த வெற்றி தேரோட்டம் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து பயணிக்கிறது.

‘ஜவான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டாசா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் மாயாஜாலம் மிக்க நடனமும், நடிப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் கூடிய ஆதங்கத்தை அதிகரித்திருக்கிறது.

இந்த ஆண்டின் பொழுதுபோக்கு பாடல்கள் ஒன்றாக அமைந்த இந்தப் பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது.

அதன் காட்சி அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர்கள் விவேக் மற்றும் அறிவு எழுதி இருக்க, பின்னணி பாடகர் நகாஷ் அஜீஸ், அறிவு மற்றும் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

இதற்கு அனிருத் இசையமைக்க, ஃபாரா கான் நடனம் அமைத்துள்ளார்.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார்.

கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ஜவான்

Jawans colourful love song of the year Pattasa Song Video Out

இறைவனுக்கு A சர்டிபிகேட் கொடுத்தது சென்சார் போர்டு

இறைவனுக்கு A சர்டிபிகேட் கொடுத்தது சென்சார் போர்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர்-28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில், ‘இறைவன்’ படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும், ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’ஆதிபகவன்’ படத்துக்கும் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

jayam ravi’s iraivan movie gets A certificate by Censor Board

More Articles
Follows