தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இதில் இப்பட இசையமைப்பாளர் சிம்பு மற்றும் சிறப்பு விருந்தினர் தனுஷ் கலந்துக் கொண்டார்.
அப்போது தனுஷ் பேசியதாவது…
நான் நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவுக்கு வந்தேன். அது ஒரு விபத்து. ஆனால் சினிமாவில் பிறந்து அதில் வளர்ந்தவர் சிம்பு.
அவர் சினிமாவில் ஊறிப்போனவர். இவர் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் அவர் நாயகனாக நடித்தபோது நானும் நடிக்க வந்தேன். இப்போது இருவரும் 15 வருடங்களை கடந்துவிட்டோம் என்றார்.
அதன்பின்னர் சிம்பு பேசும்போது…
நான் நிறைய படங்களை கொடுக்க முடியவில்லை. ஆனால் தனுஷ் இன்று தன்னை நிலை நிறுத்தி ஹாலிவுட் வரை நடிக்க சென்றுவிட்டார்.
எல்லாம் துறைகளிலும் சாதித்து வருகிறார். நான் அன்பானவன் என்றால் அவர் தன்னடக்கமானவன்.
நான் கொடுக்க முடியாத படங்களை அவர் வரிசையாக கொடுத்து வருகிறார். எனக்கு அது மகிழ்ச்சிதான்.” என்று பாராட்டினார் சிம்பு.