விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் நாயகனாக சினிமாவில் களமிறங்கினார்

விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் நாயகனாக சினிமாவில் களமிறங்கினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தத் துறையாக இருந்தாலும் சாதனை செய்தவரின் / செய்யாதவர் ஒருவரின் வாரிசுகள் அந்த துறைக்கு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. அரசியலில் பல வாரிசுகளை பார்த்து வருகிறோம்.

சினிமாவிலும் சிவாஜி அவரின் மகன் பிரபு அவரின் மகன் விக்ரம் என தொடர்ந்து வருகின்றனர். அதுபோல சிவக்குமார் அவரது மகன்கள் சூர்யா கார்த்தி, ரஜினி அவரது மகள்கள் ஐஸ்வர்யா சௌந்தர்யா, கமல் அவரது மகள்கள் ஸ்ருதி அக்ஷரா, ராதா அவரது மகள் கார்த்திகா, சத்யராஜ் அவரது மகன் சிபி, பாரதிராஜா அவரது மகன் மனோஜ், டி ராஜேந்தர் அவரது மகன் சிம்பு, பாக்யராஜ் அவரது மகன் சாந்தனு, விக்ரம் மகன் துருவ், கார்த்தி மகன் கௌதம் என பல நட்சத்திரங்களை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் சூர்யா விஜய்சேதுபதி.

இவர் ஏற்கனவே தன் தந்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து ‘சிந்துபாத்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்துக் கொண்டு சூர்யாவை வாழ்த்தினர்.

பீனிக்ஸ்

Vijaysethupathi son Surya debut in kollywood

இயக்குனர்கள் ரஞ்சித் – மோகன் பாணியில்லாமல் ‘நவயுக கண்ணகி’-யாக மாறிய கிரண்

இயக்குனர்கள் ரஞ்சித் – மோகன் பாணியில்லாமல் ‘நவயுக கண்ணகி’-யாக மாறிய கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய பார்வையில் ஆணவக் கொலை பற்றி பேசவரும் ‘நவயுக கண்ணகி’.

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் மேலும் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இதுவே முதல் திரைப்படம்.

இக்கதை பல உண்மை சம்பவங்களை தழுவி நகர்கிறது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சாதியை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் ஒற்றை கருத்துக்களுடனும், ஒரு தரப்பினை தற்பெருமை சொல்லியும் அல்லது அதற்கு மாறாக கருத்துகளையும் தெரிவித்த வண்ணமே இருக்கிறது.

ஆனால் இக்கதை சற்று வேறுபட்டு சாதியை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் அதன் கொடுமைகளை கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள், தெரியாதவர்கள், புரியாதவர்கள் என்று குழம்பி நிற்கும் சாமானிய மக்களின் கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.

இப்படத்தை பார்த்து முடிக்கும்போது பார்வையாளருக்கு அவர்களின் சாதிய நிலைப்பாட்டை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கின்றது.

கோமதி துரைராஜ் தயாரிப்பில் ‘ஷார்ட்பிளிக்ஸ்’ வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’.

இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.

படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார். கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித்துள்ளனர்.

டிசம்பரில் ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ‘நவயுக கண்ணகி’ வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த பல தகவல்களை இயக்குநர் கிரண் துரைராஜ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அன்று,
பாண்டிய மன்னனின் அர்த்தமற்ற தீர்ப்பில் தன் கோவலனை இழந்த கண்ணகி மதுரையை பழிதீர்க்க எரித்தாள் .
இன்று,
அர்த்தமற்ற ஆணவ படுகொலையில் தனது காதலனை இழக்கிறார், சுவாதி.

அவளை கட்டாய படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலனை இழந்த சுவாதி திருமணத்திற்கு பின் பழிதீர்க்க நவயுக கண்ணகியாய் எடுக்கும் தொடக்கமே கதையின் கரு !! இத்திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் டிசம்பரில் ஷார்ட்ஃபிளிக்ஸ் ( ShortFlix) ஓடிடி-யில் வெளியாகவுள்ளது

வேலூரை பூர்வீகமாக கொண்ட தமிழன் நான். இப்பொழுது பெங்களூரில் இருக்கிறேன்.
சினிமாவிற்குள் நுழைய நல்ல தொடர்புகள் கிடைக்காத காரணத்தால் தான் குறும்பட பாதையை தேர்ந்தெடுத்தேன். ஜிகர்தண்டா முதல் பாகம் வெளியானபோது தான் சினிமா மீதான ஈர்ப்பு அதிகமானது.

2015லேயே பெங்களூரு பள்ளியில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்கிற குறும்படம் எடுத்து அப்போதே யூ ட்யூபில் வெளியிட்டேன்.

அதன்பின் மாநகரம், சூப்பர் டீலக்ஸ் பாணியில் ஒரு ஹைபர்லிங்க் படம் ஒன்றை இயக்கினேன். அதற்காக 35 நிமிடம் பைலட் பிலிம் ஒன்றையும் இயக்கினேன், அதைத்தான் திரைப்படமாக இயக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் பட்ஜெட் காரணமாக அது செட் ஆகவில்லை.

அது ஒரு காரணம் என்றாலும் நான் படமெடுக்க இங்கே வந்த பின்பு சந்தித்த மனிதர்கள் பெரும்பாலானோர் நம்மிடம் பேசிப்பேசியே நம் ஜாதியை பற்றி தெரிந்துகொண்டு அதன்பிறகு நம்மைப் பற்றி அவர்களாகவே ஒரு கணிப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அதனால்தான் இந்த களத்தில் உள்ள ஒரு கதையை படமாக்க வேண்டும் என இந்த படத்தை துவங்கினேன். கதை பெங்களூருக்கு அருகிலேயே நடந்த, என்னை ரொம்பவே பாதித்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இயக்குநர்கள் பா,ரஞ்சித், மோகன்.ஜி ஆகியோர் ஜாதியை பற்றி தங்களது கோணத்தில் வெவ்வேறு பாணியில் படம் எடுத்து வருகிறார்கள்.

நானும் இந்தப்படத்தை துவங்கியபோது ஒரு தரப்பினரின் சார்பாக தான் கதையை கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.

ஆனால் என்னுடைய சொந்த ஊருக்கு சென்றபோது நான் பார்த்து அனுபவத்தில் உணர்ந்த பல விஷயங்கள் எனது கருத்தை மாற்றிக் கொள்ள வைத்தன. அதனால் இதில் இருதரப்பினர் பற்றிய நியாயமான மற்றும் நியாயமற்ற விஷயங்களையும் சமமாக பேசியிருக்கிறேன்.

இந்த படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஜாதியை பற்றிய உங்களது கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பது ஒரு பார்வையாளராக உங்களுக்கே தெரியவரும்.

பொதுவாக இதுபோன்ற கதைகளில் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆணின் தரப்பிலிருந்து தான் கதை சொல்லப்படும். ஆனால் நான் மாப்பிள்ளையின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை காட்டியுள்ளேன்.

வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகியவை கதையின் களங்களாக இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று ஊர்களும் மூன்று விதமான மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கின்றன.

நவயுக கண்ணகி

என்னுடைய சொந்த ஊரான வேலூரில் தான் படப்பிடிப்பை நடத்தினோம்.. நானே இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் படத்தொகுப்பையும் செய்துள்ளேன்,.

இங்கே நுழைந்த புதிதில் தமிழில் பேசினால் கூட என்னை கன்னடக்காரனாகவே பார்த்தார்கள். அதனால்தான் என்னுடன் குறும்படத்தில் இருந்தே இணைந்து பயணிப்பவர்களை இதில் இணைத்து கொண்டேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருமே பெங்களூரைச் சேர்ந்த தமிழர்கள் தான்.

அதேசமயம் சினிமாவுக்கு புதியவர்கள் என்றாலும் அனைவரும் மேடை நாடக கலைஞர்களும் கூட.

படப்பிடிப்புக்கு முன்னதாக படத்தின் நட்சத்திரங்களை வைத்து ஒரு மாதம் ஒத்திகை நடத்தினோம்.
இந்த படத்தில் சில துணிச்சலான காட்சிகள் இருக்கின்றன ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் இதில் நடித்த நடிகை அதன்பிறகு வரவில்லை.

அதன் பின்னர் தேர்வானவர் தான் பவித்ரா தென்பாண்டியன். இவர் நாடக உலகை பின்னணியாக கொண்டவர்.
இவரது கேரக்டர் ரொம்ப ‘போல்டாக இருக்கும்.

தான் காதலித்தவனை, ஆணவ கொலை என்ற பெயரில் கொலை செய்கிறார்கள்.
அதன் பின் கட்டாய படுத்தி அவளுக்கு வேறு கல்யாணமும் செய்து வைக்கிறார்கள். தன் கண்முன் தனது காதலனை கொலை செய்தவர்களை பழிதீர்க்க நினைக்கிறாள்.

அதை முதலிரவு முதலே செயல் படுத்துகிறாள். அவள் எடுத்த முடிவை, செயலை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?!
இதை துணிச்சாலோடு செய்திருக்கிறார் நாயகி பவித்ரா தென்பாண்டியன்.
இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில்.. பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண் எடுத்த உண்மையான முடிவுதான் இப்படம்.

என்ன முடிவு??!

டிசம்பர் மாதம் ‘SHORTFLIX’ OTT தளத்தில் பாருங்கள்.

விமல்குமார், டென்சில் என இன்னும் சிலரும் இதே போல நாடக அனுபவத்துடன் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

ஒன்னே முக்கால் மணி நேரம் ஓடும் படமாக இது உருவாகியுள்ளது. தமிழில் மட்டுமே இந்த படத்தை உருவாக்கி உள்ளோம்.

படப்பிடிப்பு சமயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. டிசம்பர் 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடுவதற்காக பல ஓடிடி நிறுவனங்களை அணுகியபோது புதியவர்கள் என்பதால் பலரும் மறுத்தனர். ஆனால் ஷார்ட்பிளிக்ஸ் நிறுவனம் தான், இதை ஏற்றுக்கொண்டதுடன் படத்திற்கு கூடுதல் மதிப்பு ஏற்படும் விதமாக பிரபல பின்னணி பாடகிகள் சின்மயி, சைந்தவி உள்ளிட்டோரை பாட வைத்து, படத்திற்காக ஒரு தொகையையும் தங்கள் பங்கிற்கு செலவழித்து எங்களுக்கு உற்சாகம் அளித்தனர். இளைஞர்களின் ஆதரவை நம்பித்தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம்

அடுத்ததாக சீரியல் கொலை, அதற்கடுத்து கால்பந்து அரசியல் பற்றி படங்கள் இயக்க உள்ளேன். பெங்களூருவில் இருப்பதைப் போல இந்தியாவிலேயே வேறு எங்கும் கால்பந்து வீரர்கள் இல்லை. ஆனால் அதில் இடம்பெற்று பெருமை சேர்ப்பவர்கள் தமிழர்கள். அதில் நிறைய அரசியல் இருக்கிறது. அதைப்பற்றி பேச இருக்கிறேன்” என்கிறார்.

*நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*

கதை- படத்தொகுப்பு – இயக்கம் ; கிரண் துரைராஜ்

*நடிகர்கள்*

பவித்ரா தென்பாண்டியன்
விமல் குமார்
E டென்சல் ஜார்ஜ்
தென்பாண்டியன் K
ஜெயபிரகாஷ்

ஒளிப்பதிவாளர் ; தர்மதீரன் P

இசை அமைப்பாளர் (பின்னணி) ; கெவின் கிளிஃபோர்ட்

இசையமைப்பாளர் (பாடல்கள்) ; ஆல்வின் புருனோ

கலை இயக்குநர் ; மோகன் குமார் தங்கராஜ்

*பாடகர்கள்*

சைந்தவி ஜி.வி.பிரகாஷ்
சின்மயி ஸ்ரீபடா
அனிருத்
ரேணுகா அஜய்

பாடலாசிரியர் ; டேனியல் சில்வானஸ்

ஸ்டண்ட் ; கிரண் S

மக்கள் தொடர்பு ; ஜான்சன்

விளம்பரம் ; மூவி பாண்ட்

தயாரிப்பாளர் ; கோமதி துரைராஜ்

.இத்திரைப்படம் மிகவிரைவில் Shortfilx எனப்படும் OTT தளத்தில்..

நவயுக கண்ணகி

Navayuga Kannagi on shortflix OTT flatform

ராஜூமுருகன் உதவியாளர் இயக்கத்தில் சாதி மத அரசியலை பேசும் ‘பராரி’

ராஜூமுருகன் உதவியாளர் இயக்கத்தில் சாதி மத அரசியலை பேசும் ‘பராரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி’.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட படத்தின் முதல் லுக் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர்.

திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் ‘பராரி’ பேசுகிறது.

சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சமகால அவலங்களை இந்தப் படம் பேசுகிறது. சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும் இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சுமார் 6 மாத காலம் நடிப்புப் பயிற்சி பெற்ற புதுமுகங்கள் பலரும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.

பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பரியேரும் பெருமாள் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்டிஎக்ஸ் (எடிட்டர்), ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, NGK, ‘தங்கலான்’ போன்ற பல திரைப்படங்களின் அற்புதமான பாடல் வரிகளை இசை ஆர்வலர்களுக்குப் பரிசளித்த உமா தேவி இப்படத்திற்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

ஏ.ஆர். சுகுமாரன் பிஎஃப்ஏ (கலை), எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி (ஒலி வடிவமைப்பு), சுரேன்.ஜி (ஒலி கலவை), ஃபயர் கார்த்தி (ஸ்டண்ட்), அபிநயா கார்த்திக் (நடன அமைப்பு),
ஜி.முத்துக்கனி (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

Parari deals with Religion Caste politics

‘குய்கோ’ படத்தலைப்பு மட்டுமில்ல படக்குழுவும் வித்தியாசம்.. – ஸ்ரீபிரியங்கா

‘குய்கோ’ படத்தலைப்பு மட்டுமில்ல படக்குழுவும் வித்தியாசம்.. – ஸ்ரீபிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீபிரியங்கா பேசியதாவது…

“எங்க படத்தோட தலைப்பு மட்டும் வித்தியாசமானது இல்லை. எங்க டீமே வித்தியாசமானதுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கு.

ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காண்பிச்சிருக்கார். படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகுது. அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க.” என்றார்.

இசையமைப்பாளர் அந்தோணி தாசன் பேசியதாவது..

“என்னைப் பெத்தெடுத்த எங்கம்மாவுக்கு நன்றி. கோ.மு.-ல ஆரம்பிச்சு கோ.பி.-ல முடியுது. கொரோனாக்கு முன்னாடி தொடங்கி, கொரோனாக்குப் பின்னாடி வெளியாகப் போகுது. படம் தொடங்கி 5 வருஷமாகுது. கலச்சாரத் தூதுவனா, மக்களை சந்தோஷப்படுத்துற பணியை மண்ணுக்குப் போறவரை செய்வேன். நான் கரகாட்டக் கலைஞன் என்பதால் நடனமும் ஆடுவேன். படத்துல, பாடல்களுக்கு நானே ஆடுறேன் எனக் கேட்டுப் பார்த்தேன். இயக்குநர் ஒத்துக்கலை. அவரது அடுத்த படத்துல எனக்கு முக்கியமானதொரு கதாபாத்திரம் தருவாருன்னு நம்புறேன்.” என்றார்.

Kuiko not only title movie team too different says Sri Priyanka

சினிமாவுல முட்டுங்க.. மோதுங்க..; ரிப்போர்ட்டர்களை எச்சரித்த இளவரசு

சினிமாவுல முட்டுங்க.. மோதுங்க..; ரிப்போர்ட்டர்களை எச்சரித்த இளவரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் இளவரசு பேசியதாவது…

“இளம் பத்திரிகையாளர்களுக்கு சினிமா கனவு இருந்தா சீக்கிரம் சினிமாக்கு வந்துடுங்க. காத்திருக்காதீங்க. இப்பவே வந்து சினிமாவுல முட்டுங்க, மோதுங்க. பத்திரிகை துறை உங்க நேரத்தையும் உழைப்பையும் உறிந்துவிடும்.

நல்லவேளையா அருள்செழியன் இப்பயாவது வந்துட்டார். படம் கிடைச்சிடுச்சு, செல்லப்பிள்ளை யோகிபாபு, ஃபெர்பார்ம் பண்ற ஹீரோ விதார்த், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் உள்ள வந்துட்டாங்க.

ஆனா முதல் நாள் ஷூட்டிங்கில், அறுபது சீனில் எதை முதல் ஷாட்டாக வைப்பீங்க? அகிரா குரோசாவோவாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை வரும். அதைச் சமாளிக்க, அசோசியேட் இயக்குநர், கேமராமேன் என இருவரின் தயவு அவசியம் தேவை. அப்படியொரு டீம் அருள் செழிலனுக்கு அமைஞ்சது. அதைத் தாண்டி, இந்தப் படத்துல என்ன சிறப்பு? மலையாளப்படத்துல தான் நூல் பிடித்தாற்போல் சுவார்சியம் குறையாமல் டக்கு டக்குன்னு திரைக்கதை அமைச்சுட்டே போவாங்க.

சினிமாவுல, கதையை விட திரைக்கதை தான் ரொம்ப முக்கியம். அது சில ஸ்க்ரிப்ட்க்கு அமையும். இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. அவர் கதையில், ஃப்ரீசர் பெட்டிக்கு ஒரு எமோஷன் வச்சு அருமையான திரைக்கதையாக அமைச்சிருக்கார்.

பெண்கள் பொதுவாகத் தன்னை அழகாகக் காண்பிச்சுக்க நினைப்பாங்க. இந்தப் படத்துல, கதாநாயகி ஸ்ரீபிரியங்கா எண்ணெய் ஒழுகும் முகத்தோடு நின்னுட்டிருந்தாங்க. நான் போய், ‘டச் அப் பண்ணிக்கோம்மா’ எனச் சொன்னேன். ‘இல்ல சார், கதைக்கு இப்படித்தான் இருக்கணும்’ எனச் சொன்னாங்க.

கன்டினியுட்டி மிஸ் ஆகிடக்கூடாதுன்னு சிச்சுவேஷனுக்கு ஏற்ற முகத்துடன் இருக்கணும் என ஒரு கதாநாயகி படத்தோடு இன்வால்வ் ஆகி நடிச்சது ஆச்சரியமாக இருந்தது.

விதார்த்திற்கு அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை. விமல், விதார்த், விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோவின் நண்வர்களாக நடிச்சு இப்போ ஹீரோவாகி இருக்காங்க. விதார்த் சினிமாவுல சாதிச்சது தெரியும்.

ஆனா அவர் பாரதம் நாடகத்துல, துச்சாதனாக துயில் உறியுற காட்சி நடிச்சுட்டு, ஸ்க்ரீனுக்குப் பின்னாடி போறப்ப அவர் மேல தண்ணி ஊத்தினா, பொஸ்ஸ்ன்னு ஆவி போகும். பொசுக்குன்னு தண்ணி ஊத்தினா ஆவி பறக்கும். ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாகவே மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமே இல்லை.

அவர் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகணும். இது ஓட வேண்டிய படம். படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படுத்தலாம்.” என்றார்.

ilavarasu advice to all cinema reporters

வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை சொல்லியிருக்கோம் – முத்துக்குமார்

வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை சொல்லியிருக்கோம் – முத்துக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருள்செழியன் இயக்கத்தில் விதார்த் – ஸ்ரீபிரியங்கா, யோகி பாபு – துர்கா, இளவரசு, முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குய்கோ’.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் முத்துக்குமார் பேசியதாவது…

” சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு நிறைய கதை சொன்னாங்க. அருள்செழியன் சொன்ன கதை ரொம்பச் சுவாரசியமாக இருந்தது. எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய படம். எனக்கு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரக்டர். வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை இதுல சொல்லியிருக்கார். இந்தப் படம் எந்தச் சூழ்நிலையிலும் பார்வையாளர்களை ஏமாத்தாது. நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கும்.” என்றார்.

கூடுதல் தகவல்…

பொதுவாக பல படங்களில் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் வலியை காட்டி இருப்பார்கள்.. ஆனால் வட்டிக்கு தான் பணம் வாங்குகிறோம் என்பது தெரிந்தும் தன்னுடைய தேவை முடிந்த பின் அவர்கள் மீது குறை கூறுவதும் கடனாளிகளின் வேலை.. நன்றி கெட்டவர்கள்..

‘குய்கோ’ படத்தில் கடன் கொடுத்தவர்கள் வலியை சொல்லி இருக்கிறார்கள் என்பதால் நிச்சயம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது இவரின் பேச்சு.. காத்திருப்போம்..

Actor Muthukumar acted as financier in Kuiko

More Articles
Follows