OFFICIAL : ‘சந்திரமுகி 2’ படத்துடன் மோதும் ‘மார்க் ஆண்டனி’.; ஜெயிப்பது யார்.?

OFFICIAL : ‘சந்திரமுகி 2’ படத்துடன் மோதும் ‘மார்க் ஆண்டனி’.; ஜெயிப்பது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிட்டு படங்களை இயக்கி பீக்கிற்கு சென்றவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

மேலும் இவர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான பிரபுதேவாவின் ‘பகிரா’ என்ற பிட்டு படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் ஆதிக் இயக்கத்தில் தற்போது வெளியீட்டுக்கு உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

இந்தப் படத்தில் விஷால் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர். டைம் ட்ராவலை மையப்படுத்தியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாளில் தான் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படமும் வெளியாக உள்ளது.

லைக்கா தயாரித்துள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chandramukhi 2 clash with Mark Antony

சீன் போடும் ‘பிக் பாஸ்’ ஷிவானி..; ‘பம்பர்’ அடிப்பதற்குள்ளே இந்த பந்தாவா.?

சீன் போடும் ‘பிக் பாஸ்’ ஷிவானி..; ‘பம்பர்’ அடிப்பதற்குள்ளே இந்த பந்தாவா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

பகல் நிலவு, இரட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல டிவி் தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

இதன் பின்னர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றதன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார்.

பல வருடங்களாக சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்த இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் இவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

அதன் பின்னர் ‘வீட்ல விசேஷம்’, ‘டிஎஸ்பி’, ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஆகிய படங்களிலும் ஷிவானி நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ஷிவானி கதையின் நாயகியாக நடித்துள்ள ‘பம்பர்’ என்ற படம் வருகிற ஜூலை 7 தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு ஷிவானி வந்திருந்தார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.

நேற்று ஜூலை 4 தேதி பம்பர் படத்தின் பிரஸ் ஷோ திரையிடப்பட்டது. இதற்கு படத்தின் நாயகன் வெற்றி இயக்குனர் செல்வகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் எடிட்டர் பாடலாசிரியர் என பலரும் வந்திருந்தனர்.

ஆனால் நாயகி ஷிவானி வரவில்லை. தற்போது தான் ஷிவானி நடித்துள்ள திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால் அவர் வரவில்லை என்பதற்கான காரணங்களை நாம் கேட்டறிந்த போது பத்திரிகையாளர் காட்சிக்கு கூட வருவதற்கு கேரவன் கேட்டுள்ளார் ஷிவானி. மேலும் அவர் எங்கு சென்றாலும் கேரவன் ஏற்பாடு செய்தால் மட்டுமே வருவதாக கண்டிசன் போடுகிறாராம்.

ஒரு முன்னணி நடிகையாக வருவதற்கு முன்பே இப்படி சீன் போடுகிறாரே ஷிவானி என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Bigg Boss fame Shivani Narayanan controversy in Bumper promotion

RISE TO RULE கமல் வினோத் இணையும் அரசியல் படம்.? சொல்லவே இல்ல.?!

RISE TO RULE கமல் வினோத் இணையும் அரசியல் படம்.? சொல்லவே இல்ல.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்த படப்பிடிப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் தற்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக கமல் நடிக்க உள்ளார்.

இதற்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் #KH234 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கமல். இது குறித்த அறிவிப்பும் வெளியானது.

ஆனால் இதனிடையில் நேற்று ஜூலை 4 தேதி கமலின் 233வது படத்தின் அறிவிப்பும் வெளியானது.

இந்த படத்தை வினோத் இயக்குகிறார். இதன் சப்டைட்டில் ‘ரைஸ் டு ரூல்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது கமலின் அரசியல் படமாக இருக்கும் எனவும் இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

கமல் - வினோத்

Kamal 233 movie will be directed by H Vinoth

அருமையான பயணம்.; அற்புதமானவர்களுடன் பணி.; ரஞ்சித்தின் ‘தங்கலான்’ குறித்து விக்ரம்

அருமையான பயணம்.; அற்புதமானவர்களுடன் பணி.; ரஞ்சித்தின் ‘தங்கலான்’ குறித்து விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ நடித்து வருகிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது.

சிறிது காலம் ஓய்வுக்கு தற்போது மீண்டும் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரம் இணைந்துள்ளார்.

தங்கலான்

இந்நிலையில், ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பது, “படப்பிடிப்பு நிறைவடைந்தது! என்ன ஒரு பயணம்!! மிகவும் அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றேன். முதற்கட்ட படப்பிடிப்பிற்கும், இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கும் இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித். ஒவ்வொரு நாளும்.” என பதிவிட்டுள்ளார்.

தங்கலான்

vikram’s Thangalaan movie shooting wrapped

சமத்துவத்தை வலியுறுத்திய ‘மாமன்னன்’ படக்குழுவை பாராட்டிய ‘மன்னன்’ ரஜினி

சமத்துவத்தை வலியுறுத்திய ‘மாமன்னன்’ படக்குழுவை பாராட்டிய ‘மன்னன்’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ரஜினி கூறியது,

“‘மாமன்னன்’ திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Rajinikanth praises the crew of mamannan

JUST IN வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் ஜெயம்ரவி – கீர்த்தி இணைந்த ‘ஜீனி’ பூஜை

JUST IN வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் ஜெயம்ரவி – கீர்த்தி இணைந்த ‘ஜீனி’ பூஜை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்.

இந்த நிறுவன மூலம் போகன், கோமாளி, எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் ஐசரி கணேஷ்.

இவர் ஒரு சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

ஜீனி

இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25 படம் படத்தின் பூஜை இன்று மதுரவாயிலில் உள்ள பி ஜி எஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி நாயகிகள் கீர்த்தி ஷெட்டி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் இந்த பட பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் அர்ஜுனன் ஜூனியர். இவர் மிஷ்கினிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். முக்கிய வேடத்தில் தேவயாணி நடிக்கிறார்.

ஜீனி

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டிலும் இன்று பட பூஜையில் வெளியிடப்பட்டது.

‘ஜீனி’ என்ற தலைப்பிடப்பட்ட இந்த படத்தின் நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை 5 மொழிகளில் பான் இத்தியா படமாக வெளியிட உள்ளனர். வேல்ஸ் மற்றும் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது படமாகும்.

ஜீனி

GENIE movie pooja starring Jayam Ravi Kriti shetty

More Articles
Follows