கல்லூரி அரசியலை பேசும் ‘ரெபல்’..; ஜிவி பிரகாஷ் – ஞானவேலுக்கு ஆதரவளித்த சிம்பு

கல்லூரி அரசியலை பேசும் ‘ரெபல்’..; ஜிவி பிரகாஷ் – ஞானவேலுக்கு ஆதரவளித்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ. வி. பிரகாஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’.

இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார்.

உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” 1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது.

ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்றார்.

G.V. Prakash starrer Rebel First Look Revealed by STR

யோகி பாபு மகளுக்காக விஷால் செய்த வியக்கத்தக்க காரியம்.!

யோகி பாபு மகளுக்காக விஷால் செய்த வியக்கத்தக்க காரியம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் பொதுவாக எந்த பரிசு பொருளையும் அவரை சந்திக்க வரும் எவரிடத்திலும் பெறுவதில்லை என்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.

அதற்காக செலவிடும் தொகையை ஏழை எளியோர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யும்படி அறிவுறுத்தி வருகிறார்.

அதேபோன்று அவரும் அவருடைய நண்பர்கள் பிறந்த நாள் மற்றும் எந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டாலும் அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பதை தவிர்த்து அவர்களின் பெயரில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்திற்கு உணவு அளித்து அந்த இல்லங்களில் உள்ளோரின் உள்ளம் மகிழ, வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம், அதேபோன்று ஒரு நிகழ்வு தான் தற்போதும் நடந்துள்ளது.

சமீபத்தில் நடிகர் யோகிபாபு அவர்களின் அன்பு மகள் பரணி கார்த்திகா பிறந்த நாள் விழா நடைபெற்றது அக் குழந்தையின் பெயரில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உணவளித்து அவர்களின் வாழ்த்து செய்தியுடன் யோகிபாபு குடும்பத்தாரை நேரில் சந்தித்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் குடும்பத்தார் பிறந்தநாள் திருமணநாள் விழாவுக்காக இதுபோன்ற காரியங்களை செய்வதை நாம் பார.த்து இருக்கிறோம்.

ஆனால் முதன்முறையாக தன் நண்பரின் மகளுக்காக நடிகர் விஷால் செய்துள்ள செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Vishal donated food for oldage home on Yogibabu daughter birthday

OFFICIAL சூர்யா – துல்கர் – நஸ்ரியா – ஜிவி.பிரகாஷ் உடன் இணையும் விஜய்

OFFICIAL சூர்யா – துல்கர் – நஸ்ரியா – ஜிவி.பிரகாஷ் உடன் இணையும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் பிசியான நடிகர்.. மறுபக்கம் தரமான படங்களின்தயாரிப்பாளர்.. என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருபவர் சூர்யா.

இவர் தனது நடிப்பில் உருவாக உள்ள 43வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.

ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவும் சுதா கங்காவும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் 100வது படமாக இது உருவாகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் ஆக்டர் விஜய் வர்மா நடிக்கிறார். சூர்யா தனது 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் இந்த படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பாதி தலைப்பு மட்டும் தான் வீடியோவில் பதிவாகியுள்ளது. எனவே முழு தலைப்புக்கும் நாம காத்திருக்க வேண்டிய நிலை தான்..

Suriya 43 starring Dulquer Nazriya and Vijay Varma

CALL BOY CULTURE : பொய் சொல்லி ஏமாத்தல.. இந்த படத்துக்கு வந்துடாதீங்க ப்ளீஸ்.!

CALL BOY CULTURE : பொய் சொல்லி ஏமாத்தல.. இந்த படத்துக்கு வந்துடாதீங்க ப்ளீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; இது வயது வந்தவர்களுக்கான படம்:’ரா .. .ரா .சரசுக்கு ராரா…’ படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படை!

பெரியவர்களையும் இளமையாக உணர வைக்கும் ‘ரா . .ரா .சரசுக்கு ராரா…’

லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ என்றொரு படம்
உருவாகி இருக்கிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்.

இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,சாரா, ஜெயவாணி, அக்ஷிதா,விஜய் பிரசாத், ஆகியோர் நடித்துள்ளனர்.

ரா .. .ரா .சரசுக்கு ராரா..

படத்தின் கதை?

யதேச்சையாக நடந்த ஒரு கொலையில் மூன்று பெண்கள் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அவர்கள் படும் சிரமங்களைச் சொல்கிறது கதை. பரபரப்பாகவும் காமெடியாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது பரவி வரும் கால்பாய் கலாச்சாரத்தால் ஏற்படும் சிக்கல்கள் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்து க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்.

படத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளையும் , சுதந்திரமான காட்சிகளையும் பார்த்த சென்னை மண்டல அதிகாரி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தர முடியாது என்று சொல்லிவிட்டார் அதனால் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு சென்று அறுவது கட்களோடு ஏ சர்டிபிகேட் வாங்கினோம்.

படம் பற்றித் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமியிடம் கேட்டபோது….

” இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால் தான் நான் தயாரிக்க முடிவெடுத்தேன். படத்தில் சமகாலத்தைச் சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன.

ரா .. .ரா .சரசுக்கு ராரா..

இக்காலத்தின் கலாச்சாரத்தையும் இளைஞர்களின் மன உணர்வுகளையும் சொல்லத்தான் வேண்டும்.அப்படிப்பட்ட கதையாகத்தான் இது உருவாகியுள்ளது.

இயக்குநர் கேட்டபடி நடிப்புக் கலைஞர்கள் ஆகட்டும் தொழில்நுட்ப வசதிகளாகட்டும் அனைத்தையும் நான் செய்து கொடுத்தேன்.அதன்படியே இந்தப் படம் உருவாகி உள்ளது.

இந்தப் படம் வயது வந்தவர்களுக்கான ஒரு படம் தான். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பார்க்க வேண்டிய படம். இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பார்க்கலாம்.

இப்போது வருகிற படங்கள் யூஏ சான்றிதழ் பெற்றுக் கொண்டு குடி, புகை,கொலை, குத்து வெட்டு, ரத்தம் , ஆபாசம் எல்லாம் கலந்து வெளி வருகின்றன. படத்தின் தரம் தெரியாமல் சிறுவர்களை அழைத்துப் போகின்ற கொடுமை நடக்கிறது.படத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் தர்ம சங்கடத்தில் நெளிகிற நிலைமையை நாம் பார்க்கிறோம்.

ஆனால் நாங்கள் “இது ஒரு ஏ படம்” தான் என்று சொல்லியே விளம்பரப்படுத்துகிறோம். சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம் .

ரா .. .ரா .சரசுக்கு ராரா..

இது அனைவருக்குமான படம் அல்ல.பொய் சொல்லி ஏமாற்றுவது மிகவும் தவறு. அதில் எங்களுக்கு விருப்பமில்லை.”என்கிறார் தயாரிப்பாளர்.

9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

▶️https://youtu.be/iriSte4UGMo?si=bCSfJhdaAqLCeLAH

Rara Sarasukku Rara movie adults only allowed

தன் பிறந்தநாளில் தனது 2வது திருமணத்தை முத்தமிட்டு உறுதி செய்த அமலா பால்

தன் பிறந்தநாளில் தனது 2வது திருமணத்தை முத்தமிட்டு உறுதி செய்த அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய் இயக்கிய ‘தலைவா’ மற்றும் ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக அமலா பால் நடித்திருந்தார்.

அப்போதே விஜய் – அமலாபால் இருவரும் நெருக்கமாகி காதலித்து திருமணம் 2016ல் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமாகி சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர்.

அமலா பால்

அமலா பாலுடன் நடிகர் தனுஷ் நெருக்கம் காட்டியதால் இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.

பின்னர் சில வருடங்களில் இயக்குனர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு தனது 2வது திருமணத்திற்கு அமலா பால் தயாராகி உள்ளார்.

அதன்படி அமலாபால் விரைவில் திருமணம் செய்துக் கொள்கிறார். இதை நடிகையின் காதலரான ஜெகத் தேசாய் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

அமலா பால்

அதில்.. அமலாவுக்கு ஜகத் ப்ரோபோஸ் செய்யும் வீடியோவை பகிர்ந்து அமலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜகதத்தின் ப்ரோபோஸ்லை ஏற்றுக் கொண்ட நடிகை அமலா, வீடியோவில் அவருக்கு முத்தம் கொடுத்தும் உள்ளார்.

ஜகத்தின் பதிவில் திருமண மணிகள் என்ற ஹேஷ் டேக்கு உள்ளது.

இன்று அக்டோபர் 26 ஆம் தேதி நடிகை அமலாபால் தன் பிறந்த நாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

அமலா பால்

Amala Paul confirmed her 2nd marriage on her Birthday

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்.; ஏன் தெரியுமா.?

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோதாஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் நடிகர் விஜய்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் பார்த்திபன் கேரக்டர் லுக்கையும் மற்றும் நடிகர் இயக்குனர் பார்த்திபனின் உண்மையான தோற்றத்தையும் இணைத்து டிசைன் செய்துள்ளனர்.

நடிகர் பார்த்திபன் லியோ பார்த்திபனாக என கேப்சன் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும் என பதிவிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.

Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!

பார்த்திபன்

Parthiban post about Parthibàn character in Leo

More Articles
Follows