தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் சிம்பு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் சூட்டிங்கின் போது சிம்பு பல பிரச்சினைகளை கொடுத்து வந்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சொன்ன நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார் சிம்பு. இவரை நம்பி தமன்னா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். அவருடன் மேக்அப் மேன் உள்ளிட்ட உதவியாளர் 5,6 பேர் வருவார்கள்.
ஒருமுறை 2 நாட்கள் காத்திருந்து சென்றுவிட்டார் சிம்பு.
பின்பு மீண்டும் தமன்னாவிடம் கெஞ்சி, மற்றொரு நாள் கால்ஷீட் வாங்கினேன். அப்போதும் சிம்பு வரவில்லை. எனவே தமன்னா காத்து கிடந்தார்.
இதனால் எனக்கு ரூ. 6 லட்சங்கள் வரை வீணானது.” என்று தெரிவித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.