விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லரில் பிரதமர் மோடி பேச்சு!

விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லரில் பிரதமர் மோடி பேச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra trailer‘சக்ரா ‘படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது.

விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் இன்று 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.ட்ரெய்லரில் வரும் வசனங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைப்பது மட்டுமல்ல பரபரப்பான படம் என்பதற்கான முன்னோட்டமாகவும் இருக்கின்றன.

இதோ அந்த ட்ரெய்லரில் வரும் வசனங்கள் :

வசனம் 1 : அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர்.
ஏழு வீட்ல ராபரி.

வசனம் 2: பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.

வசனம் 3: நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 இண்டிபெண்டன்ஸ் டே .டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியா கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு…

வசனம் 4 : நாயகன் : இது ஏதோ பற்றிக்குலர் ஏரியாவுல, இல்ல பற்றிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.

வசனம் 5 : கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு

வசனம் 6 : இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சதுதான் பிரச்சனை அசோக சக்ரா, மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக்கான், சும்மா விட்ருவானா அவன்?

வசனம் 7: DFH மேனேஜர்: நீங்க போலீசா?

வசனம் 8: நாயகன்: மிலிடரி …!

வசனம் 9 : நாயகி : இந்த சென்சிட்டிவான கேஸ் நான்தான் இன்வஸ்டிகேட் பண்றேன் சந்துரு, கூடிய சீக்கிரமா அந்த புறம்போக்குகளை பிடிப்பேன்

வசனம் 10: நாயகன் : ஒரு நாட்டையே அச்சுறுத்துற தீவிரவாதிகள் ஆக்டிவிட்டீஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்ஸி பண்ற ஆராய்ச்சிய விட, ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும், அவனோட ஆசைகளையும் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பண்ற ஆராய்ச்சிதான் அதிகம்னு சொல்ல வர்றீங்க..

வசனம் 11
: நாயகி: கேர்ஃபுல்லா இருங்க , சஸ்பெக்ட் எப்ப வேணா அட்டாக் பண்ணலாம்…..

வசனம்: 12 நாயகன் குரல்: நிச்சயமாக நாம் தேடிட்ருக்குற கிரிமினல் , நம்ம கண்ணுக்கே, தெரியமாட்டான்

வசனம் 13 :யாரோ HACK பண்ணிருக்காங்க…

வசனம் 14: நாயகன் : இப்பதான் சீண்டி விட்ருக்கேன் த கேம் பிகின்ஸ் …..

வசனம் 15: நாயகன் : நம் கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்ல, வயர்லஸ் நெட்ஒர்க்கும் கூட ஆபத்துதான்.

WELCOME TO DIGITAL INDIA…

என்று நாயகன் விஷால் சொன்ன பிறகு மோடியின் பேச்சு இடம் பெறுகிறது.அது படத்தில் இடம்பெறும் போது எந்த விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதைப் படம் பார்த்தால்தான் புரியும் என்கிறார்
இப்படத்தை இயக்கியுள்ள எம் .எஸ் .ஆனந்தன்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

போலீஸ் என்பது பொறுப்பு அதிகாரமில்லை; சாத்தான்குளம் சம்பவத்திற்கு வெண்பா சாட்டையடி

போலீஸ் என்பது பொறுப்பு அதிகாரமில்லை; சாத்தான்குளம் சம்பவத்திற்கு வெண்பா சாட்டையடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venba condemns TN Police for Jayaraj and Fenix murderதூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது மொபைல் போன் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனை (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் போலீஸ் தாக்கினர்.

சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர்.

காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹேஷ்டேக்கில் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ், விஷால், குஷ்பூ, இமான், ஜெயம் ரவி, ஹன்சிகா, அதுல்யா, கதிர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் என்பதை நேற்றைய (ஜீன் 26) செய்தியில் பார்த்தோம்.

இந்த நிலையில் இளம் நடிகை வெண்பாவும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

போலீஸ் என்பது பொறுப்பு.. அது அதிகாரமில்லை. ஒரு சிலரால் காவல்துறைக்கே களங்கம். ஒருபோதும் நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது.

ஒரு குடும்பத்தில் இருவர் மரணம். ஈடு செய்ய முடியாத இழப்பு. நிதியை விட நீதியே தேவை.. இப்படிக்கு வெண்பா என பதிவிட்டுள்ளார்.

கற்றது தமிழ், சிவகாசி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் வெண்பா.

காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் வெண்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Venba condemns TN Police for Jayaraj and Fenix murder

22 நிமிட பிட் படத்துக்கு ரூ 200.; ராம்கோபால் வர்மாவின் அட்ராசிட்டி

22 நிமிட பிட் படத்துக்கு ரூ 200.; ராம்கோபால் வர்மாவின் அட்ராசிட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Gopal Varmas Naked movie is just 22 min but he charge Rs 200கொரோனா ஊரடங்கு சமயத்திலும் தன் சர்ச்சைகளை தொடர்ந்து செய்து வருகிறார் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

ஏற்கெனவே ‘கிளைமாக்ஸ்’ என்ற ஆபாசப் படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட்டார். அதை பார்க்க 100 ரூபாய் கட்டணம் வசூலித்தார்.

கடந்த சில தினங்களாக நேக்டு என்ற படத்தை இயக்கியுள்ளதாக அறிவித்து ஆபாச படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் டிரைலர் படு மோசமாக சித்திரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று ஜீன் 27 இரவு 9 மணிக்கு ‘நேக்டு நங்கா நக்னம்’ என்ற ஆபாசப் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தார்.

இப்படத்திற்கு 200 ரூபாய் கட்டணம் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று சற்று முன்னர் தான் அது வெறும் 22 நிமிடப் படம் எனக் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Ram Gopal Varmas Naked movie is just 22 min but he charge Rs 200

https://twitter.com/RGVzoomin/status/1276809846818398209

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FRGVzoomin%2Fstatus%2F1276809846818398209&widget=Tweet

வனிதா 3வது திருமணம்; லிப் கிஸ் அடித்து பீட்டரை கரம் பிடித்தார்.! (Video)

வனிதா 3வது திருமணம்; லிப் கிஸ் அடித்து பீட்டரை கரம் பிடித்தார்.! (Video)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Vanitha Peter Paul marriage held today at Chennaiநட்சத்திர குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பங்களில் ஒன்று விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் குடும்பமும் ஒன்று.

இதில் விஜயகுமாரின் மகள் வனிதா சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

வனிதா இதுவரை 2 திருமணங்கள் செய்துள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்து சில ஆண்டுகளில் 2வது திருமணம் செய்தார்.

முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் பீட்டர் பால் என்பரை 3வது திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு இவரின் மகள்களும் ஆதரவு கொடுத்தனர்.

அதன்படி இவர்களது திருமணம் இன்று (ஜுன் 27) வனிதாவின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக நடந்தது.

பின்னர் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்றுக் கொண்டார் பீட்டர்.

Actress Vanitha Peter Paul marriage held today at Chennai

பால் தாக்கரே கெட் அப்பில் சாருஹாசன்.; சர்ச்சையை கிளப்பும் விஜய்ஸ்ரீ ஜி

பால் தாக்கரே கெட் அப்பில் சாருஹாசன்.; சர்ச்சையை கிளப்பும் விஜய்ஸ்ரீ ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Charuhassan in Bal Thackeray get up for Vijay Sri movieகமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் நடிப்பில் விஜய்ஸ்ரீ ஜி இயக்கிய படம் ‘தாதா 87’. இப்படத்தில் லோக்கல் தாதாவாக மிரட்டியிருந்தார் சாரூஹாசன்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர் ஒரு வாரம் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில், சாருஹாசன் நடித்த சில படங்கள் வெளியானது.

இப்படம் குறித்து இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி பேசுகையில்…

“தாதா 87 படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பினைத் தொடர்ந்து முழுநீள ”டான் சப்ஜெக்ட்” படத்தை இயக்கலாம் என்று முடிவு எடுத்தேன்.

இந்த படத்துலயும் சாருஹாசன் சார் உங்களை நிச்சயம் மிரட்டுவார்.

தற்போது 90 வயதிலேயும் உலக அளவில் நடிக்கிற நடிகர் இவர் மட்டும்தான்.

நடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் சார், வயதில் உலக நாயகன் சாருஹாசன் சார் தான்.

இதில் மைம்கோபி நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல நாயகனும் நடிக்கிறார். அது சஸ்பென்ஸ்.
இவர்களுடன் பழம்பெரும் நடிகர்களையும் நடிக்க வைக்கிறேன்.

கேரளா, கோவா போன்ற இடங்கள்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனா பிரச்சினைக்கு பிறகு சூட்டிங் தொடங்கும்” என்றார் இயக்குனர்.

ஒளிப்பதிவை கோபி கவனித்துக்கொள்ள, தாதா87 இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டினே இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

சாருஹாசனின் கெட்-அப் சிவசேனா பால் தாக்கரே அசலாக உள்ளது. இது படம் வெளியாகும் போது பெரும் சர்ச்சைகளை கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

Charuhassan in Bal Thackeray get up for Vijay Sri movie

‘கனா’ படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்லும் சிவகார்த்திகேயன்.?

‘கனா’ படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்லும் சிவகார்த்திகேயன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaaசிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’.

இந்தப் படத்தை பெண்கள் கிரிக்கெட்டை & விவசாயத்தை மையமாக வைத்து எடுத்திருந்தார்.

சத்யராஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர்.

தமிழில் சூப்பர் ஹிட்டான இதை தெலுங்கில் ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்தியிலும் ‘கனா’ படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘சோக்டு (Choked)’ வெப் சீரிஸ் படத்தை பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் ‘சோக்டு’ பார்த்தேன். வாழ்த்துகள் சையாமி கெர்.. உங்களை விரைவில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமொன்றில் பார்க்க ஆவலாக உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

அதற்கு சையாமி கெர், “நன்றி சிவகார்த்திகேயன் சார். உங்கள் கிரிக்கெட் படத்துக்கு ஆவலாக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் ட்வீட்களை பார்த்தால் ‘கனா’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக எதிர்பார்க்கலாம்.

 

More Articles
Follows