தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990-களில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகர் கே.கே.
‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை… பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
பிறப்பால் மலையாளியான கே.கே. பிறந்தது வளர்ந்தது எல்லாம் டெல்லியில்.
1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிறந்தார்.
இவர் ஹிப் ஹாப், ராக் பாடல்களை பாடியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
Singer KK (Krishnakumar Kunnath) biodata
ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் ஹாரீஸ் ஜெயராஜ் இசையிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
சிவகாசி, கில்லி, குருவி, தூள், சாமி, ஐயா, ரெட், மின்சார கனவு, ஜி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் இவரது பாடல்கள் உள்ளன.
காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே… 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன்… மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன்… உள்ளிட்ட பாடல்களை இவர்தான் பாடினார்.
தமிழ் உள்பட 10 மொழிகளில் பாடியுள்ளார்.
விரைவில் வெளிவரவுள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் 2 பாடல்கள் பாடியுள்ளார். இப்படத்திற்கு ஹாரீஸ் இசை.
இந்த நிலையில் கொல்கத்தாவில் ஒரு மேடை கச்சேரியில் இந்தி பெங்காலி பாடல்களை பாடிக் கொண்டிருந்தார் கே.கே.
இவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டது.
எனவே சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் கே.கே. உயிரிழந்தார்.
கே.கே. மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Singer KK dies at 53 while performing in Kolkata