தீபாவளிக்கு ‘சக்ரா’ விரு(ந்)து…; ஆன்லைன் ரிலீசுக்கு தாவிய விஷால்

தீபாவளிக்கு ‘சக்ரா’ விரு(ந்)து…; ஆன்லைன் ரிலீசுக்கு தாவிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra vishalவிஷால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா உள்ளிட்டோர் இணைந்துள்ள படம் ‘சக்ரா’.

எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தனது தந்தைக்கு இந்திய அரசு வழங்கிய அசோக சக்ரா விருது பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பே படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்த இந்த சக்ரா படக்குழு தற்போது இறுதிக்கட்ட சூட்டிங்கை முடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தாண்டு 2020 தீபாவளிக்கு ‘சக்ரா’ கண்டிப்பாக வெளியாகும் எனவும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Actor Vishal’s Chakra Releasing On OTT This Diwali

கமலின் சூப்பர் ஹிட் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்வுக்கு கொரோனா

கமலின் சூப்பர் ஹிட் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்வுக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan singeetam srinivasa raoஉலகநாயகனின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

தெலுங்கில் பல படங்களை இயக்கியுள்ள இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

மூத்த கலைஞரான இவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கீதம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில்….

“வருகிற 21-ம் தேதி எனது பிறந்தநாள். அது தொடர்பாக பேசுவதற்காக பலர் என்னை அழைக்கின்றனர். அவர்கள் அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் நன்றி.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். 22-ம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்தகங்கள் வாசிக்கிறேன். திரைக்கதை எழுதி வருகிறேன்.

முகக்கவசம், சமூக விலகலை ஆகியவற்றை பின்பற்றியும் எனக்கு கொரோனா தொற்று வந்துள்ளது.

கொரோனா தீவிரமான தொற்று. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

Director Singeetham Srinivasa Rao tests positive for Covid-19

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: வலிமை கிடைக்கட்டும் – ரஜினி; சேவை தொடரட்டும் – ஸ்டாலின்

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: வலிமை கிடைக்கட்டும் – ரஜினி; சேவை தொடரட்டும் – ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தன் 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு இந்தியர்களும் வெளிநாட்டினரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

திமுக தலைவர் முக. ஸ்டாலின் தன் ட்விட்டரில்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்யமும் கிடைக்க வாழ்த்துக்கள். நாட்டிற்கான உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தன் டிவிட்டரில்…

சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

மநீம தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…

மோடிக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கட்டும். சவாலான இந்த நேரத்தில் நாட்டை இழுத்து செல்ல கூடிய வலிமை கிடைக்கட்டும் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi Rajini

MK Stalin Modi

Politicians wishes to PM Modi on his birthday

BREAKING விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ பட இயக்குனர் திடீர் மரணம்

BREAKING விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ பட இயக்குனர் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், அனுஷ்கா இணைந்து நடித்த படம் ‘வேட்டைக்காரன்’

இந்த திரைப்படத்தை, இயக்குனர் பாபு சிவன் இயக்கயிருந்தார்.

2009ல் வெளியான இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க பிரபல நிறுவனமான ஏவிஎம் தயாரித்திருந்தது.

விஜய் த்ரிஷா நடித்த குருவி படத்திற்கும் பாபு சிவனே வசனம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் பாபு சிவன், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் மரணமடைந்தார்.

பாபு சிவனுக்கு வயது 54 என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Vettaikaaran movie director Babu Sivan passes away

IMG-20200916-WA0098

வெற்றிமாறன் படத்தை முடித்துவிட்டு ‘அடங்கமறு’ இயக்குனருடன் இணையும் சூர்யா

வெற்றிமாறன் படத்தை முடித்துவிட்டு ‘அடங்கமறு’ இயக்குனருடன் இணையும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adanga maru directorசூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இதனையடுத்து ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிப்பார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’ பட இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது.

இது உறுதியான தகவலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Adanga maru directors next film with suriya

சாதி சர்ச்சை பாடல் வரிகள்.; சூரரைப் போற்று படம் மீது வழக்கு.; ஓடிடி ரிலீசுக்கும் சிக்கல்..?

சாதி சர்ச்சை பாடல் வரிகள்.; சூரரைப் போற்று படம் மீது வழக்கு.; ஓடிடி ரிலீசுக்கும் சிக்கல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruசூர்யா தயாரித்து நடித்துள்ள படம சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார் சூர்யா.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இது சர்ச்சையாகி உள்ளது.

அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே கார்த்திக் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது விசாரித்தார்.

அப்போது மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினார் நீதிபதி.

அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

Madras High Court to sue Actor Suriya’s Soorarai Pottru

More Articles
Follows