புதுச்சேரியில் மோடி வந்தா 144.. தேர்தல் வந்தா 144.. ஓட்டு போடனுமா? வேண்டாமா?மக்கள் குழப்பம்..; கோர்ட் கேள்விக்கு கலெக்டர் விளக்கம்.!

புதுச்சேரியில் மோடி வந்தா 144.. தேர்தல் வந்தா 144.. ஓட்டு போடனுமா? வேண்டாமா?மக்கள் குழப்பம்..; கோர்ட் கேள்விக்கு கலெக்டர் விளக்கம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras High Court (2)புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த வழக்கு மீதான விசாரணை மெட்ராஸ் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதிகள்,…” 144 தடை பிறப்பித்தற்கான காரணம் குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் தரவேண்டும் என்றும் அவ்வாறு இல்லை என்றால் நீதிமன்றமே 144 தடையை நீக்கும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது தேர்தல் அதிகாரி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவரின் விளக்கத்தில் “புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது. குடும்பமாகவோ, நண்பர்களுடன் சேர்ந்து சென்று வாக்களிக்கவோ தடை இல்லை. சட்டவிரோதமாக கூட்டம் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் முன்னதாக, புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை உத்தரவு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை அமல்படுத்தப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மார்ச் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவு தேர்தல் ஆணைய அனுமதியுடன் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

அதனை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.சுமதி…

“எந்த காரணங்களையும் குறிப்பிடாமல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க் பிறப்பித்துள்ளார்.

மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக ட்விட்டர் பதிவுகளை, மாவட்ட ஆட்சியர் பலமுறை ரீட்வீட் செய்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவராக இருப்பதால் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.” என தெரிவித்தார்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாலா,… ”தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு.” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நாங்கள் அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோமா? என கேள்வி எழுப்பினர்.

விஷயத்தின் தன்மையை ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிப்பது வழக்கம் என்றார்.

ஆனால் புதுச்சேரி அரசின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் தேர்தல் ஆணையம் தானே தவிர, அரசியல் கட்சி கிடையாது என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.

144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்று உரிய தெளிவுபடுத்துதலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிடாவிட்டால், நீதிமன்றமே அதை ரத்து செய்யும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் 144 தடை உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்த போதும் 144 உத்தரவு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Madras High Court directs ECI to provide clarification over imposition of Section 144 in Pondicherry

அல்டிமேட் ஸ்டார் அஜித்தை முந்திய பவர் ஸ்டார்..; தெறிக்கவிட காத்திருக்கும் ரசிகர்கள்

அல்டிமேட் ஸ்டார் அஜித்தை முந்திய பவர் ஸ்டார்..; தெறிக்கவிட காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பிங்க்’.

இதன் தமிழ் ரீமேக்கில் தான் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ 2019 என்கிற பெயரிடப்பட்ட படத்தில் நடித்தார்.

டாப்ஸி வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.

தற்போது இந்த படத்தை தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் ‘வக்கீல் சாப்’ என ரீமேக் செய்துள்ளனர்.

தற்போது ஜன சேனா கட்சியையும் நிர்வகித்து வருகிறார் பவன் கல்யாண்.

இப்பட ட்ரைலர் ஆந்திர மாநிலத்தில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இதனை பார்க்க இவரது ரசிகர்கள் மற்றும் இவரது கட்சி தொண்டர்கள் முண்டியடித்து கொண்டு, தியேட்டர்களின் கண்ணாடியை உடைத்து கொண்டு பார்க்க உள்ளே சென்றனர்.

டிரைலருக்கு பவன் கல்யாண் ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்து வருகின்றனர்.

24 மணி நேரத்தில் 21 மில்லியன் ரசிகர்கள் பார்த்தனர். 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ட்ரைலரை லைக் செய்துள்ளனர்.

தற்போது ஒரு வாரத்திற்குள்ளாகவே 34 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஆனால் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலருக்கு 18 மில்லியன் பார்வைகள் தான் கிடைத்துள்ளன.

வருகிற ஏப்ரல் 9ம் தேதி ‘வக்கீல் சாப்’ படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

Power Star film trailer beats Thala Ajith’s NKP trailer records

VakeelSaab Trailer

இயக்குனராக ‘குரு பூஜை’ போட்டார் நடிகர் ஆர்கே. சுரேஷ்

இயக்குனராக ‘குரு பூஜை’ போட்டார் நடிகர் ஆர்கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK SURESHவிநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ஆர்.கே.சுரேஷ்.

தம்பிகோட்டை, சலீம், தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

தாரை தப்பட்டை, மருது, இப்படை வெல்லும், ஸ்கெட்ச், காளி, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தார்.

பில்லா பாண்டி போன்ற பட படங்களில் நாயகனாகவும் நடித்தார்.

சமீபத்தில் பாஜக-வில் இணைந்தார்.

இந்த நிலையில் ‘குரு பூஜை’ என்ற படத்தை விரைவில் இயக்க இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

இப்படம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தொண்டர் ஒருவரின் கதையாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

RK Suresh turns director

உங்க சினிமா ஸ்டார்ஸ் எந்த ஏரியாவுல ஓட்டு போடுவாங்க..? முழுத் தகவல்கள் இதோ

உங்க சினிமா ஸ்டார்ஸ் எந்த ஏரியாவுல ஓட்டு போடுவாங்க..? முழுத் தகவல்கள் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal Voteநாளை ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

சானிடைசர் போட்டு கை கழுவி மாஸ்க் போட்டு வலது கைக்கு மட்டும் க்ளவுஸ் போட்டு வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர்-நடிகைகள் வாக்களிக்கும் இடம் குறித்த தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

1. நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை

2. நடிகர் கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர் – ஆழ்வார்பேட்டை சென்னை

3. நடிகர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்- சாலிகிராமம், சென்னை

4. நடிகர் விஜய் – நீலாங்கரை, சென்னை

5. நடிகர் அஜித், திருவான்மியூர் சென்னை

6. நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா – ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர், சென்னை

7. நடிகர் உதயநிதி மற்றும் கிருத்திகா உதயநிதி – எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை, சென்னை

8. நடிகர் விஜய் சேதுபதி -கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி, சென்னை

9. நடிகை குஷ்பு – பட்டினம்பாக்கம், சென்னை

10. நடிகர் தனுஷ் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

11. நடிகர் சித்தார்த் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

12. இசையமைப்பாளர் அனிருத்- டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

13. நடிகை திரிஷா-டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

14. நடிகர் அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

15. நடிகர் சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர்- நுங்கம்பாக்கம் சென்னை

16. நடிகர் ரமேஷ் கண்ணா – சாலிகிராமம், சென்னை

17. நடிகர் ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம், சென்னை

18. நடிகர் ரோபோ ஷங்கர், காவேரி பள்ளி சாலிகிராமம், சென்னை

19. நடிகர் வடிவேலு- சாலிகிராமம், சென்னை

20. நடிகர் பிரபு மற்றும் விக்ரம் பிரபு குடும்பத்தினர் – தியாகராய நகர், சென்னை

21.நடிகர் சிம்பு & டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் – தியாகராய நகர் சென்னை

22. நடிகர் விஜய் ஆண்டனி – சாலிகிராமம், சென்னை

23. நடிகர் சிவகார்த்திகேயன் – வளசரவாக்கம், சென்னை

24. இசையமைப்பாளர் இளையராஜா – இந்து பிரச்சார சபா, தியாகராய நகர் சென்னை

25. நடிகை விந்தியா- HRNC, ஆயிரம் விளக்கு சென்னை

26. நடிகர் செந்தில் – சாலிகிராமம் சென்னை

27. நடிகர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்- தியாகராய நகர் சென்னை

28. நடிகர் ஆனந்தராஜ்- நுங்கம்பாக்கம் சென்னை

29. நடிகர் கவுண்டமணி- சாலிகிராமம் சென்னை

30. நடிகர் மன்சூர் அலிகான், நுங்கம்பாக்கம் சென்னை.

Here’s complete details about your favourite stars voting area

தேர்தல் 2021 : கை கழுவி மாஸ்க் க்ளவுஸ் அணிந்து வாக்களியுங்கள்..; கொரோனா பாதித்தவர்களுக்கு தனி நேரம்

தேர்தல் 2021 : கை கழுவி மாஸ்க் க்ளவுஸ் அணிந்து வாக்களியுங்கள்..; கொரோனா பாதித்தவர்களுக்கு தனி நேரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn election 2021 (1)நாளை ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதோ வாக்காளர்களுக்கான அறிவுரைகள்..

*1. ஏப்ரல் 6ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையுடன் முடிவடைகிறது.

2. வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை* எடுத்து செல்ல வேண்டும்.

(FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் வாக்காளர் அடையாள அட்டை)

(இல்லாதவர்கள் ஆதார் உட்பட 11 இதர அடையாள ஆவணங்கள்)

3.வாக்குப்பதிவின் போது வரிசையில் சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும்*

4. வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் *Hand Sanitizer* கொடுக்கப்பட்டு பின்பு *தெர்மோ மீட்டர்* கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.

பின்பு *ஒரு Gloves ( கை உறை) வழங்கப்படும்*. (வலது கைக்கு மட்டும்).

*உங்களது உடல் வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாக இருந்தாலும், கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்தாலும், treatment முடிந்து தனிமையில் இருந்தாலும் நீங்கள் தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில் வாக்குச் சாவடிக்கு சென்று தகுந்த கவச உடை அணிந்து (கவச உடை வாக்குச்சாவடி மையத்தில் Covid 19 தொற்று அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியே வழங்கப்படும்) ஓட்டு அளிக்கலாம்.

இந்த நேரம் Covid 19 அறிகுறி உள்ளவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

5.வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு நுழைவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள *வலது கை உறையை முழுமையாக அணிந்துகொண்டு* முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப் (அல்லது உங்களது பாகம் எண் வரிசை எண் விபரத்தை) மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு சென்று காண்பிக்க வேண்டும்.

உங்களுடைய அடையாளத்தை உறுதி செய்த பின்பு முதலாவது தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண்ணை உரத்த குரலில் கூறுவார். இதனை தேர்தல் முகவர்கள் உறுதி செய்த பிறகு … நீங்கள் இரண்டாவது தேர்தல் அலுவலரிடம் சென்று *17 A ரிஜிஸ்டரில் கையொப்பமிட்டு*, உங்களுடைய *இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை* வைக்க வேண்டும். பிறகு அவர் உங்களுக்கு ஓட்டளிக்க Voters Slip வழங்குவார்.

அதை பெற்றுக் கொண்டு 3வது தேர்தல் அலுவலர் இடம் சென்று அந்த Voters சிலிப்பை கொடுத்த பின்பு அவர் உங்களுக்கு Ballot யூனிட்டில் வாக்களிக்க அனுமதி வழங்குவார்.

நீங்கள் வாக்களிக்கும் இடத்திற்கு சென்று உங்களுடைய *கையுறை அணிந்த வலது கை விரல்களால்* உங்களுக்குரிய வேட்பாளர் பட்டனை அழுத்தி பீப் சத்தம் வருவதையும், வேட்பாளருக்கு அருகிலுள்ள சிகப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு *7 வினாடிகள்* காண்பிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம்.

பிறகு வாக்குசாவடி மையத்தின் வெளியே நீங்கள் அணிந்துள்ள *வலது கையுறையை கழட்டி அதற்குரிய பிளாஸ்டிக் குப்பை பையில் போட்டுவிட்டு* வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற வேண்டும்.

*வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத்தவிர மற்றவர்கள் (வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும்) கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது*.

அனைவரும் வாக்களிப்போம்…. இந்திய ஜனநாயகத்தை காப்போம்..!

#ஜெய்ஹிந்த்

Election commission announces guidelines for voters in TN

மோடி படத்துடன் 150 தங்க நாணயம் & பணம் பறிமுதல்..; காரைக்காலில் பாஜக வேட்பாளரின் தில்லு முல்லு அம்பலம்

மோடி படத்துடன் 150 தங்க நாணயம் & பணம் பறிமுதல்..; காரைக்காலில் பாஜக வேட்பாளரின் தில்லு முல்லு அம்பலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை போலவே புதுச்சேரி மாநிலத்திலும் நாளை மறுநாள் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகள் உள்ளது. அதாவது காரைக்கால் வடக்கு.. காரைக்கால் தெற்கு… நிரவி திரு பட்டினம்… திருநள்ளாறு… நெடுங்காடு (தனி) என 5 உள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜி.என்.எஸ். ராஜசேகரன் போட்டியிடுகிறார்.

என்.ஆர்.காங்கிரஸ் (ஜக்கு சின்னம்) கூட்டணியில் சீட்டு கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சரான சிவா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இவர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் போட்டியிடுகிறார்.

இவர்களுடன் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட தருபாரனியம் என்பவர் கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது வேறுகதை.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மோடி படம் போட்ட கவரில் தங்க காயின், இரண்டாயிரம் பணம் என 32000 வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளார்.

இது தேர்தல் பறக்கும்படைக்கு தெரிய வந்துள்ள நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த 95 ஆயிரம் பணத்தையும், 150 தங்க காயினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜி.என்.எஸ்.ராஜசேகரன் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்தவர் கிடையாது. அவர் நெடுங்காடு தொகுதி.

அமித்ஷா காரைக்கால் வந்தபோது இவரை பிஜேபி சார்பில் போட்டியிட ஆணையிட்டதாக கூறப்படுகிறது.

ராஜசேகரன் சாதாரண ஆளில்லை. அவர் இங்குள்ள பல ஒயின்ஷாப்புகளை நடத்துகிறார்.

அவரிடம் இல்லாத பணமே இல்லை. புதுவை அரசுக்கு பல ஆண்டுகளுக்கு பட்ஜெட் போடும் (5000 ரூ கோடி சொத்து) அளவுக்கு அவரிடம் சொத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Election flying squad seized 150 gold coins and cash at Karaikal

Karaikal District Thirunallar Constituency election news updates

More Articles
Follows