4வது முறையாக இணையும் சுந்தர் & விஷால் கூட்டணி

vishal sundar c‘துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதால் அந்த படத்தை நடிகர் விஷாலே நடித்து இயக்கி தயாரிக்கவுள்ளார்.

மேலும் எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் ‘சக்ரா’ படத்திலும் விஷால் நடிக்கிறார்.

இதில் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்க, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா காஸண்ட்ரா ஆகிய 2 நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இதனிடையில் முத்தையா இயக்கும் படத்திலும் விஷால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இந்த நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஷால்.

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’, ‘ஆக்‌ஷன்’ ஆகிய மூன்று படங்கள் உருவாயின.

இதில் ‘மதகஜராஜா’ படம் பண பிரச்சினையால் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது நான்காவது முறையாக இணைகிறார்கள்.

சுந்தர்.சி தற்போது ‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Related News

Latest Post