ஆன்லைன் வர்த்தக மோசடிகளுக்கு ஆப்பு வைக்கும் விஷால்; விரைவில் ‘சக்ரா’ டீஸர்

ஆன்லைன் வர்த்தக மோசடிகளுக்கு ஆப்பு வைக்கும் விஷால்; விரைவில் ‘சக்ரா’ டீஸர்

chakra teaserவிஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகிவருகிரது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது.

முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும்.

இப்போது படத்தின் டீஸர்
விரைவில் வெளியாக இருக்கிறது.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன். இவர், இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

‘சக்ரா ‘ – ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.
இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.

படத்தின் டீஸர் விரைவில் வெளிவரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *