தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது நம் திரைக் கலைஞர்களுக்கு பிடித்தமான ஒன்று தான்.
ஆனால் இது போன்ற வாழ்க்கை படங்கள் முன்பெல்லாம் அந்த குறிப்பிட்ட பிரபலங்கள் மறைந்த பின்னரே உருவாகும்.
சமீபகாலமாக சச்சின், தோனி், மோடி ஆகியோரது படங்கள் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே உருவானது.
தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் ஹிந்தியில் தயாராகிறது.
இந்த படத்தை வங்காள மொழி இயக்குனர் மிலன் பவுமிக் இயக்க ‘ஏக் அவுர் நரேன்’ என்று பெயரிப்பட்டுள்ளனர்.
இவர் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயாவின் வாழ்க்கை கதையை படமாக எடுத்தவர்.
இதில் மோடி வேடத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் என்பவர் நடிக்கிறாராம்.
இந்த ‘ஏக் அவுர் நரேன்’ படத்தை இரண்டு பாகங்களாக பாகுபலி & கேஜிஎஃப் பாணியில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Another biopic on PM Narendra Modi is titled Ek Aur Naren