ரெஜினா, ஸ்ரத்தா, சிருஷ்டி.. விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

ரெஜினா, ஸ்ரத்தா, சிருஷ்டி.. விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஆக்சன் படத்தை தொடர்ந்து சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் என்பவர் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே என மூன்று நாயகிகள் நடிக்கிறார்களாம்.

காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

கொசு மருந்து மெஷினுக்கும் நன்றி சொன்ன கைதி டைரக்டர்

கொசு மருந்து மெஷினுக்கும் நன்றி சொன்ன கைதி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaithi stillsலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசானது.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த இந்த படத்தில் நாயகி மற்றும் பாடல்கள் இல்லை என்றாலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் 25 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களுக்கு இயக்குனர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

கைதி வெற்றிகரமாக 25வது நாள்

இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி

அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி என கூறியுள்ளார்.

கைதி படம் க்ளைமாக்ஸில் மெஷின் கன் பைட் ஒன்று இருக்கும். அதுதான் கொசு மருந்து அடிக்கும் மெஷின் போல….

வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய்சேதுபதி & விவேக் கூட்டணி

வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய்சேதுபதி & விவேக் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivekவிஜய்சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை வெங்கட கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விவேக்கும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்.

விஜய்சேதுபதியுடன் விவேக் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

ராஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’.

இதில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.

டிவிவி தானய்யா என்பவர் சுமார் ரூ. 350 கோடியில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

முக்கிய கேரக்டரில் அஜய்தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்களான ரே ஸ்டீவென்சன்னும், அலிசன்டூட்டியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

மேலும் ஹாலிவுட் நடிகை ஓலிவா மோரிஸ், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

EJz3WWCVAAI0a9H

EJz60ghU4AAjKLo

EJzz7sWVAAEf2yA

தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..; சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினி பேச்சு

தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..; சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth at IFFIகோவாவில் தொடங்கிய 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் கலைச் சேவையை பாராட்டி அவருக்கு ‛கோல்டன் ஐகான் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த விருதை சில நாட்களுக்கு முன்ர் அறிவித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த விருதை நடிகர் அமிதாப்பச்சன் நேற்று ரஜினிக்கு கோவாவில் வழங்கினார்.

விருதை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில்,

‛‛இந்த விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இதை அளித்த இந்திய அரசிற்கு நன்றி. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என பேசினார்.

*ஆண்கள் தினத்தில் ‘ரியல் ஹீரோ’ விருது பெற்ற நடிகர் அபி சரவணன்*

*ஆண்கள் தினத்தில் ‘ரியல் ஹீரோ’ விருது பெற்ற நடிகர் அபி சரவணன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor abi saravananமதுரையை சேர்ந்த ‘வுமன் ப்ரொபசனல் கனெக்ட்’ என்ற பெண்கள் அமைப்பு மதுரையில் இருந்து சாதனை படைத்த ஐம்பது ஆண்களை தேர்தெடுத்து உலக ஆண்கள் தினத்தன்று விருது வழங்கினார்கள்.

சினிமா நடிகரும் சமூக சேவகருமான டாக்டர் நடிகர் அபிசரவணன் அவர்ளுக்கு ‘ரியல் ஹீரோ’ எனும் விருது வழங்கப்பட்து… தொலைக்காட்சியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் , நாட்டுப்புற பாடகர் மதிச்சியம் பாலா உட்பட ஐம்பது சாதனை ஆண்கள் இந்த விருதை பெறறுக்கொண்டனர்.

விருது விழா முடிந்த கையோடு நேரடியாக பரவை சென்ற அபிசரவணன் பரவை முனியம்மாவை சந்தித்து விருததை வழங்கி ஆசி பெற்றார்…

பரவை முனியம்மா மிகுநத உற்சாகத்துடன் “நடிக்க தயாராக இருப்பதாகவும், அபி சரவணனுடன் நடிக்க வேண்டும்” என்றும் ஆவலை வெளிப்படுத்தியதாக அபி சரவணன் தெரிவித்தார்.

More Articles
Follows