4 மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’.. ட்ரைலரை வெளியிடும் 4 மொழி நட்சத்திரங்கள்

4 மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’.. ட்ரைலரை வெளியிடும் 4 மொழி நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra trailerமுதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் ‘சக்ரா’ . நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும் படத்தின் ட்ரெய்லர் !

விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை தென்னகத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பிரபல நடிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால்,கன்னடத்தில் யஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாக இருக்கிறது.இதற்கு முன் வெளியான ‘சக்ரா’வின் க்ளிம்ப்ஸ் என்கிற குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.இந்த குறு முன்னோட்டத்தை பார்த்தவர்கள் இது இரும்புத்திரை படம் போல் இருக்குமா? இது ‘இரும்புத்திரை 2ஆம் பாகமா? என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறும்போது ‘
“சைபர் க்ரைம் பற்றிய படம்தான் “சக்ரா”வும் என்றாலும் இரும்புத்திரைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் இருக்காது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சி கூட வேறெந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படிப் புதிய தளத்தில் காட்சிகள் இருக்கும். இதில் கதாநாயகன் விஷால் தான் என்றாலும் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் உங்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கும். ஆனால் அவை வழக்கம் போல் இருக்காது. ஒரு வினாடி கூட பார்வையாளர்கள் கவனம் தவற விட முடியாத அளவுக்கு அவர்களை இருக்கையின் நுனியில் கட்டிப் போடும் படமாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் .” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர்.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்கும் எம்.எஸ். ஆனந்தன் ,
இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பின்னணியுள்ள கதையாக “சக்ரா” உருவாகி வருகிறது. வங்கிக் கொள்ளையர்களை விட சைபர் ஹேக்கர்ஸ் என்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை விளங்க வைக்கும் கதை.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.
இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன்.

ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.!

முதன்முறையாக பெட்ரோல் விலையை ஓவர் டேக் செய்த டீசல்.!; என்ன சார் நடக்குது நாட்டுல..?!

முதன்முறையாக பெட்ரோல் விலையை ஓவர் டேக் செய்த டீசல்.!; என்ன சார் நடக்குது நாட்டுல..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

diesel priceஇந்தியாவின் தலைநகர் டெல்லி.

இங்கு பல அரசியல் அதிரடி நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது. அது பழகி போன ஒன்று.

ஆனால் தற்போது டில்லியில் முதல் முறையாக, டீசல் விலை பெட்ரோலை விட அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 18வது நாளாக டெல்லியில் டீசல் விலை 48 காசுகள் உயர்த்தப்பட்டதால், லிட்டர் 79.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்படாததால், லிட்டர் 79.76 ரூபாயாக இருந்தது.

இதன் மூலம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனையானது.

பெட்ரோல் இன்ஜின் கார்களை விட டீசல் இன்ஜின் கார்கள் அதிக மைலேஜ் தரும்.. பராமரிப்பு செலவும் குறைவு..
ஆயுட் காலமும் அதிகமாக இருக்கும்.

அத்துடன் பெட்ரோல் விலையை காட்டிலும் டீசல் விலை எப்போதும் மிக குறைவாக இருக்கும்.

ஆனால் இந்த அதிரடி டீசல் விலை உயர்வால் டீசல் கார் ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜெயராஜ் & பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் + ஒருவருக்கு அரசு வேலை..; முதல்வர் அறிவிப்பு

ஜெயராஜ் & பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் + ஒருவருக்கு அரசு வேலை..; முதல்வர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 TN CM assures action against cops for death of father son duo சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் & அவரது பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையாக அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் பேரிலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கவுள்ள உத்தரவின்படியும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் உயிரிழந்த ஜெயராஜ் & பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

TN CM assures action against cops for death of father son duo

பழைய படங்களுக்கு நியூ லுக்; கமல் பாராட்டில் டிசைனர் கோபி பிரசன்னா

பழைய படங்களுக்கு நியூ லுக்; கமல் பாராட்டில் டிசைனர் கோபி பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Publicity Designer Gopi Prasannaas innovative posters to old moviesநடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் உட்பட பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்த சில கடந்த காலப் படங்களின் விளம்பர டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

வேறு விதத்தில் சொல்வதென்றால் அரிதான முத்தாக அமைந்த சில தமிழ் படங்களின் விளம்பர வடிவமைப்பை தன் ஆக்கப்பூர்வ திறனால் மேலும் அழகு படுத்தியிருக்கிறார் கோபி பிரசன்னா என்று கூறலாம்.

இது குறித்து விவரி்த்த கோபி பிரசன்னா “பழைய படங்களுக்கு டிசைன் செய்யும் பணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனின் ‘ராஜ பார்வை’ படத்திலிருந்து தொடங்கியது.

கமல் சாரிடமிருந்து இதற்குக் கிடைத்த பாராட்டு, மறக்க முடியாத தருணமாக எனக்கு அமைந்ததுடன் மேலும் இது போன்ற படங்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் சிறுகச் சிறுக என்னுள் விதைத்தது.

சற்று அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்ட இந்தப் பணிகள், உலகளாவிய நெருக்கடி பரவிய காலம்வரை நீடித்தது.

ஆரம்பகால நாட்கள் ஆர்வத்தைத் தந்தாலும், சில வாரங்களுக்குப் பின் நெருக்கடி தந்த இந்த எதிர்மறை நிலையிலிருந்து வெளிவர தீவிரமாக முயன்றேன்.

இதன் பிறகு நாளொன்றுக்கு இரண்டு மூன்று போஸ்டர்கள் வீதம், உருவாக்கி பத்து படங்கள்வரை முடித்தேன். நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும் சாதகமான சூழ்நிலையை இது உருவாக்கவே, திரைப்பட இயக்குநர்களும், திரைத்துறையில் உள்ள நண்பர்களும் என்னை வாழ்த்தினார்கள்” என்றார்.

கடந்த காலப் படங்களுக்குப் பணியாற்றுவது குறித்து விவரித்த கோபி பிரசன்னா, “180கள் மற்றும் 1990களின் துவக்கம்வரை கைகளிலேயே டிசைன்கள் உருவாக்கும் பணி நடைபெற்றது.

மென் பொருள் இன்றி, சிற்பி செதுக்குவதைப்போல், கத்தரிக்கோலை கவனத்துடன் பயன்படுத்தி படங்களை வெட்டியெடுத்து நமது ஆக்கப்பூர்வமான திறமையைக் கொண்டு சுவரொட்டிகள் மட்டும் விளம்பரப் பதாகைகளை வடிவமைக்க வேண்டும்.

எனவே நான் தற்கால தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஏன் புதுமையாகப் படைக்கக்கூடாது என எண்ணினேன். ஒவ்வொரு படத்துக்கும் ஓர் ஆன்மா உண்டு. அதை நான் விளம்பர வடிவமைப்பு மூலம் வெளிக்கொணர முயல்கிறேன்.

உதாரணமாக ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் ரஜினி சாரின் முரட்டுத்தனமிக்க காளி கதாபாத்திரத்தால் கட்டமைக்கப்பட்டது. எனவே நான் குறிப்பிட்ட வடிவமைப்பிலும் வண்ணங்களிலும் இதை செய்திருந்தேன்.

தற்போதைய தலைமுறை ரசிகர்களும் இதை புரிந்து கொண்டு பாராட்டுவதுடன் படத்தைப் பார்க்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார் கோபி பிரசன்னா.

Publicity Designer Gopi Prasannaas innovative posters to old movies

Publicity Designer Gopi Prasannaas innovative posters to old movies

அறம் 2 படத்தில் நயன்தாரா இடத்தில் கீர்த்தி?..கோபி நயினார் விளக்கம்

அறம் 2 படத்தில் நயன்தாரா இடத்தில் கீர்த்தி?..கோபி நயினார் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh Will Not Feature In Aramm 2 says Director Gopi Nainarகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் ‘அறம்’.

கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் வெளியாகி படம் சூப்பர் ஹிட்டானது.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை காப்பாற்றும் மதிவதனி ஐ.ஏ.எஸ். ஆக நடித்திருந்தார் நயன்தாரா.

அவரின் நடிப்பை அனைவரும் பாராட்டி இருந்தனர்.

இதன் பின்னர் 2ஆம் பாகத்தை இயக்க முடிவு செய்திருந்தார் டைரக்டர் கோபி நயினார்.

ஆனால் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டாராம்.

இந்த நிலையில் அறம் 2 படத்தில் கலெக்டராக நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியாத தகவல்கள் வந்தன.

கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என கோபி நயினார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது கீர்த்தி வசம் 2 படங்களே கை வசம் உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த & பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் சர்கார் வாரி பாட்டா ஆகிய 2 படங்களில் நடிக்க உள்ளார் கீர்த்தி.

Keerthy Suresh Will Not Feature In Aramm 2 says Director Gopi Nainar

மாவட்ட எல்லைகள் மூடல்.; பஸ் கார் பைக் தடை; இ-பாஸ் கட்டாயம்… : தமிழக முதல்வர்

மாவட்ட எல்லைகள் மூடல்.; பஸ் கார் பைக் தடை; இ-பாஸ் கட்டாயம்… : தமிழக முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN CM announces new rules in Corona lock down extension 6தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் என்ன என்ன நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தற்போதைய 6ஆம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் ஆலோசனைக்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது…

“நாளை ஜூன் 25 முதல் 30 ஆம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லையும் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

இந்நாட்களில் அனைத்தவிதமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது.

கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்துக்கும் தடை.

அவசர தேவைக்கு மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம்” என உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.

TN CM announces new rules in Corona lock down extension 6

More Articles
Follows