தியேட்டர் ஓனர்களை ப்ளாக் மெயில் செய்கிறதா ‘மாஸ்டர்’ டீம்..? விஷால் கார்த்தி தனுஷ் என்ன செய்வார்கள்..?

masterவிஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘மாஸ்டர்’.

ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய இந்த படம் கிட்டதட்ட 10 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் உள்ளது.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 100% பார்வையாளர்களை தியேட்டரில் அரசு அனுமதிக்கவில்லை.தற்போது வரை 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது.

இதனால் தியேட்டர்களில் பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

மற்ற படங்களுக்கும் குறைவான கூட்டமே வருகிறது.

மாஸ்டர் போல பெரிய படங்கள் தியேட்டர்களில் கூட்டம் கூடும் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ட்விட்டரில் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள்.: ரஜினி லாஸ்ட்.. விஜய் பர்ஸ்ட்… அஜித் 3.. சூர்யா 5..

இதனால் இதனை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியானால் மட்டுமே முதலீட்டு தொகையை அள்ள வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர் நினைக்கிறார்.

ஆனால் இதற்கு எப்படி ஒத்துழைக்க முடியும்? என தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பதில் உள்ளனர்.

பொங்கல் சமயத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’, விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ ஆகிய படங்களும் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

மாஸ்டர் படத்திற்கு மட்டுமே வழிவிட்டால் மற்ற தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்துவிட்டால் நமக்கு அடுத்தடுக்க இழப்புகள் ஏற்படும் என்பதால் குழப்பம் நீடிக்கிறதாம்.

ஒருவேளை பொங்கல் தினத்திற்குள் 100% பார்வையாளர்களை அரசு அனுமதித்தால் மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Do Master team blackmail theatre owners?

Overall Rating : Not available

Latest Post