தியேட்டரை விட்டு ஓடும் ‘சக்ரா’..; தயாரிப்பாளர்கள் மீது செம கடுப்பில் தியேட்டர் உரிமையாளர்கள்

Chakra Vishal (2)2021 பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் & ஈஸ்வரன் ஆகிய படங்கள் தியேட்டர்களில் ரிலீசானது.

கொரோனா பயத்தை கடந்தும் இந்த படத்தை மக்கள் தியேட்டரில் பார்த்தனர்.

அதன் பின்னர் தியேட்டர்களுக்கு போதுமான கூட்டம் வரவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம்.. பட ரிலீசின் போது போதுமான விளம்பரங்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் ‘சக்ரா’ மற்றும் ‘கமலி From நடுக்காவேரி’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானது.

கமலிக்கு கிடைத்த புரோமோசன் அளவில் சிறியளவில் கூட ‘சக்ரா’ வுக்கு செய்யவில்லை என தியேட்டர் உரிமையாளர்களே தெரிவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

‘சக்ரா’ படத்திற்கு பிரஸ்மீட் எதுவும் நடக்கவில்லை. இரண்டு முறை நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டனர்.

இதனால் விஷால் படம் வெளியானது கூட பலருக்கும் தெரியவில்லை என தியேட்டர் உரிமையாளர்களே வருத்தப்படுகின்றனர்.

ஒருவேளை பிரஸ்மீட் நடைபெற்று இருந்தால் நாளிதழ்கள், வார இதழ்கள், டிவிக்கள், இணையதளங்களில் அது பற்றிய பேச்சு இருந்திருக்கும்.

மக்களும் அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்திருப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Theatre owners blames Chakra producers

Overall Rating : Not available

Related News

‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள்…
...Read More

Latest Post