மாரி செல்வராஜ் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை.; புது கூட்டணியில் இணையும் புது எம்எல்ஏ

மாரி செல்வராஜ் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை.; புது கூட்டணியில் இணையும் புது எம்எல்ஏ

mari selvaraj ar rahman‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு தன்னுடைய ‘கர்ணன்’ பட வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்கினார் தனுஷ்.

‘கர்ணன்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக, நடிகர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்து இருந்தார்.

தனுஷின் கால்ஷீட் டைரி 2 ஆண்டுகளுக்கு பிஸியாக இருப்பதால் மாரி செல்வராஜ் வேறு ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார். இவர் எம்எல்ஏ ஆன பிறகு ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான்.

(கர்ணன் பட வெற்றிக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

இதற்கு முன்பே துருவ் விக்ரமை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

மாரி & உதயநிதி இணையும் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘பரியேறும் பெருமாள்’ & ‘கர்ணன்’ ஆகிய இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படம் இது.

இரு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஹாட்ரிக் வெற்றி அடிப்பார் மாரி என நம்பலாம். காத்திருப்போம்..

கூடுதல் தகவல்.. : மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படம், மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’, அருண்ராஜா இயக்கத்தில் ‘ஆர்டிகள் 15’ ஹிந்தி ரீமேக் ஆகிய படங்கள் உதயநிதி கைவசம் உள்ளன.

AR Rahman to score music for Mari Selvaraj’s next

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *